என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.
    • படத்தின் முதல் பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது அப்பாடலிற்கு 'அடங்காத அசுரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது. படத்தின் போஸ்டரை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டனர்.

    படத்தின் முதல் பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது அப்பாடலிற்கு 'அடங்காத அசுரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அப்டேட்டை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படம் எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் காலஅவகாசம் தேவை.
    • எனவே ஆகஸ்ட் மாதத்திற்கு 'ரிலீஸ்' தேதி தள்ளி வைக்கப்பட்டது தற்போது உறுதியாகி உள்ளது.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம் இந்தியன். 1996 -ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு விழிப்புணர்வு அதிரடி படமாகும். இதில் கம்ல் 'சேனாபதி' என்ற வயதான சுதந்திரப் போராட்ட வீரராக நடித்தார்.

    ஊழலுக்கு எதிராக போராடிய சேனாதிபதி இந்தியாவை விட்டு ஓடிப்போய் ஹாங்காங் செல்வதுடன், ஊழல் எப்போதாவது திரும்பினால் திரும்பி வருவேன் என்று மிரட்டுவதுடன் 'இந்தியன்' முதல் பாகம் முடிந்தது.




    இந்நிலையில் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2 ' படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளர்கள் தற்போது இப்படத்தை ஜூன், அல்லது ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டனர்.

    தற்போது இப்படம் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு மட்டும் எடுக்க வேண்டி உள்ளது.




    இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதம் 'இந்தியன் 2' வெளியாக உள்ளது என புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் இறுதி கட்டப் பணிகளில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் கால அவகாசம் அதிகம் தேவைப்படுகிறது.

    எனவே ஆகஸ்ட் மாதத்திற்கு 'ரிலீஸ்' தேதி தள்ளி வைக்கப்பட்டது தற்போது உறுதியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

     

    • பாலிவட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • இதற்கிடையில் நயன்தாரா, நெற்றிக்கண், ஐரா, கொலையுதிர் காலம், அன்னபூரணி போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளிலும் நடித்துள்ளார்.

    நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

    மேலும் பாலிவட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஜவான் திரைப்படம் நயந்தாராவுக்கு மிகப்பெரிய வெற்றிபடமாக அமைந்தது.

    இதற்கிடையில் நயன்தாரா, நெற்றிக்கண், ஐரா, கொலையுதிர் காலம், அன்னபூரணி போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளிலும் நடித்துள்ளார். ஆனால் அவர் சமீபத்தில் நடித்து வெளியான எந்த கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்கும் படங்கள் சரியாக ஓடவில்லை. அவர் நடிப்பில் வெளியான அன்னப்பூரணி மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    அடுத்ததாக நயன்தாரா மண்ணாங்கட்டி Since1960 எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ட்யூட் விக்கி இந்த படத்தை எழுதி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு பூஜை உடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் படப்பிடிப்பு நிறைவடைந்ததை நயன்தாரா பட குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சினிமா உலகில் பான் இந்தியா என்ற தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் 'பாகுபலி'க்கு முக்கிய இடம் உண்டு
    • பாகுபலி 3' பாகம் கண்டிப்பாக விரைவில் உருவாகும். இது தொடர்பாக தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது

    2015 -ம் ஆண்டில் தெலுங்கு மொழியில் 'பாகுபலி' படம் வெளியானது. இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கினார். இதில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்தனர்.

    இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கினார். 3-டி தொழில் நுட்பத்தில் ரூ.250 கோடியில் இப்படம் உருவானது. இந்திய திரைப் படங்களில் பாகுபலி' படத்தின் 2 பாகங்களும் உலக அளவில் சுமார் ரூ. 2000 கோடி வசூல் பெற்றது.




    இப்படம் தமிழ் ,இந்தி, மலையாளம் மொழிகளிலும் 'டப்பிங்' செய்யப்பட்டு ஒரேநேரத்தில் திரையிடப்பட்டது. மேலும் அதைத்தொடர்ந்து வெளியான 'பாகுபலி 2 ' படம் வசூல் சாதனை படைத்தது. வெளிநாடுகளிலும் இப்படம் 'டப்பிங்'செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வசூலை குவித்தது.

