என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடப்பதாக புதிய அப்டேட்.
    • விஜய், சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் மகிழ்ச்சியில் திளைத்துப்போய் உள்ளனர்.

    லியோவை தொடர்ந்து `தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (`THE GOAT') படத்தில் நடித்து வருகிறார் விஜய். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

     இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதாக கூறப்பட்டாலும், கோட் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி பற்றிய அப்டேட் இதுவரை வெளியாகவில்லை.

    சென்னை, கேரளா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள கோட் படத்தின் படப்பிடிப்பு தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது.

     இந்நிலையில் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடப்பதாக புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. கிளைமேக்சில் 15 நிமிடங்கள் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும், இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் விஜயும், சிவகார்த்திகேயனும் இணைந்து நடிப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    ஏற்கனவே கேப்டன் விஜயகாந்த் ஏஐ டெக்னாலஜி மூலம் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியானது.

    இந்நிலையில், கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக வெளியான தகவலால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் அதிர்ச்சியிலும், மகிழ்ச்சியிலும் திளைத்துப்போய் உள்ளனர்.

    இதனிடையே, அமரன் படப்பிடிப்பை முடித்துவிட்ட சிவகார்த்திகேயன், தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'எஸ்கே 23'படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிம்பு ஒரு சண்டை காட்சியில் கார் ஓட்டிக் கொண்டு துப்பாக்கியால் சுடுவது போன்று அமைந்துள்ளது
    • டெல்லியில் படப்பிடிப்பில், கமல், சிம்பு தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன

    நடிகர் கமல்ஹாசன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நடிக்கும் புதிய படம் 'தக் லைப்'. இந்த படம் 'ஆக்ஷன்' படம் ஆகும்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .




    இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்கிறார்.

    தக்லைப்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், 2-ம் கட்ட படப்பிடிப்பு செர்பியாவிலும் நடந்தது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் கமல், திரிஷா பங்கேற்றனர்.இப்படத்தில் துல்கர் சல்மான் விலகியதால் அவருக்கு பதிலாக சிம்பு இணைந்ததாக கூறப்பட்டது.




    இந்நிலையில் 'தக் லைப்' படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு தற்போது இணைய தளத்தில் வீடியோ வெளியிட்டு அறிவித்தது.

    அதில் நடிகர் சிம்பு ஒரு சண்டை காட்சியில் வேகமாக ஒரு கார் ஓட்டிக் கொண்டு துப்பாக்கியால் எதிரிகள் மீது சுடுவது போன்று அமைந்துள்ளது. இது தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.




    மேலும், டெல்லியில் தற்போது தொடங்கிய படப்பிடிப்பில், நடிகர் கமல், சிம்பு தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தில் கமலுக்கு மகனாக சிம்பு நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமலா பால் நண்பர் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • விலைமதிப்பற்ற கர்ப்ப பயணத்தின் போது என்னுடன் இருந்ததற்கு நன்றி.

    சிந்து சமவெளி, வேலையில்லா பட்டதாரி 2, தெய்வத்திருமகள் உள்பட ஏராளமான படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் அமலாபால். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வந்தார். மலையாளத்தில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆடு ஜீவிதம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    அமலா பால் கடந்த ஆண்டு தனது நண்பர் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த இரண்டு மாதங்களில் தனது கர்ப்பத்தை அறிவித்தார்.

    தொடர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சியை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

     கர்ப்பிணியாக இருக்கும் அமலா பாலை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதற்காக அவரது கணவர் ஜெகத் தேசாய் அருகிலேயே இருந்து கவனித்து வருகிறார். இதற்கு நன்றி தெரிவித்து அமலா பால் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    என் பக்கத்தில் கழித்த இரவுகளில் இருந்து, என் அசவுகரியங்களை மெதுவாகத் தணித்து, என் மீதான உங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் என்னை வலிமையால் நிரப்பிய உங்களின் உற்சாகமான வார்த்தைகள், இந்த விலைமதிப்பற்ற கர்ப்பப் பயணத்தின் போது என்னுடன் இருந்ததற்கு நன்றி.

    என் நம்பிக்கை குலைந்த சிறிய தருணங்களில் கூட எனக்கு ஆதரவாக பறந்து செல்லும் உங்கள் விருப்பம் என் இதயத்தை நன்றியுடனும் அன்புடனும் நிரப்புகிறது. உங்களைப் போன்ற ஒரு மனிதனுக்கு நான் இந்த வாழ்க்கையில் உண்மையிலேயே அற்புதமான ஒன்றைச் செய்திருக்க வேண்டும். எனது நிலையான வலிமை, அன்பு மற்றும் அசைக்க முடியாத ஆதரவாக இருப்பதற்கு நன்றி. நான் உன்னை வார்த்தைகளை விட அதிகமாக நேசிக்கிறேன்

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருவரது புகைப்படமும் இல்லை.
    • இருவருக்கும் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது.

