என் மலர்
சினிமா செய்திகள்
- இந்நிலையில் 'தக்லைப்' படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தற்போது நடந்து வருகிறது
- இதில் கமல், சிம்பு, திரிஷா, கவுதம் கார்த்திக், நாசர், அபிராமி நடித்து வருகின்றனர்.
பிரபல நடிகர் கமல்ஹாசன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நடிக்கும் புதிய படம் 'தக் லைப்'.இந்த படம் 'ஆக்ஷன்' படம் ஆகும்.
இப்படத்தில் கமல்ஹாசன் , நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .

இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.
கமல்ஹாசன் தேர்தல் பிரசசாரங்களில் ஈடுபட்டிருந்த போது, சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை மணிரத்னம்.படமாக்கி வந்தார்.

இந்நிலையில் 'தக்லைப்' படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தற்போது நடந்து வருகிறது. நடிகர் கமல் டெல்லிக்கு சென்று இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். டெல்லியில் உள்ள புகழ்பெற்ற சங்கத் மோட்சம் அனுமான் கோவிலில் கடந்த சில தினங்களாக 'தக்லைப்' படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த கோவிலில் நடைபெறும் படப்பிடிப்பில் கமல், சிம்பு, திரிஷா, கவுதம் கார்த்திக், நாசர், அபிராமி உள்பட பலரும் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் சிம்பு பற்றிய அறிமுக வீடியோவை படக்குழு நாளை வெளியிட உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- யுவன் சங்கர் ராஜா, ‘மணி இன் தி பேங்க்’ எனும் பெயரில் இண்டிபெண்டண்ட் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- யுவன் சங்கர் ராஜா, ‘மணி இன் தி பேங்க்’ எனும் பெயரில் இண்டிபெண்டண்ட் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இசையுலகில் திரைப்பட பாடல்களுக்கு நிகராக தற்போது இண்டிபெண்டண்ட் இசையமைப்பாளர் உருவாக்கப்படும் மியூசிக் ஆல்பங்களுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடத்தில் மறைந்திருக்கும் இசை திறமையை வெளிக்கொணரும் வகையிலும், புத்துணர்வு அளித்து ஊக்கமளிக்கும் வகையிலும் தமிழ் திரையிசையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கர் ராஜா, 'மணி இன் தி பேங்க்' எனும் பெயரில் இண்டிபெண்டண்ட் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'மணி இன் தி பேங்க்' எனும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலில் யுவன் சங்கர் ராஜா நடித்திருப்பதுடன் பாடலை எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார். அபிஷேக் ரங்கனாதன் இப்பாடலை இயக்கி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். துபாய் பாலை வனத்தில் பாடலின் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இப்பாடல் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் சிவபாலன் என்கிற அப்புகுட்டி.
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் சிவபாலன் என்கிற அப்புகுட்டி. அதைத்தொடர்ந்து அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தற்பொழுது படத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகர் அப்புக்குட்டியின் பிறந்தநாளான இன்று, அவர் கதையின் நாயகனாக ராஜூ சந்திரா இயக்கத்தில் நடித்துள்ள "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் First Look போஸ்டரை, நடிகர் விஜய் சேதுபதி கையால் வெளியிட்டுள்ளனர்!
ராஜு சந்திரா எழுதி இயக்கி, பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில்,
ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா இருவரும் தயாரித்துள்ளனர்.
மாதன்ஸ் குழுமம் இணைந்து தயாரித்துள்ளது. மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜி மேத்யூ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கிராமத்து எதார்த்தத்தை, காதலுடன் காமெடி கலந்து, ஜனரஞ்சகமாக கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ளார் ராஜூ சந்ரா. இசையை நவநீத் அமைக்க, கலையை வினோத் குமார் கையாண்டுள்ளார். படம் விரைவில் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிக வித்தியாசமாக காட்சி படுத்தியுள்ளனர். அப்புகுட்டி இறந்தவர் போன்று சிரித்துக்கொண்டே பாடையில் அமர்ந்து இருக்கிறார். இறந்த நாள் அன்று பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்ற தலைப்பில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.
இன்று பிறந்தாள் கொண்டாடும் அப்புகுட்டி ஆதரவற்ற பெண்கள் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி அவரது பிறந்தநாளை கொண்டாடினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், கே. விவேக் இயக்கியுள்ள திரைப்படம் '13'
- ராட்சசன்', 'போர் தொழில்' படங்கள் போல இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது.