    இந்நிலையில் தற்போது இப்படத்தின் 3 - ம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது 'பாகுபலி' படத்தின் 3 - ம் பாகத்தை இயக்க இருப்பதை இயக்குனர் ராஜமவுலி. உறுதி செய்துள்ளார்


    இதுகுறித்து ஐதராபாத்தில் இயக்குநர் ராஜமவுலி கூறியதாவது :- "பாகுபலியை உருவாக்கிய நகரம் என்பதால், ஐதராபாத் எனது இதயத்தில் தனி இடத்தை பிடித்துள்ளது.

    தென்னிந்திய சினிமா உலகில் பான் இந்தியா என்ற தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் 'பாகுபலி'க்கு முக்கிய இடம் உண்டு.பாகுபலி 3' பாகம் கண்டிப்பாக விரைவில் உருவாகும். இது தொடர்பாக தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனது 32-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் சாய் பல்லவி. அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
    • அவர் நடித்து வரும் அமரன் திரைப்படக்குழு சாய் பல்லவியை வாழ்த்தும் விதமாக ஒரு சிறப்பு போஸ்டரை பகிர்ந்துள்ளனர்.

    பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய் பல்லவி. மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு முதல் படத்திலேயே திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

    தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த சாய் பல்லவி மாரி 2 படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். வாயாடி பெண்ணாக படத்தில் அவர் நடித்த நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. உடல் கவர்ச்சியை காட்டாமல் வசீகரம் கலந்த முகத்துடன் உள்ள அவரது நடிப்பு மலையாள படங்கள் மட்டுமின்றி தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி திரை உலகங்களில் பேசப்படும் வகையில் அமைந்தது.

    அவர் நடித்து வெளியான படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. நிதேஷ் திவாரி இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் தனது 32-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் சாய் பல்லவி. அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சாய் பல்லவி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் தண்டேல் படக்குழு ஒரு சிறப்பு வீடியோவை பகிர்ந்தது அந்த வகையில் அவர் நடித்து வரும் அமரன் திரைப்படக்குழு சாய் பல்லவியை வாழ்த்தும் விதமாக ஒரு சிறப்பு போஸ்டரை பகிர்ந்துள்ளனர். கமல்ஹாசன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் செய்கிறார்.

    சிவகார்த்திகேயேன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்திய ராணுவப் படை வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் தற்பொழுது இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளில் உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரஸ்தானம் மற்றும் ஸ்னேக கீதம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார் சந்தீப் கிஷன்.
    • கடந்த ஜனவரி மாதம் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    பிரஸ்தானம் மற்றும் ஸ்னேக கீதம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார் சந்தீப் கிஷன். அதைதொடர்ந்து பல வெற்றி படங்களில் தெலுங்கு மொழியில் நடித்து. 2013 ஆம் ஆண்டு மதன்குமார் இயக்கத்தில் வெளியான யாருடா மகேஷ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    அதற்கு பின் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம் திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்களுக்கு பரீட்சையமான நடிகரானார். அதைத்தொடர்ந்து மாயவன், நெஞ்சில் துணிவிருந்தால், மைக்கல் போன்ற படங்களில் நடித்தார்.

    கடந்த ஜனவரி மாதம் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். அதைதொடர்ந்து தனுஷின் 50-வது திரைப்படமான ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    நேற்று சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு மாயாஒன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது அதைதொடர்ந்து இன்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் சிவி குமார் இயக்கி மற்றும் தயாரித்து 2017 ஆம் ஆண்டு வெளியான மாயவன் படத்தின் தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கத்து.

    இப்படம் சைஃபை கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ராமபிரமம் சுன்கரா சார்பாக ஏ.கே எண்டர்டெயின்மண்ட்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. நெயில் நித்தின் முகேஷ் வில்லனாக நடித்து இருக்கிறார். சந்தோஷ் நாரயணன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைப்பெற்று வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார்.
    • இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது.

     தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான "தலைமைச் செயலகம்" சீரிஸ் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி சீரிஸான 'தலைமைச் செயலகம்' சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது.

    தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் இடைவிடாத அதிகார வேட்கை, பேராசை, வஞ்சகம் ஆகியவை பின்னிப்பிணைந்த தமிழக அரசியலின் கதையைச் சொல்லும் இந்த சீரிஸ் மே 17 அன்று ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது.

    தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், முதல்வர் அருணாசலம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார், இந்த விசாரணையால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுவதோடு அதற்காகத் தீவிரமாக இயங்க ஆரம்பிக்கிறார்கள். இதற்கிடையில், ஜார்க்கண்டில் உள்ள ஒரு தொலைதூர சுரங்க கிராமத்தில், சிபிஐ அதிகாரி நவாஸ் கான் இரண்டு தசாப்தங்கள் பழமையான கொலை வழக்கை ஆராய்கிறார்.

    பரபரப்பான சென்னையில், புறநகர்ப் பகுதியில் கிடைக்கும் துண்டிக்கப்பட்ட கை மற்றும் தலையினை குறித்து டிஜிபி மணிகண்டன் ஒரு பயங்கரமான கண்டுபிடிப்பு குறித்து விசாரணையைத் தொடங்குகிறார். இந்த கதை விரிய விரிய வேறுபட்ட பல நிகழ்வுகளை ஒன்றிணைகின்றது, காலத்தால் மறைக்கப்பட்ட மறந்துபோன உண்மைகளின் மீது ஒளி பாய்ச்சுகிறது. டிரைலர் காட்சிகல் சமூக வலைத்தலங்களில் பரவி வருகிரது. சீரிசின் டிரைலரை நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் சாய் பல்லவி இன்று தனது 32 - வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
    • சாய்பல்லவியை கவுரவிக்கும் வகையில் சாய் பல்லவி படப்பிடிப்பு தள சிறப்பு வீடியோவை 'தண்டேல்' படக்குழு இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தது.

    பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படம் ஹிட்டானது. தமிழகத்தில் இந்தப் படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் சாய் பல்லவி நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.

    முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.



    சாய் பல்லவி - நாக சைதன்யா ஜோடியாக நடிக்கும் படம் தண்டேல். இப்படத்தின் பூஜை சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. அதை தொடர்ந்து படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இப்படத்தை அல்லு அரவிந்தின் Bunny vaas GA 2 Pictures தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீகாகுலம் பகுதியில் நடந்து வருகிறது. இப்படத்திற்கு DSP இசையமைக்கவுள்ளார்.

    தண்டேல் படம் ஒரு மீனவனின் காதல் பற்றிய உண்மைக் கதையாகும். இதனால் சாய் பல்லவிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக உள்ளது. இப்படத்திற்கு நாகசைதன்யா தனது உடல் எடையைக் கூட்டியுள்ளார்.இப்படம் நல்ல கதைக்களம் கொண்ட படம் என்பதால் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது




    இந்நிலையில் சாய் பல்லவி இன்று தனது 32 - வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி சாய்பல்லவியை கவுரவிக்கும் வகையில் சாய் பல்லவி படப்பிடிப்பு தள சிறப்பு வீடியோவை 'தண்டேல்' படக்குழு இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • குட் பை படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தொடர்ந்து பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
    • அனிமல் படம் 900 கோடி வசூல் ஈட்டி ராஷ்மிகா மந்தனாவுக்கு மிகப்பெரிய படமாக மாறியது.

    தெலுங்கு திரையுலகில் முதல் முதலாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, கீதா கோவிந்தம் படம் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.

    பின்னர் தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான வாரிசு படத்தில் நடித்துள்ளார்.

    தெலுங்கில் வெளியான புஷ்பா படம் வெற்றியை தொடர்ந்து தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பட்டையை கிளப்பி மூன்று மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.

    அமிதாப் பச்சன் படமான குட் பை படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தொடர்ந்து பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

    பாலிவுட் நடிகைகள் தென்னிந்தியாவில் நடிப்பதும், தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் நடிப்பதும் பல காலமாகவே வழக்கத்தில் உள்ளது.

    கடந்த ஆண்டு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் படம் 900 கோடி வசூல் ஈட்டி ராஷ்மிகா மந்தனாவுக்கு மிகப்பெரிய படமாக மாறியது.