    இந்தி திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகாபடுகோனே கர்ப்பம் அடைந்ததாக சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

     இந்தநிலையில் தீபிகா படுகோனே ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருவரது புகைப்படமும் இல்லை. இதை தொடர்ந்து இருவருக்கும் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது. இது பற்றி அவரது தரப்பு கூறுகையில்:-

    ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் ஒரு அமைதியான பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். மற்றபடி அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. வரப்போகும் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    வாழ்க்கையில் இப்போது அவர்கள் ஒவ்வொரு கட்டத்தையும் மிகவும் அழகாக வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையை எதிர்நோக்கி இந்த தருணத்தில் காத்திருக்கின்றனர் என்றனர்.

    இந்நிலையில் ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் ஒரு சுற்றுலாவில் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

    • இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் ,கோல்டன் குளோப் விருது வென்றது.
    • ரூ.500 கோடியில் உருவான படம் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூலித்தது.

    சமீப காலமாக பல ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற படங்கள் தியேட்டர்களில் "ரீ ரிலீஸ்" செய்யப்பட்டு மீண்டும் வசூல் அள்ளி குவித்து வருகிறது.

    இந்நிலையில் சமீபத்தில் வெளியான படங்கள் கூட 'மீண்டும் ரீ ரிலீஸ்' செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 2022 - ஆண்டு தியேட்டர்களில் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.



    இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய்தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா உள்பட பலர் நடித்தனர்.

    பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இதனை இயக்கினார். எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார்.

    இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருது வென்றது. 500 கோடியில் உருவான படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது.




    இந்நிலையில் 'ஆர்ஆர்ஆர்' படம் மீண்டும் தியேட்டர்களில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட உள்ளது. இதுகுறித்து தயாரிப்பு குழுவினர் நாளை மறுநாள் (10-ந் தேதி) தியேட்டர்களில் இப்படம் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இசை பெரிதா? மொழி பெரிதா? என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன.
    • ஒரு படம் தயாராவது கூட்டு முயற்சியால் தான்.

    இசையமைப்பாளர் இளையராஜா பாடல் உரிமை தனக்கே சொந்தம் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது முதல் இசை பெரிதா? மொழி பெரிதா? என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நடிகை குஷ்பு இசை பெரிதா? மொழி பெரிதா என்ற கேள்விக்கு பதில் அளித்து கூறும்போது, "சினிமா துறையில் எல்லா விஷயங்களுமே கூட்டு முயற்சியால்தான் நடக்கிறது. எது பெரிது என்ற விஷயத்தை இயக்குனரும், இசையமைப்பாளரும் தான் பேச வேண்டும். இளையராஜாவுக்கும், வைரமுத்துக்கும் இடையே பிரச்சினை இருந்தால் அவர்கள்தான் பேச வேண்டும்'' என்றார்.

    தயாரிப்பாளர்கள் இசை எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறுவது குறித்து ஒரு தயாரிப்பாளரான உங்களின் கருத்து என்ன என்று கேட்டபோது, `மீண்டும் சொல்கிறேன். ஒரு படம் தயாராவது கூட்டு முயற்சியால் தான். இதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை'' என்றார்.

    • முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
    • ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

    ஓ.டி.டி. தளங்கள் சமீப காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பதை விட ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஓ.டி.டி.யில் வெளியிடுவதற்காகவே பிரத்யேகமாக படங்கள், வெப் தொடர்கள் தயாராகின்றன. முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதில் அதிக சம்பளமும் கிடைக்கிறது.

    இந்த நிலையில் ஓ.டி.டி. தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் விவரம் வெளியாகி இருகிறது. இந்த பட்டியலில் இந்தி நடிகர் அஜய்தேவ்கான் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஓ.டி.டி. வெப் தொடரில் ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

     அஜய்தேவ்கான் நடிப்பில் சமீபத்தில் `ருத்ரா' என்ற வெப் தொடர் வெளியானது. இதில் 7 எபிசோடுகள் இருந்தன. ஒரு எபிசோடுக்கு ரூ.18  கோடி வீதம் மொத்தம் ரூ.126 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்து இந்தி நடிகர் மனோஜ் பஜ்பாய் ஒரு எபிசோடுக்கு ரூ.10 கோடி பெறுகிறார்.

     நடிகைகள் தமன்னா, சமந்தா, பிரியங்கா சோப்ரா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறுகிறார்கள்.

    • புத்திசாலித்தனமான முடிவு என்று ரசிகர்கள் பாராட்டு.
    • ஆட்டோவில் சென்ற வீடியோவை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சுருதிஹாசன் தற்போது மும்பையில் தங்கி இருக்கிறார். அங்கு ஒரு படப்பிடிப்பில் பங்கேற்க சென்ற சுருதிஹாசன் போக்குவரத்து நெரிசலில் சிக்கினார்.

