ரியல் எஸ்டேட் அதிபரிடம் செயின், பணம் பறிப்பு

அண்ணாதுரை (வயது 52). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து, தாக்கி அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.700 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
ரியல் எஸ்டேட் அதிபரிடம் செயின், பணம் பறிப்பு
Published on

அன்னதானப்பட்டி:

சேலம் மணியனூர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 52). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் சீலநாயக்கன்பட்டி, வேலுநகர் பிரிவு ரோடு அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சில நபர்கள் அண்ணாதுரையை திடீரென வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து, தாக்கி அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.700 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் வீரன் மற்றும் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட தாதகாப்பட்டி தாகூர் தெரு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜடேஜா என்கிற தியாகராஜன் (32), சந்தியூர் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த குரு என்கிற குப்பன் தாஸ் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிமிருந்து செயின், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com