search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகள் காப்பகம்"

    • சிறார்களை காப்பக ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் அடித்து கொடுமை படுத்துவதாக புகார்கள் எழுந்தன.
    • 4 வயது குழந்தையை 2 நாள் உணவு கொடுக்காமல் குளியலறையில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

    மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் தனியார் அறக்கட்டளை நடத்தும் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த குழந்தைகள் காப்பகத்தை வாத்ஸல்யபுரம் ஜெயின் டிரஸ்ட் அமைப்பினர் நடத்தி வந்தனர். அங்கு தங்கி இருக்கும் சிறார்களை காப்பக ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் அடித்து கொடுமை படுத்துவதாக புகார்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து குழந்தைகள் நலக்குழுவினர் மற்றும் காவல் துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசாரணை அதிகாரி, "இங்கு தங்கியுள்ள சிறுவர்களை நிர்வாகிகள் அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள். சிறிய தவறு செய்தாலும் தலைகீழாக தொங்கவிடுதல், இரும்பு கம்பியால் சூடு போடுதல், கட்டி வைத்து அடித்தல், அடுப்பில் காய்ந்த மிளகாயை போட்டு நுகர்ந்து பார்க்க வைத்தல், உள்ளிட்ட பல கொடுமைகளை இங்குள்ள சிறுவர்கள் அனுபவித்து வந்துள்ளனர். 4 வயது குழந்தையை 2 நாள் உணவு கொடுக்காமல் குளியலறையில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காப்பக ஊழியர்கள் 5 பேர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளோம்" எனக் கூறினார்.

    இதுகுறித்து இந்தூர் கூடுதல்போலீஸ் கமிஷனர் அமரேந்திரசிங் கூறும்போது, "தற்போதுகாப்பகத்தை மூடி சீல் வைத்துள்ளோம். அங்கிருந்த குழந்தைகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் பாதுகாப்பான குழந்தைகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். குழந்தைகள் நலக்குழுவினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

    • ஒரு வாரத்துக்கு மேலாகியும் தப்பி ஓடிய சிறுவர்கள் குறித்து துப்பு கிடைக்கவில்லை.
    • குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் 20 குழந்தைகளை வேறு சில மாவட்டங்களில் செயல்படும் காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    திருச்சி:

    திருச்சி சத்திரம் வி.என்.நகர் பகுதியில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு உரிமம் பெற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு குழந்தை திருமணங்களால் பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர் சிறுமிகள், பல்வேறு காரணங்களால் வீடுகளில் இருந்து வெளியேறி காவல் துறையினரால் மீட்கப்படும் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு காப்பக வார்டனின் கையில் இருந்த சாவியை பறித்துக் கொண்டு 16 வயதுள்ள ஒடிசா மற்றும் ராமநாதபுரம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 4 சிறுவர்கள் தப்பி ஓடினர்.

    அதைத்தொடர்ந்து மறுநாள் அந்த காப்பகத்தின் பொறுப்பாளர் ராஜேஷ் கோட்டை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 4 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.

    ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் தப்பி ஓடிய சிறுவர்கள் குறித்து துப்பு கிடைக்கவில்லை.

    அதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப் குமார் அந்தக் காப்பக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி சிறுவர்கள் தப்பி ஓடியது குறித்து விளக்கம் கேட்டார். பின்னர் அந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 20 குழந்தைகளை வேறு காப்பகங்களுக்கு மாற்றுவதற்கு உத்தரவிட்டார். அதன்படி குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் 20 குழந்தைகளை வேறு சில மாவட்டங்களில் செயல்படும் காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    மறு உத்தரவு வரும் வரை அந்த சிறுவர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ள காப்பகங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என கலெக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்த காப்பகம் 28-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது
    • 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் வசதி க்காக குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில், வருவாய், ஊரக வளர்ச்சி, வேளாண்மை, சமூக நலம், குழந்தைகள் பாதுகாப்பு, தமிழ் வளர்ச்சி, கருவூலம், கலால், ஆதிதிராவிடர் நலம், பிற்படுத்தப்பட்டோர் நலம், சமூக பாதுகாப்பு, மாற்று த்திறனாளிகள் மறுவாழ்வு உள்ளிட்ட துறைகளில் 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்று கின்றனர்.

    இவர்களில் பள்ளி செல்லும் வயதை அடை யாத குழந்தைகள் இருக்கும் பெற்றோரும் உள்ளனர். அவர்களின் நலன் கருதி, குழந்தைகள் காப்பகம் அமைக்க கலெக்டர் கிரா ந்திகுமார் உத்தரவி ட்டார்.

    அதன்படி கலெக்டர் அலுவலகத்தின் பிரதான கட்டிடத்தில், மக்கள் குறைதீர்க்கும் கூடம் அருகே காப்பகம் அமைக்க ப்பட்டு ள்ளது.