இசையைப் போலவே தனது தேர்ந்த கதைத் தேர்வின் மூலமும் சிறந்த நடிகராக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அவரது சமீபத்திய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், அடுத்தப் படத்திற்கான டப்பிங் பணியைத் தொடங்கி இருக்கிறார் ஜிவி பிரகாஷ்.
மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், கே. விவேக் இயக்கியுள்ள திரைப்படம் '13'. இதன் படப்பிடிப்பு 80 நாட்கள் சென்னை மற்றும் வனப்பகுதிகளில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து, டப்பிங் பணிகள் தொடங்கியது. இன்று மதியம் 13:13 மணியளவில் ஜிவி பிரகாஷ் டப்பிங் பேசி தொடங்கி வைத்தார்.
படம் குறித்து இயக்குநர் விவேக் கூறியிருப்பதாவது, "'ராட்சசன்', 'போர் தொழில்' படங்கள் போல இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானர் படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் வகையில் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, 13 அன்லக்கி எண் என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கையை படம் உடைத்துக் காட்டும். நண்பர்கள் ட்ரிப் செல்லும்போது, ஜாலியாக செய்யும் சில விஷயங்கள் அவர்களுக்கு எதிராக எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. ஜிவி பிரகாஷூடன் வேலை பார்த்திருப்பது என் கனவு நினைவான தருணம். கெளதம் சார் நடிப்பு படத்தை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்".
நடிகர் ஜிவி பிரகாஷ்குமார், "'13' படம் நிச்சயம் வெற்றி பெறும். அதன் கதைக்களம் புதிதாக இருக்கிறது. 'டார்லிங்' படத்திற்குப் பிறகு நான் நடிக்கும் ஹாரர் படம் இது. நிச்சயம் பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்" என்றார்.
'13' படத்திற்கு சி.எம். மூவேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், 'கதிர்' படப்புகழ் பவ்யா த்ரிக்கா.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கியவர் சாந்தகுமார். அடுத்ததாக 'ரசவாதி தி அல்கெமிஸ்ட்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கியவர் சாந்தகுமார். அடுத்ததாக 'ரசவாதி தி அல்கெமிஸ்ட்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் கதாநாயகனாக அர்ஜூன்தாஸ், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. யூடியூபில் இதுவரை 30 லட்ச பார்வையை ரசவாதி டிரைலர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜூன் தாஸ் இப்படத்தில் ஒரு சித்த மருத்துவராக நடித்துள்ளார். ஒரு மருத்துவர் அவரது கோடை விடுமுறையை செலவிடுவதற்காக மலை கிராமத்திற்கு வருகிறார். அதன் பிரகு இவர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை பற்றி பேசக்கூடிய படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் படத்தின் பாடலான சாரல் சாரல் பாடல் வெளியாகியது. நேற்று படத்தின் ஸ்னீக் பீக் வெளியிடப்பட்டது. தற்பொழுது சென்சார் போர்ட் ரசவாதி திரைப்படத்திற்கு U/A சான்றிதழை வழங்கியுள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கவின் நடித்துள்ள ஸ்டார் மற்றும் அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு படமும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படம் தியேட்டர்களில் "ஹவுஸ்புல்" காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
- இப்படத்தின் நான்காம் நாள் வசூல் ரூ.22 கோடி சாதனை படைத்து உள்ளது.
பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் நடித்தனர்.
அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 படம் உருவாகியது.
இப்படத்தின் முந்தைய 3 பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 -ந்தேதி அரண்மனை - 4 படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்பட்டது. இப்படம் வெளியான தியேட்டர்களில் "ஹவுஸ்புல்" காட்சிகளாக ஓடிக் கொண்டு இருக்கிறது.
இப்படம் முதல் நாளில் நாளில் ரூ 4.65 கோடி வசூலித்தது, 2- வது நாளில் ரூ 6.65 கோடி வசூலித்தது. 3- வது நாளான ஞாயிற்றுக்கிழமை ரூ.7.85 கோடி வசூல் செய்தது. 4- ம் நாளான நேற்று ரூ 3 கோடியை வசூலித்தது.
இப்படத்தின் நான்காம் நாள் வசூல் இந்தியாவில் ரூ.19.15 கோடியும் உலகம் முழுவதும் ரூ.22 கோடியும் வசூல் சாதனை படைத்து உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜூன் 22 - ந் தேதி விஜயின் 50 -வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- வில்லு" படம் ஜூன் 21- ந் தேதி 'ரீ-ரிலீஸ்' செய்யப்படுகிறது.
பிரபல நடிகர் விஜய் நடிப்பில் 2009 -ம் ஆண்டு வெளியான படம் 'வில்லு'. இப்படம் அதிரடி நகைச்சுவைப்படமாகும். பிரபு தேவா இயக்கியுள்ளார்.இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை நயன்தாரா , பிரகாஷ் ராஜ் , வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் - வடிவேலு காமெடி படத்துக்கு வலு சேர்த்து இருந்ததால் "வில்லு" திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் விஜய்யின் 'கில்லி' படம் ரீ ரிலீஸாகி தமிழ்நாட்டில் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது.

