என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறப்பு வீடியோ"
- இந்நிலையில் சாய் பல்லவி இன்று தனது 32 - வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
- சாய்பல்லவியை கவுரவிக்கும் வகையில் சாய் பல்லவி படப்பிடிப்பு தள சிறப்பு வீடியோவை 'தண்டேல்' படக்குழு இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தது.
பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படம் ஹிட்டானது. தமிழகத்தில் இந்தப் படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் சாய் பல்லவி நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.
முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.
சாய் பல்லவி - நாக சைதன்யா ஜோடியாக நடிக்கும் படம் தண்டேல். இப்படத்தின் பூஜை சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. அதை தொடர்ந்து படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தை அல்லு அரவிந்தின் Bunny vaas GA 2 Pictures தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீகாகுலம் பகுதியில் நடந்து வருகிறது. இப்படத்திற்கு DSP இசையமைக்கவுள்ளார்.
தண்டேல் படம் ஒரு மீனவனின் காதல் பற்றிய உண்மைக் கதையாகும். இதனால் சாய் பல்லவிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக உள்ளது. இப்படத்திற்கு நாகசைதன்யா தனது உடல் எடையைக் கூட்டியுள்ளார்.இப்படம் நல்ல கதைக்களம் கொண்ட படம் என்பதால் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது
இந்நிலையில் சாய் பல்லவி இன்று தனது 32 - வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி சாய்பல்லவியை கவுரவிக்கும் வகையில் சாய் பல்லவி படப்பிடிப்பு தள சிறப்பு வீடியோவை 'தண்டேல்' படக்குழு இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Sai Pallavi Birthday Special ?
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 9, 2024
pic.twitter.com/r4SSLZGnOE