     

    இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் தள பதிவில் தனது அடுத்த படம் பற்றிய அப்டேட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    அதில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் ஹீரோவாக வைத்து பிரம்மாண்டமாக உருவாக உள்ள சிக்கந்தர் படத்தில் தான் தற்போது இணைந்துள்ளதாக ராஷ்மிகா மந்தனா அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு அந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் அல்லு அர்ஜூனின் புஷ்பா-2 படத்திலும், தனுஷின் குபேரா படத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

    இந்தியாவிலேயே தற்போது அதிக பட வாய்ப்புகளை கொண்டு டாப் ஹீரோயினாக மாறியுள்ள ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக மீண்டும் இந்தி பட வாய்ப்பை தட்டி பறித்துள்ளார்.

    • சண்டைக் காட்சியில் பயன்படுத்துவதற்காக ஹெலிகாப்டர்கள் புதுச்சேரியில் சுற்றி வருகின்றன
    • இதில் கேரவேனில் ரஜினி வேட்டி சட்டையுடன் இறங்கி வரும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் 170-வது படம் 'வேட்டையன்' . இப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

    இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். நெல்லை, குமரி, தூத்துக்குடி, சென்னை, ஆந்திரம், மும்பை பகுதிகளில் இதன் படப்பிடிப்புகள் நடந்து முடிந்தது.




    இந்நிலையில் இப்படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது புதுச்சேரியில் படத்தின் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றன.

    புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் 7 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் ரஜினி வெளிநாட்டவருடன் சண்டையிடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




    சண்டைக் காட்சியில் பயன்படுத்துவதற்காக ஹெலிகாப்டர்கள் புதுச்சேரியில் சுற்றி வருகின்றன. இதில் கேரவேனில் இருந்து ரஜினி வேட்டி சட்டையுடன் இறங்கி வரும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

    இந்நிலையில் ரஜினியின் 'வேட்டையன்' படம் வருகிற அக்டோபர் மாதம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்ய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 19 வருடங்களுக்கு பிறகு சச்சின் மீண்டும் வெளியாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.
    • `சச்சின்' படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து திரைக்கு கொண்டு வர ஏற்பாடு.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

    ஏற்கனவே ரஜினியின் பாட்ஷா, பாபா, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், சூர்யாவின் வாரணம் ஆயிரம், தனுசின் யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த வரிசையில் விஜய்யின் கில்லி படமும் தமிழ்நாடு முழுவதும் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டு தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. வில்லு படமும் வெளியாக இருக்கிறது.

    இந்த நிலையில் விஜய் நடித்த `சச்சின்' படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன.

    `சச்சின்' படம் 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வந்தது. இதில் விஜய் ஜோடியாக ஜெனிலியா நடித்து இருந்தார்.

    இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் டைரக்டு செய்ய, கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார்.

    'சச்சின்' சிறந்த காதல் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அதிக நாட்கள் ஓடி நல்ல வசூல் பார்த்தது. அப்போது அப்படத்துடன் ரஜினியின் 'சந்திரமுகி' கமல்ஹாசனின் `மும்பை எக்ஸ்பிரஸ்' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்தன. 19 வருடங்களுக்கு பிறகு சச்சின் மீண்டும் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பல இந்தி படங்களை சங்கீத் சிவன் இயக்கியுள்ளார்.
    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    மலையாள திரையுலகின் பிரபல இயக்குநர் சங்கீத் சிவன். 61 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சங்கீத் சிவன் உயிரிழந்தார்.

    இயக்குநர் சங்கீத் சிவன் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோததரர் ஆவார். சங்கீத் சிவன் மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். 1992 ஆம் ஆண்டு இவர் இயக்கி வெளியான "யோதா" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    பாலிவுட்டில் இவர் இயக்கிய முதல் படம் "சோர்." இதில் சன்னி தியோல் கதாநாயகனாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து கியா கூல் ஹை ஹம், யாம்லா பக்லா தீவானா 2 போன்ற பல இந்தி படங்களை சங்கீத் சிவன் இயக்கியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×