search icon
என் மலர்tooltip icon
    • குடிமங்கலம் காவல் துறையினா் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனா்.
    • சிறுமியை கடந்த 2020 டிசம்பரில் வெளியூருக்குக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

    உடுமலை:

    திருப்பூா் மாவட்டம், உடுமலையை சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (வயது 20), வெல்டிங் தொழிலாளி. இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தைகூறி கடந்த 2020 டிசம்பரில் வெளியூருக்குக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் பேரில் குடிமங்கலம் காவல் துறையினா் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனா். இந்த வழக்கு திருப்பூா் விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி டி.பாலு தீா்ப்பு வழங்கினாா். இதில், சந்தோஷ்குமாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

    • மாவட்ட கலெக்டர்களை பணியிடமாறுதல் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
    • திருப்பூர் மாவட்ட கலெக்டராக இருந்த வினீத் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர் :

    தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்களை பணியிடமாறுதல் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதில் திருப்பூர் மாவட்ட கலெக்டராக இருந்த வினீத் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சேலம் மாநகராட்சி ஆணையாளரான கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவர் இன்னும் சில நாட்களில் திருப்பூர் கலெக்டராக பொறுப்பேற்க உள்ளார்.  

    • 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
    • மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி நடைபெற்றது.

    அவினாசி :

    சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. 1000 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி நடைபெற்றது. அப்போது, சான்றிதழ்களை வழங்க பணம் வசூல் செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது.

    இதுகுறித்து பள்ளி நிா்வாகத்திடம் கேட்டபோது, சேவூா் பகுதியில் மின் தடை ஏற்பட்டதால் தனியாா் கடைகளில் சான்றிதழ்களை கலா் ஜெராக்ஸ் எடுப்பதற்காக மட்டுமே மாணவ, மாணவிகளிடம் தலா ரூ.100 வாங்கினோம். 25 மாணவா்கள் மட்டுமே சான்றிதழ் வாங்க வந்திருந்தனா். சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதை அடுத்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்தனா். பின்னா் அதிகாரிகள் கூறியபடி மாணவா்களிடம் பெறப்பட்ட ரூ.100-ஐ அவா்களிடம் திரும்ப வழங்கி வருகிறோம் என்றனா்.

    • ரெயில் வியாழக்கிழமை திருப்பூருக்கு 10.10 மணிக்கும், கோவைக்கு 11.05 மணிக்கும் செல்லும்.
    • சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    தாம்பரத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு சிறப்பு ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற 25-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 1-ந் தேதி ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் ரெயில் சனிக்கிழமை மாலை 5.20 மணிக்கு ஜோத்பூர் சென்றடையும். இந்த ரெயில் வியாழக்கிழமை சேலத்துக்கு இரவு 8.30 மணிக்கும், ஈரோட்டுக்கு 9.25 மணிக்கும், திருப்பூருக்கு 10.10 மணிக்கும், கோவைக்கு 11.05 மணிக்கும் செல்லும்.

    இதுபோல் ஜோத்பூரில் இருந்து 28-ந் தேதி, அடுத்த மாதம் 4-ந் தேதி மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு 7.15 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் செவ்வாய்க்கிழமை கோவைக்கு காலை 10.15 மணிக்கும், திருப்பூருக்கு 11.05 மணிக்கும், ஈரோட்டுக்கு 11.55 மணிக்கும், சேலத்துக்கு 1.05 மணிக்கும் செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.

    பல்லடம் :

    பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- பல்லடம் பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே இந்த துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பனப்பாளையம், மாதப்பூர், கணபதிபாளையம், குங்குமம் பாளையம், சிங்கனூர், பெத்தாம்பாளையம், நல்லா கவுண்டம்பாளையம், மாதேஸ்வரன் நகர், ராயர்பாளையத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • கூட்டுறவு வங்கி கோரும் மற்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களின் மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, ரேஷன் கார்டு, இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம், கூட்டுறவு வங்கி கோரும் மற்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுசான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421 2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • காலை 10 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளது.
    • விவசாயிகள் நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திருப்பூர் மத்திய பஸ் நிலையம் எதிரில் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது.

