என் மலர்
நீங்கள் தேடியது "extortion"
- ஏ.டி.எம். கார்டை பிடுங்கி அதில் இருந்து 35 ஆயிரம் பணத்தை திருநங்கை எடுத்து கொண்டார்.
- விசாரணை முடிவில் திருநங்கை கைது செய்யபடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
சேலம்:
சென்னையில் இருந்து 45 வயதுடைய தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் நேற்றிரவு சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் குடிபோதையில் இருந்த நிலையில் பஸ் நிலையத்தின் முன் பகுதியில் வந்த போது திருநங்கை ஒருவர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.
தொடர்ந்து 2 பேரும் ஆட்டோவில் சேலம் 5 ரோடு பகுதிக்கு சென்றனர். பின்னர் திருநங்கை அந்த நபரிடம் பணம் கேட்டார். ஆனால் அந்த நபர் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை பிடுங்கி அதில் இருந்து 35 ஆயிரம் பணத்தை திருநங்கை எடுத்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் திருநங்கை கைது செய்யபடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
- 2பேர் திடீரென செல்வி வைத்திருந்த பணப்பையை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
- சம்பவம் குறித்து கே.கே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை, எம்.ஜி.ஆர் நகர், அடுத்த நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி செல்வி (50).அதே பகுதியில் வீட்டு வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை அடமானம் வைத்திருந்த நகையை திரும்புவதற்காக கே.கே நகர் வேம்புலி அம்மன் கோவில் தெரு வழியாக ரூ.33 ஆயிரத்தை கைப்பையில் வைத்துக்கொண்டு நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2பேர் திடீரென செல்வி வைத்திருந்த பணப்பையை பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கே.கே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அஸ்வின்குமாருக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர்.
- 1 லட்சம் ரொக்க பணம் திருடு போய் இருந்தது தெரியவந்தது.
கடலூர்:
பண்ருட்டி எல்.என்.புரம் குமரன் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி புஷ்பலதா (வயது 51). இவர்களின் 2-வது மகன் அஸ்வின்குமாருக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர். இதனால் வருகிற 17-ம்தேதி நடைபெற உள்ள மகன் திருமணத்திற்கு உறவினர்கள் வீட்டிற்கு பத்திரிகை வைப்பதற்கு 2 நாட்களாக வீட்டிலிருந்து வெளியில் சென்றதாக தெரிகிறது.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு ரவிச்சந்திரன் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டினுள் இருந்த பீரோவில் நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றனர். பின்னர் வீட்டிற்கு வந்த ரவிச்சந்திரன் மற்றும் இவரது மனைவி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள், 1 லட்சம் ரொக்க பணம் திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரவிச்சந்திரன் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் திருட்டு நடந்த வீட்டிற்கு வந்து பார்வையிட்டு வழக்குபதிவு செய்து பீரோவை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- 3 வாலிபர்கள் அரிவாளை எடுத்து மிரட்டி சுரேஷிடம் இருந்த ரூ.1,000 பணத்தை பறித்தனர்.
- போலீசார் 17 வயது கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
கோவை,
புதுக்கோட்டை மாவட்டம் கணபதிபுரம் அருகே உள்ள மீனாம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 29). லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் லாரியில் மணலை ஏற்றிக் கொண்டு விளாங்குறிச்சியில் இருந்து கோவைக்கு வந்தார்.
லாரி வெள்ளலூர் மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் லாரியை வழிமறித்து நிறுத்தினர்.
பின்னர் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து மிரட்டி சுரேஷிடம் இருந்த ரூ.1,000 பணத்தை பறித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அங்கு இருந்த லாரி டிரைவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்களை போத்தனூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வெள்ளலூரை சேர்ந்த மெக்கானிக் தீபக் என்ற விவேக் (27),ரா மநாதபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் முத்தரசு (19), கணேசபுரத்தை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் கல்லூரி மாணவர் மெக்கானிக் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 17 வயது கல்லூரி மாணவரை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
- சுரேஷ் குமார் ரெயிலடியில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார்.
- சுரேஷ்குமார் பொதுமக்கள் உதவியுடன் வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் ( வயது 49). சம்பவத்தன்று இவர் ரெயிலடியில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவரை ஒரு வாலிபர் வழிமறித்து நிறுத்தி ரூ.500 பணத்தைப் பறித்து தப்பி ஓட முயன்றார்.
அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார் பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பணம் பறித்தவர் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த காளிதாஸ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து காளிதாசை போலீசார் கைது செய்தனர்.
- காரியாபட்டி அருகே கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி பொக்லைன் எந்திரத்துக்கு தீவைக்கப்பட்டது.
- இது தொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மேலகல்லங்குளம் கிராமத்தில் பிரதீப் என்பவருக்கு சொந்தமாக கல்குவாரி உள்ளது. இங்கு மதுரை மாவட்டம் சக்குடி வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்தமுருகன்(40) என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில வாரங்களாக அதே பகுதியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், கடம்ப வனம், அய்யனார் என்ற கோசி மணி உள்பட 4 பேர் வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் ஆனந்தமுருகன் பணம் தரமுடியாது என கண்டிப்புடன் தெரிவித்தார்.