    சின்னஞ்சிறு குழந்தை கள் மகிழ்ச்சியான சூழலில், பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காக, அக்கூடம் முழுவதும் விலங்குகள், பறவைகளின் உருவங்கள் கலர்,கலராக வரையப்ப ட்டுள்ளன. கரும் பலகை, தொலைக்காட்சி ஆகிய வையும் நிறுவப்பட்டுள்ளன. குழந்தைகள் விரும்பும் விளையாட்டு சாதன ங்களும், குட்டி நாற்காலி களும் வாங்கப்பட்டுள்ளன.

    வருகிற 28-ந் தேதி முதல் செயல்படுத்த கலெக்டர் உத்தரவிட்டு ள்ளார். அதற்காக கலெ க்டரின் நேர்முக உதவியா ளர் கோகிலா தலைமையி லான அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். குழந்தைகளை பராமரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ஒரு ஆசிரியை நியமிக்கப்பட உள்ளனர்.

    ஒருங்கிணைந்த ஊட்ட ச்சத்து மேம்பாட்டு திட்டம் மூலம் ஊழியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டு ள்ளது.

    கலெக்டரின் இம்முயற்சி சிறு குழந்தைகளுடன் இருக்கும் அரசு ஊழியர்க ளுக்கு பேருதவியாக இருக்கும். பணியிடத்தி லேயே குழந்தைகள் காப்ப கமும் இருப்பதால், நிம்மதி யான மனநிலையுடன் அரசு ஊழியர்கள் பணியாற்றும் வாய்ப்பு உருவாகும் என அதிகாரிகள் எதிர்பா ர்க்கின்றனர்.

    • ஆதரவற்றோர் காப்பகத்தில் எட்டு கைக்குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பாலில் ஏதேனும் பிரச்சினையா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஸ்ரீரங்கம்:

    திருச்சி அருகே, ஆதரவற்றோர் காப்பகத்தில் எட்டு கைக்குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் இயங்கிவரும் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகத்தில், சுமார் 30 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், எட்டு குழந்தைகளுக்கு திடீர் வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

    திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பாலில் ஏதேனும் பிரச்சினையா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • கந்தர்வகோட்டையில் குழந்தைகள் காப்பகம் திறக்கப்பட்டது
    • ஊரக வளர்ச்சி மைய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புதுக்கோட்டை சாலையில் இயங்கி வந்த ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மையம் என்ற குழந்தைகள் காப்பகம் நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி கடந்த 2012 ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த நடைமுறையை எதிர்த்து குழந்தைகள் காப்பக நிர்வாகத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. அலுவலகத்தில் பெறப்பட்ட ஆவணங்களையும், சீல் வைக்கப்பட்ட நிர்வாகத்தின் அலுவலகத்தை திறக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி புதுக்கோட்டை சமூக நலத்துறை அலுவலர்கள், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் மூடி சீல் வைக்கப்பட்ட அலுவலகத்தை திறந்து ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மைய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

    • ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை சேர்ந்த மாணவிகளுடன் விருதுநகர் கலெக்டர் கலந்துரையாடினார்.
    • விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சூலக்கரை அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் மாணவிகளுடன் "காபி வித் கலெக்டர்" என்ற 19-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி காப்பகத்தில் வசிக்கும் மாணவிகளுடன் கலந்துரையாடி 32 மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார்.

    இதில் பங்கேற்ற மாணவி களிடம் கலெக்டர் மேகநாத ரெட்டி அவர்களுடைய ஆர்வம், பொழுதுபோக்கு உள்ளிட்டவை குறித்து கேட்ட றிந்தார். பின்னர் கலெக்டர் பேசுகையில், இங்கு வந்திருக்கும் எல்லோருக்கும் ஒரு தனித்திறன் இருக்கும். அந்த திறமையை கண்டறிந்து தங்களை மெருகேற்றி கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் உங்களால் முடியாது, சாதிக்க முடியாது என்று யார் என்ன சொன்னாலும், நீங்கள் அதை நம்பி விடாமல், உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும்.

    நீங்கள் உங்களுக்கென்று தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். நிறைய திறமைகள் உதாரணமாக எழுத்து, வாசிப்பு, பேச்சு திறமை, தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட உங்களுக்கு விருப்பமான மொழி களை தேர்ந்தெடுத்து அதில் புலமை பெற வேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இது உங்களை முழுமைப்படுத்தும். இந்த திறமைகளை கொண்டு பல நபர்களுக்கு உதவ முடியும். உங்கள் படிப்பு சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும்.

    இதைவிட மிக முக்கியமானது நீங்கள் நன்றாக படித்து, ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு, எப்பொழுதும் உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்களும் மகிழ்ச்சியாக இருந்து உங்களை சுற்றி உள்ள வர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இது உங்களுடைய வேலை யில் நன்றாக பார்பதற்கும், முன்னேறுவதற்கும் உதவியாக இருக்கும். அடுத்து வாழ்க்கையில் உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

    காப்பகத்தில் தங்கி படித்து வரும் மாணவிகளுக்கு தேவையான புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் போட்டி தேர்வுக்கான வழிமுறைகள் அடிப்படை தேவைகள் அனைத்தும் செய்து தரப்படும் என கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.

    இதில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா, வட்டாட்சியர் அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×