     காரில் அவரால் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. இதையடுத்து காரை ஒதுக்கி நிறுத்தி விட்டு ஆட்டோ பிடித்து அதில் பயணம் செய்தார். ஆட்டோவில் சென்ற வீடியோவை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    சுருதிஹாசன் ஆட்டோவில் சென்றது புத்திசாலித்தனமான முடிவு என்று ரசிகர்கள் பாராட்டினர். குறிப்பாக மும்பையில் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதில் காரை விட ஆட்டோவில் போவதே சிறந்தது என்கின்றனர்.

    அமிதாப்பச்சனும் சமீபத்தில் போக்குவரத்து நெரிசலால் காரை ஒதுக்கி விட்டு ஆட்டோவில் பயணித்த சம்பவம் நடந்தது. இது நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமன்றி சுற்றுச்சுழலுக்கும் சிறந்தது. நடிகர்களுக்கு சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு செல்லவும் உதவுகிறது என்கின்றனர்.

    • படுகாயம் அடைந்த மாணவன் சின்னத்துரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்
    • சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுத்தது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிளஸ்-2 படித்து வந்த சின்னதுரையை சாதிய மோதலால் சக மாணவர்கள் அரிவாளால் வெட்டினர். அதை தடுக்க வந்த அவரது தங்கை சந்திராவுக்கும் வெட்டு விழுந்தது.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்நிலையில், மாணவர் சின்னதுரையை நேரில் அழைத்து இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டியுள்ளார்.

    மேலும், சின்னதுரையின் கல்லூரி கட்டணம் மற்றும் எவ்வித உதவியாக இருப்பினும் தனது 'நீலம் பண்பாட்டு மையம்' செய்வதற்கு தயாராக இருக்கிறது என்றும் பா.ரஞ்சித் உறுதியளித்துள்ளார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2016-ஆம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன்.
    • அதைத்தொடர்ந்து அடுத்ததாக அதர்வா நடிப்பில் டி.என்.ஏ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    கடந்த 2016-ஆம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் 'மான்ஸ்டர்', 'ஃபர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார்.

    அதைத்தொடர்ந்து அடுத்ததாக அதர்வா நடிப்பில் டி.என்.ஏ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்தா படத்தில் புகழ் பெற்ற நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    படத்தின் தலைப்பு கடந்த ஆண்டு வெளிவந்த நிலையில். தற்பொழுது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதர்வாவின் பிறந்தநாளான இன்று படக்குழுவினர் இந்த போஸ்டரை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    டி.என்.ஏ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.
    • சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது. படத்தின் போஸ்டரை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டனர்.

    படத்தின் முதல் பாடல் வரும் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 2 அப்பாடலிற்கு 'அடங்காத அசுரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக அப்டேட்டை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படம் எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்த ஆண்டின் மெட் காலா 2024 நிகழ்ச்சி நடந்தது.
    • மெட் காலா உலகின் மிகவும் மதிப்புமிக்க, கவர்ச்சியான பேஷன் நிகழ்வு ஆகும்.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்த ஆண்டின் மெட் காலா 2024 நிகழ்ச்சி நடந்தது. இது மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆப் ஆர்ட்ஸ் காஸ்ட்யூம் இன்ஸ்டிடியூட் நலனுக்காக நடத்தப்படும் வருடாந்திர நிதி திரட்டும் விழா என்பது குறிப்பிடத்தக்கது.

    மெட் காலா உலகின் மிகவும் மதிப்புமிக்க, கவர்ச்சியான பேஷன் நிகழ்வு ஆகும். இதில் பிரபல ஹாலிவுட் நடிகைகள் ஜெண்டையா, ஜெனிபர் லோபஸ், நடிகர் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் உள்ளிட்டோர் கலக்கலான உடையில் கலந்து கொண்டனர்.

    இந்திய திரை உலக பிரபலங்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். பிரபல இந்தி நடிகை ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகர் நடிகைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் ஆலியாபட் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கண் கவர் புடவையை அணிந்து வலம் வந்தார்.

    அவரது தோற்றம் பார்வையாளர்களை கவர்ந்திழுத்தது.

    இந்த சேலை 163 கலைஞர்களால் 1905 மணி நேரத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் தயார் செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் நடந்த நேர்காணலில் புடவை பற்றி ஆலியா பட் கூறியதாவது:-உலகில் புடவையை விட சிறந்த ஆடை எதுவும் இல்லை.இந்த தலைச்சிறந்த படைப்புக்கு பின்னால் இருக்கும் கலை–ஞர்களுக்கு எனது பாராட்டுக்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×