கணவருக்கு நன்றி தெரிவித்த அமலாபால்

அமலா பால் நண்பர் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.விலைமதிப்பற்ற கர்ப்ப பயணத்தின் போது என்னுடன் இருந்ததற்கு நன்றி.
கணவருக்கு நன்றி தெரிவித்த அமலாபால்
Published on

சிந்து சமவெளி, வேலையில்லா பட்டதாரி 2, தெய்வத்திருமகள் உள்பட ஏராளமான படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் அமலாபால். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வந்தார். மலையாளத்தில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆடு ஜீவிதம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அமலா பால் கடந்த ஆண்டு தனது நண்பர் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த இரண்டு மாதங்களில் தனது கர்ப்பத்தை அறிவித்தார்.

தொடர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சியை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 கர்ப்பிணியாக இருக்கும் அமலா பாலை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதற்காக அவரது கணவர் ஜெகத் தேசாய் அருகிலேயே இருந்து கவனித்து வருகிறார். இதற்கு நன்றி தெரிவித்து அமலா பால் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

என் பக்கத்தில் கழித்த இரவுகளில் இருந்து, என் அசவுகரியங்களை மெதுவாகத் தணித்து, என் மீதான உங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் என்னை வலிமையால் நிரப்பிய உங்களின் உற்சாகமான வார்த்தைகள், இந்த விலைமதிப்பற்ற கர்ப்பப் பயணத்தின் போது என்னுடன் இருந்ததற்கு நன்றி.

என் நம்பிக்கை குலைந்த சிறிய தருணங்களில் கூட எனக்கு ஆதரவாக பறந்து செல்லும் உங்கள் விருப்பம் என் இதயத்தை நன்றியுடனும் அன்புடனும் நிரப்புகிறது. உங்களைப் போன்ற ஒரு மனிதனுக்கு நான் இந்த வாழ்க்கையில் உண்மையிலேயே அற்புதமான ஒன்றைச் செய்திருக்க வேண்டும். எனது நிலையான வலிமை, அன்பு மற்றும் அசைக்க முடியாத ஆதரவாக இருப்பதற்கு நன்றி. நான் உன்னை வார்த்தைகளை விட அதிகமாக நேசிக்கிறேன்

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com