கடன் தொல்லையால் இறைச்சி கடைக்காரர் தற்கொலை

கடந்த சில மாதங்களாக சம்சுதீன் கடன் தொல்லையால் மன உளைச்சல்.போலீசார் கடையை திறந்து பார்த்தபோது அங்கு சம்சுதீன் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.
கடன் தொல்லையால் இறைச்சி கடைக்காரர் தற்கொலை
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி அவுரி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 52).

இவர் திருமருகல் சீராக்குளம் தெருவில் இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக சம்சுதீன் கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை கடை வெகு நேரமாகியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் கடையை திறந்து பார்த்தபோது அங்கு சம்சுதீன் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.

உடன் போலீசார் சம்சுதீன் உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com