கந்தர்வகோட்டையில் குழந்தைகள் காப்பகம் திறப்பு

கந்தர்வகோட்டையில் குழந்தைகள் காப்பகம் திறக்கப்பட்டதுஊரக வளர்ச்சி மைய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
கந்தர்வகோட்டையில் குழந்தைகள் காப்பகம் திறப்பு
Published on

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புதுக்கோட்டை சாலையில் இயங்கி வந்த ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மையம் என்ற குழந்தைகள் காப்பகம் நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி கடந்த 2012 ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த நடைமுறையை எதிர்த்து குழந்தைகள் காப்பக நிர்வாகத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. அலுவலகத்தில் பெறப்பட்ட ஆவணங்களையும், சீல் வைக்கப்பட்ட நிர்வாகத்தின் அலுவலகத்தை திறக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி புதுக்கோட்டை சமூக நலத்துறை அலுவலர்கள், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் மூடி சீல் வைக்கப்பட்ட அலுவலகத்தை திறந்து ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மைய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com