தொடர்ந்து 4 பேர் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர். சம்பவத்தன்று கல்கு வாரிக்கு வந்த அவர்கள் ஆனந்த முருகனிடம் தகராறு செய்து பணம் கொடுக்கவில்லை என்றால் பெட்ரோல் குண்டு வீசுவோம் என மிரட்டிய தோடு அங்கு நிறுத்தியிருந்த 2 பொக்லைன் எந்திரத்துக்கு தீவைத்தனர். மேலும் ரூ.22 ஆயிரம் பணத்தையும் அபகரித்து கொண்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாட்சிசுந்தரம், கடம்ப வனம், அய்யனார் என்ற கோசி மணி உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெட்டிக்கடை முதல் தொழிற்சாலை நடத்துபவர்களிடம் சமூகவிரோதிகள் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடும் சம்பவம் அதிகரித்துள்ளது.இதனால் வியாபாரிகள் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.
தினமும் ரவுடிகளுக்கு கப்பம் கட்டும் நிலை உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரமேஷ் (39). இவர் கார் மற்றும் லாரி பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
- அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி 2 பவுன் தங்க செயின், ரூ.450-ஐ பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.
சேலம்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாரசிராம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (39). இவர் கார் மற்றும் லாரி பட்டறை வைத்து நடத்தி வருகிறார். ேநற்று முன்தினம் இரவு சேலம் டவுன் தாதுபாய்குட்டை அருகே உள்ள ஒரு ஓட்டலில் தன் நண்பர்கள் அண்ணாதுரை, சுரேஷூடன் சாப்பிட சென்றார்.
அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி 2 பவுன் தங்க செயின், ரூ.450-ஐ பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.
பூ வியாபாரி
இதேபோல், சேலம் பொன்னம்மாபேட்ைட வாசக சாலை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (42). பூ வியாபாரியான இவர் நேற்று முன்தினம் இரவு சேலம் பழைய நிலையம் அண்ணா சிலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்து தாக்கிய 3 வாலிபர்கள், அவரிடம் இருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டனர்.
இந்த 2 சம்பவங்கள் குறித்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பழனியம்மான் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சேலம் கிச்சிப்பாளையம் களரம்பட்டி மெயின்ரோடு காந்தி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜா மகன் ரவிக்குமார் என்கிற போலீஸ் ரவி (32), கோவிந்த சாமி நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33), கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த பிரசாத் (25) ஆகியோரை கைது செய்து பணம், நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
- மூர்த்தியிடம் ரூ.500 பணத்தை பறித்து மிரட்டி சென்றனர்.
- மூர்த்தி சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சரவணம்பட்டி,
கோவை கணபதி ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி(51). இவர் சத்தி-விளாங்குறிச்சி ரோட்டில் டிபன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம்போல வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி மூர்த்தியிடம் ரூ.500 பணத்தை பறித்து மிரட்டி சென்றனர்.
இதுகுறித்து அவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், டிபன் கடைக்காரரிடம் கத்தி முனையில் பணம் பறித்தது கணபதி மோர் மார்க்கெட்டை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ்(18), 16 மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.
- மின்சார ரெயிலில் ஊனமுற்றோருக்கான பெட்டியில் பயணம் செய்தார்.
- ஜீவானந்தத்திடம் கத்திமுனையில் பணம்கேட்டு மிரட்டினர்.
தாம்பரம்:
சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். (40). இவர், நேற்று காலில் சிகிச்சை பெறுவதற்காக ஒமந்தூரார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவற்காக சென்ட்ரலில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரெயிலில் ஊனமுற்றோருக்கான பெட்டியில் பயணம் செய்தார்.
தாம்பரம் சானட்டோரியம் அருகே ரெயிலில் ஏறிய 4 மர்ம நபர்கள் ஜீவானந்தத்திடம் கத்திமுனையில் பணம்கேட்டு மிரட்டினர். அவர் பணம் இல்லை என்று கூறியதால் கூகுள் பே மூலம் ரூ.1400 பெற்றனர். பின்னர் தாம்பரம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் மெதுவாக சென்றபோது கொள்ளையர்கள் 4 பேரும் குதித்து தப்பி சென்றுவிட்டனர்.
- இளம்பெண்ணை கடத்தி சென்று செக்ஸ் டார்ச்சர் செய்து பணம் பறிக்கப்பட்டது.
- 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை
மதுரை கரிமேடு மோதிலால் மெயின் ரோடு தெற்கு மடத்தை சேர்ந்தவர் கண்ணன் என்ற மண்எண்ணை கண்ணன் (வயது44). இவர் இளம்பெண் ஒருவருக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவரிடம் அடிக்கடி பணம் கேட்டும் மிரட்டி வந்துள்ளார்.இதற்கு சிலர் உடந்தையாகவும் இருந்து வந்தனர். இந்த நிலையில் கண்ணன், அவரது மனைவி பிரேமா, உறவினர்கள் செல்வி, பாலா, காதர், அருள், மணி சங்கையா ஆகிய 7 பேரும் அந்த பெண்ணை கடத்திச்சென்று அவரிடம் இருந்து ரூ. 6 ஆயிரத்து 500-யை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கடத்தி பணம் பறித்த 7 பேரையும் கைது செய்தனர்.