இதை தொடர்ந்து வருகிற ஜூன் 22 - ந் தேதி விஜயின் 50 -வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு 'வில்லு" படத்தை ஜூன் 21- ந்தேதி அன்று 'ரீ-ரிலீஸ்' செய்யப்படும் என ஜங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- மிருணாலினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி 2012 ஆம் ஆண்டு வெளியான 'நான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார். நான் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் போன்ற படங்களில் நடித்து மக்கள் கவனத்தை பெற்றார்.
இந்நிலையில் அடுத்ததாக விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மிருணாலினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் ரோமியோ படத்தை தயாரித்துள்ளது. பரத் தனசேகர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படம் வரும் மே 10 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் மிருணாலினி -க்கும் இடையே திருமணம் நடக்கிறது. இத்திருமணத்தில் மிருணாலினிக்கு விருப்பம் கிடையாது. எப்படி விஜய் ஆண்டனி அவரது காதலை தன் மனைவியான மிருணாலினிக்கு புரிய வைக்கிறார் அதற்க்கு அடுத்து என்ன நடந்தது என்பதே கதை.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மோகன்லால் L360, லூசிஃபர் 2, எம்புரான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
- இந்நிலையில் மோகன்லால் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இது இவர் இயக்கும் முதல் படமாகும்.
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால். கடந்த ஜனவரி மாதம் லிஜொ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் நடித்தார் மோகன்லால். படம் வெளிவந்து மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து மோகன்லால் L360, லூசிஃபர் 2, எம்புரான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மோகன்லால் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்திற்கு 'பரோஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.
குழந்தைகளைக் கவரும் விதமாக உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார். 3டி-யில் உருவாகும் இந்தப் படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது.
வாஸ்கோட காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்தப் படம் என்கிறார்கள். இந்நிலையில், இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி நடிக்க இருந்த வேடத்தில் அசோக் செல்வன் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இதனால் 'தக்லைப்' படத்தில் இருந்து விலகிய ஜெயம் ரவி மீண்டும் அப்படத்தில் இணைய வில்லை என்பது தெரியவந்து உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நடிக்கும் புதிய படம் 'தக் லைப்'. இந்த படம் 'ஆக்ஷன்' படம் ஆகும்.
இப்படத்தில் கமல்ஹாசன் , நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .

இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கமல் கலந்து கொண்டார். அதன்பின் கமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இப்படத்தில் கமிட்டாகி இருந்த ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் கால்சீட் பிரச்சினையால் வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தக்லைப் படத்தில் இணைத்து விட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி நடிக்க இருந்த வேடத்தில் அசோக் செல்வன் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 'தக்லைப்' படத்தில் இருந்து விலகிய ஜெயம் ரவி மீண்டும் அப்படத்தில் இணைய வில்லை என்பது தெரியவந்து உள்ளது.
தற்போது 'தக்லைப்' படத்தில் கமலுடன் சிம்பு, அசோக் செல்வன் நடித்து வருகிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இதில் நடிகர் தனுஷ் அங்குள்ள ஒரு பெரிய குப்பை மேட்டில் நடித்தார்.
- தனுஷின் துணிச்சலான நடிப்பை படக்குழுவினர் பாராட்டினார்கள்.
பிரபல நடிகர் தனுஷ் நடிக்கும் 51- வது படம் 'குபேரா'. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இதில் தனுஷூடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். ஐதராபாத் , திருப்பதி உள்பட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்தது.

தனுஷின் முதல் தோற்றம் சில வாரங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பு பெற்றது. அதில் அவர் யாசகனை போல காட்சியளித்தார்.
மேலும் சில நாட்களுக்கு முன் நாகர்ஜுனாவின் தோற்றம் வெளியானது. அதில் மழையில் அவர் குடை பிடித்தபடி நடந்து வர, பின்னால் கட்டு கட்டாக பணம் இருப்பது போல காணப்பட்டது.
இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இதில் நடிகர் தனுஷ் அங்குள்ள ஒரு பெரிய குப்பை மேட்டில் நடித்தார். இதில் அவர் 10 மணி நேரம் முககவசம் எதுவும் அணியாமல் நடித்துள்ளார்.

மேலும் உண்மையான உணர்ச்சி வர வேண்டும் என்பதற்காக அவர் முகக்கவசம் அணியாமல் அங்குள்ள துர்நாற்றத்தை சகித்து நடித்ததாக படக்குழு தெரிவித்தது.தனுஷின் துணிச்சலான நடிப்பை படக்குழுவினர் வியந்து பாராட்டினார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரசாரம் செய்வது போல வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலி வீடியோவை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக அவருடைய அண்ணன் நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பவன் கல்யாணின் உறவினரான நடிகர் அல்லு அர்ஜுன் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் செய்வது போல ஆந்திராவில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்ற தலைப்பில் வெளியான அந்த வீடியோவில் நடிகர் அல்லு அர்ஜுன் திறந்த வேனில் நின்று வாக்கு கேட்பது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோ கடந்த 2022-ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த இந்திய தின அணிவகுப்பில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டது. அதனை தற்போது தவறாக பரவ விட்டுள்ளனர்.
இந்த போலி வீடியோவை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.






