ஓடிடியில் வெளியாகும் ரோமியோ எப்போது?

இப்படம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.மிருணாலினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஓடிடியில் வெளியாகும் ரோமியோ எப்போது?
Published on

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி 2012 ஆம் ஆண்டு வெளியான 'நான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார். நான் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் போன்ற படங்களில் நடித்து மக்கள் கவனத்தை பெற்றார்.

இந்நிலையில் அடுத்ததாக விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மிருணாலினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் ரோமியோ படத்தை தயாரித்துள்ளது. பரத் தனசேகர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

இப்படம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படம் வரும் மே 10 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் மிருணாலினி -க்கும் இடையே திருமணம் நடக்கிறது. இத்திருமணத்தில் மிருணாலினிக்கு விருப்பம் கிடையாது. எப்படி விஜய் ஆண்டனி அவரது காதலை தன் மனைவியான மிருணாலினிக்கு புரிய வைக்கிறார் அதற்க்கு அடுத்து என்ன நடந்தது என்பதே கதை.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com