'ஆர்ஆர்ஆர்' 10 -ந் தேதி "ரீ ரிலீஸ்"

இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் ,கோல்டன் குளோப் விருது வென்றது.ரூ.500 கோடியில் உருவான படம் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூலித்தது.
'ஆர்ஆர்ஆர்' 10 -ந் தேதி "ரீ ரிலீஸ்"
Published on

சமீப காலமாக பல ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற படங்கள் தியேட்டர்களில் "ரீ ரிலீஸ்" செய்யப்பட்டு மீண்டும் வசூல் அள்ளி குவித்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான படங்கள் கூட 'மீண்டும் ரீ ரிலீஸ்' செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 2022 - ஆண்டு தியேட்டர்களில் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.

இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய்தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா உள்பட பலர் நடித்தனர்.

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இதனை இயக்கினார். எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார்.

இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருது வென்றது. 500 கோடியில் உருவான படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது.

இந்நிலையில் 'ஆர்ஆர்ஆர்' படம் மீண்டும் தியேட்டர்களில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட உள்ளது. இதுகுறித்து தயாரிப்பு குழுவினர் நாளை மறுநாள் (10-ந் தேதி) தியேட்டர்களில் இப்படம் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com