புதையல் எடுத்துத் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.1 லட்சம் பணம் பறிப்பு

வாழப்பாடி அடுத்த கீரப்பட்டி மலை கிராமத்தில் கடந்த 2022 டிசம்பர் 29-ந் தேதி விவசாயி வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் ஒரு மந்திரவாதி என்றும், உங்கள் வீட்டில் புதையல் இருப்பதாகவும், புதையலை எடுத்து கொடுப்பதற்கு, ரூ.1 லட்சம் செலவாகுமென கூறியுள்ளார். பழனியம்மாள் இந்த போலி மந்திரவாதியிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், புதையலை எடுத்துக் கொடுக்கமால் அந்த மர்ம நபர் தலைமறைவானார்.
கைது செய்யப்பட்ட போலி மந்திரவாதி செல்வராஜ்.
கைது செய்யப்பட்ட போலி மந்திரவாதி செல்வராஜ்.
Published on

வாழப்பாடி:

வாழப்பாடி அடுத்த கீரப்பட்டி மலை கிரா மத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 42). கடந்த 2022 டிசம்பர் 29-ந் தேதி இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் ஒரு மந்திரவாதி என்றும், உங்கள் வீட்டில் புதையல் இருப்பதாகவும், அந்த பொருளை எடுக்காமல் விட்டால், உங்களது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுமெனவும், புதையலை எடுத்து கொடுப்பதற்கு, ரூ.1 லட்சம் செலவாகுமென கூறியுள்ளார்.

இதனால் பதறிப்போன பழனியம்மாள் இந்த போலி மந்திரவாதியிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், புதையலை எடுத்துக் கொடுக்கமால் அந்த மர்ம நபர் தலைமறைவானார்.

இது குறித்து பழனி யம்மாள் வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தியதில் புதையல் எடுத்துக் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றியது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்த போலி மந்திரவாதி செல்வராஜ் (41) என்பவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து ேபாலீசார், அவரை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com