    இங்கு நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் உள் வளாக பயிற்சி நடைபெற உள்ளது. விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2248524 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

    • திருவளர்செல்வி ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
    • கல்வித்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த திருவளர்செல்வி, ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த பாலமுரளி திருப்பூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பாலமுரளி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு கல்வித்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

    • சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது.
    • பெண்கள் செல்ல முடியாத அளவில் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பி.ஏ. பி. பாசன திட்டம் என்று அழைக்கப்படும் பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர்,கோவை,மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வழியாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் பிரதான கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் கரைகளில் ஆங்காங்கே மரத்தின் நிழலில் குடிமகன்கள் அமர்ந்து தினசரி மது குடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

    அவ்வாறு மது குடித்துவிட்டு பாட்டில்கள் மற்றும் பாலிதீன் கவர்களை அங்கேயே போட்டுச் செல்வதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. பல நேரங்களில் போதை தலைக்கேறிய நிலையில் குடிமகன்கள் பாட்டில்கள் மற்றும் பாலிதீன் கவர்களை வாய்க்காலின் உள்ளே வீசி செல்லும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இங்கு மது குடிப்பதால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதனை தட்டி கேட்டால் அவர்களை எதிர்த்து பேசுவதால் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த வழியாக பெண்கள் செல்ல முடியாத அளவில் அச்சமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் குடிமகன்கள் தினசரி இதனை வாடிக்கையாக கொண்டுள்ளதால் பி.ஏ.பி. வாய்க்கால் தற்காலிக பார்களாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    எனவே போலீசார் உடனடியாக இந்த பகுதிகளில் தீவிர ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை விடுத்து வருகிறார்கள். சமூக விரோத செயல்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பாக இதனை தடுக்க வேண்டும் என விவசாயிகள்,சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • லாரிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும்.
    • 16 டயர் கொண்ட லாரிக்கு 48 டன் என்ற விதிமுறைப்படி பாரம் ஏற்ற வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்களுடன் வருவாய்த்துறை, கனிமவளத்துறை, காவல்துறை, அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்குவாரி லாரிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். உதாரணமாக 6 டயர் கொண்ட லாரிக்கு 18டன், 10 டயர் கொண்ட லாரிக்கு 28 டன், 12 டயர் கொண்ட லாரிக்கு 38 டன், 16 டயர் கொண்ட லாரிக்கு 48 டன் என்ற விதிமுறைப்படி பாரம் ஏற்ற வேண்டும்.

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். உரிய அனுமதி சீட்டுக்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் கனிமவள வருவாய் ஆய்வாளர் சிவசுப்பிரமணியம், பல்லடம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நகராட்சிக்கு சொந்தமான 52 கடைகள் கட்டப்பட்டுள்ளது.
    • புதிய கடைகள் கட்ட ஒத்துழைப்பு வழங்கவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் தினசரி மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 52 கடைகள் கட்டப்பட்டுள்ளது. சிமெண்ட் கூரைகளால் அமைக்கப்பட்டுள்ள இந்த கடைகளை அகற்றி விட்டு, ரூ.1.61 கோடி மதிப்பில் 48 கடைகள் கான்கிரீட் மேற்கூறையுடன் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து கடைகளை வாடகைக்கு எடுத்துள்ள வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாமணி தலைமையில் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார். இதில் மாற்று இடம் வழங்கப்படுவதாகவும், புதிய கடைகள் கட்ட ஒத்துழைப்பு வழங்கவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    வியாபாரிகள் தரப்பில் கட்டப்படும் புதிய கடைகளில் ஏற்கனவே வாடகைக்கு உள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். கட்டப்படும் கடைகளுக்கு குடிநீர், சுகாதார வளாகம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். நியாயமான தொகையில் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    • பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் குட்டை உள்ளது.
    • குட்டைக்கு மழைக்காலங்களில் ரோட்டில் உள்ள நீரோடை வழியாக மழைநீர் வந்து சேரும்.

    பல்லடம் :

    பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் குட்டை உள்ளது. இந்தக் குட்டைக்கு மழைக்காலங்களில் கோவை- திருச்சி மெயின் ரோட்டில் உள்ள நீரோடை வழியாக மழைநீர் வந்து சேரும்.

    இந்தக் குட்டையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, நீரோடையில் கழிவு நீரை விட ஆரம்பித்தனர். காலப்போக்கில் நீரோடை கழிவு நீர் ஓடையாக மாறி, தற்போது குட்டையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் அந்த குட்டை அருகே, கட்டடக் கழிவுகளைக் கொண்டு வந்து இரவு நேரங்களில் கொட்டி செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே ஏற்கனவே குட்டை மாசுபட்ட நிலையில், கட்டடக்கழிவுகள் மற்றும் கழிவுகளை போட்டு குட்டையை அழிக்க வேண்டாம் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    ×