search icon
என் மலர்tooltip icon
    • தென்னை விவசாயிகளுக்கு பயனளிக்கும் குறைந்த விலையில் ஏழைகளுக்கு கிடைக்கும் கள் விற்பனையை அரசு அனுமதிக்க வேண்டும்.
    • உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காத, ஏழைகளின் பட்ஜெட்டுக்குள் அடங்கும் கள் விற்பனையை அரசு அனுமதிக்க வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து செய்தியாளரிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மதுப்பழக்க த்திற்கு ஒட்டுமொத்த சமுதா யமே அடிமையாகியுள்ளது. முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஏன் பள்ளி மாணவ, மாணவியர் கூட மதுவிற்கு அடிமையாகிய மோசமான சூழ்நிலையில் உள்ளது. ஏகபோக மது விற்பனையால் சுமார் ரூ.50 விற்க வேண்டிய மதுபானப்பாட்டில் ரூ.150 க்கு விற்கப்படுகிறது. இதனால் ஏழை கூலித் தொழிலாளர்கள், மீனவர்கள், போன்ற உடல் உழைப்பாளிகள், அதிக விலை கொடுத்து மதுபானம் வாங்க முடியாமல், போதை க்காக கள்ளச்சாராயம், விஷ சாராயம் போன்றவற்றை நாடி செல்கின்றனர்.

    இதனால் மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலி போன்ற சம்பவங்கள் ஏற்படுகிறது. மேலும் மதுபானங்கள் குடிப்பதால் உடல்நல கேடு மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றது. இதனைத் தவிர்க்க உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத, ஏழைகளின் பட்ஜெட்டுக்குள் அடங்கும் கள் விற்பனையை அரசு அனுமதிக்க வேண்டும்.

    இதனால் நஷ்டத்தில் உள்ள தென்னை விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும். மக்கள் நலன், இளைஞர்களின் எதிர்காலம், சமுதாயத்தின் மீது அக்கறை உள்ள அரசாக இருந்தால் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். கள் அருந்துவதின் மூலம் உடலுக்கு தீங்கு இல்லை என்பது ஏற்கனவே நிரூபிக்கப்ப ட்டுள்ளது. உலகில் வேறு எங்கும் கள்ளிற்கு தடை இல்லை, மற்றதற்கெல்லாம் முன்னோடி அரசு என்று சொல்கின்றவர்கள் இதற்கும் முன்னோடியாக இருக்கலாமே.

    எனவே தென்னை விவசா யிகளுக்கு பயனளிக்கும் குறைந்த விலையில் ஏழைகளுக்கு கிடைக்கும் கள் விற்பனையை அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பேட்டியின் போது மாநில செயலாளர் சின்னக்காளி பாளையம் ஈஸ்வரன்,மாநில பொருளாளர் பாலசுப்பி ரமணி, ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • ஆட்களை நியமிப்பது போன்ற பொய் கணக்கு காண்பித்து முறைகேடுகள் செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.
    • ஊராட்சிகளில் நிலவும் குடிநீர் பிரச்சனை, ஊராட்சி நிர்வாகத்தையும் கவனிப்பதால் வேலை பளு அதிகரித்துள்ளது.

    பல்லடம்:

    மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்திற்கு தனி வட்டார வளர்ச்சி அலுவலர் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது;- தமிழ்நாட்டில் ஊராட்சி ஒன்றியங்களில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்ப டுகிறது. இத்திட்டத்தில் பணியாளர்களை நியமிப்பதில் பாரபட்சம், ஆட்களை நியமிப்பது போன்ற பொய் கணக்கு காண்பித்து முறைகேடுகள் செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.

    இதற்கிடையே ஊரக வளர்ச்சி துறை மூலம் மத்திய அரசின் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம், தூய்மை பாரதம், தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டம், மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்கள்செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்ட பணிகளை கவனத்தில் கொண்டு ஊராட்சிகளில் நிலவும் குடிநீர் பிரச்சனை, ஊராட்சி நிர்வாகத்தையும் கவனிப்பதால் வேலை பளு அதிகரித்துள்ளது. எனவே இது போன்ற பிரச்சனைகளை களையவும், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சிசெயலாளர் உள்ளிட்டோரின் வேலைப்பளுவை குறைக்கும் வகையில், மற்ற மாநிலங்களைப் போன்று தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கென தனி வட்டார வளர்ச்சி அலுவலர் நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பாப்பான்குளம் பிரிவு பகுதியில் செயல்பட்டு வந்த கோழிப்பண்ணை காற்றின் வேகத்தால் பலத்த சேதமடைந்தது.
    • சாமராயப்பட்டி பகுதியில் பழனி ரோட்டில் சாலையோர மரங்கள் பல சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடுமலை:

    மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. ஆனால் மாலையில் திடீரென பருவநிலையில் மாறுதல் ஏற்பட்டு வானம் மேகமூட்ட த்துடன் காணப்பட்டது.மேலும் திடீரென பலத்த சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சுமார் 20 நிமிடங்கள் நீடித்த சூறாவளிக் காற்றால் சாமரா யப்பட்டி, பாப்பான்குளம், சாளர ப்பட்டி, ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. பாப்பான்குளம் பிரிவு பகுதியில் செயல்பட்டு வந்த கோழிப்பண்ணை காற்றின் வேகத்தால் பலத்த சேதமடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான கோழிக்கு ஞ்சுகள் உயிரிழந்தன. மேலும் சாமராயப்பட்டியைச் சேர்ந்த விவசாயி நந்தகோபால் என்பவரின் தோட்டத்தில் 18 தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன.

    மேலும் சுரேஷ் என்ற விவசாயி தோட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் ஒரு தென்னை மரம் சேதமானது. சாளரப்பட்டியைச் சேர்ந்த விவசாயியின் தோட்டத்தில் 2 ஏக்கர் வாழைமரங்கள் சேதம டைந்துள்ளது. இதுபோல பல விவசாயி களின் தோட்டத்தில் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சேதமடைந்தது.மேலும் ஆலங்கட்டி மழையால் தக்காளி,மிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிப் பயிர்க ளும் சேதமடைந்து ள்ளன.எனவே வேளாண்மைத்துறை யினர் மற்றும் வருவாய்த்து றையினர் முழுமையாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சாமராயப்பட்டி பகுதியில் பழனி ரோட்டில் சாலையோர மரங்கள் பல சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக பொக்லைன் எந்திரங்கள் மூலம் மரங்கள் அகற்றப்பட்டு போக்குவ ரத்து சீரமைக்க ப்பட்டது.அத்துடன்ரெட்டி பாளையம், பாப்பான்குளம், சாமராயப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் காற்றின் வேகத்தால் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது.இதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளது. சுமார் 20 நிமிடங்கள் காற்று ஆடிய ருத்ர தாண்டவத்தால் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது.

    அக்னி வெயில் கொளுத்தும் காலத்தில் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்த சம்பவம் மடத்துக்குளம் பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தி யுள்ளது.அதேநேரத்தில் மரங்கள் சாய்ந்து, மின் கம்பங்கள் விழுந்து பல வகைகளில் சேதம் ஏற்பட்ட போதும் உயிரிழப்பு ஏற்படாதது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.பல கிராமங்கள் இருளில் மூழ்கியு ள்ளதால் முழுமையான சேதம் குறித்த விபரங்கள் இன்று அதிகாரிகளின் ஆய்வின் மூலமாகவே தெரிய வரும்.

    • 500 வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சிறிய ரக மின் உற்பத்தி ஆலைகள், ஊரக வளர்ச்சித் துறை வாயிலாக ஊராட்சிகள் தோறும் அமைக்கப்பட்டன.
    • இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளி மின்சார திட்டத்தை முறையாக செயல்படுத்தினால் மின்சாரம் சேமிக்கப்படும்.

    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் சூரிய ஒளி மின் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட சோலார் பேனல்கள் பயனற்று வீணாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2011 - 12ம் ஆண்டு சோலார் தெருவிளக்குகள் அமைக்கும் திட்டத்துக்காக 500 வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சிறிய ரக மின் உற்பத்தி ஆலைகள், ஊரக வளர்ச்சித் துறை வாயிலாக ஊராட்சிகள் தோறும் அமைக்கப்பட்டன.சூரிய ஒளி வாயிலாக இயங்கக்கூடிய தெருவிள க்குகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டது.

    சோலார் மின் திட்டம் வாயிலாக தெரு விளக்குகள் உட்பட கிராமங்களில் பயன்படுத்தப்படும் பொது மோட்டார்களுக்கும் இதைப் பயன்படுத்த திட்டமிட ப்பட்டது.இத்திட்டம் வாயிலாக கிராமங்களின் மின் பயன்பாட்டுக்கான செலவுகள் பெரிதும் குறையும் என எதிர்பார்க்க ப்பட்டது.அவ்வகையில் மாவட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம், பல்லடம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்கள் சிலவற்றில் சோலார் பேனல் அமைக்கப்பட்டது.

    மின்சாரத்தை சேமிக்கவும், மாற்று எரி சக்தியான சூரிய ஒளியை முழு அளவில் பயன்படுத்தக் கூடிய வகையில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் போதிய பராமரிப்பு, கண்காணிப்பு இல்லாததால் முடங்கிவிட்டது. கிராமங்களில் நிறுவப்பட்ட சோலார் பேனல்கள் பயன்பாடின்றி காணப்படுகின்றன. தன்னார்வ லர்கள் கூறுகையில், சில கிராம ங்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சோலார் தெரு விளக்குகளும், நாளடைவில் காணாமல் போனது. இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளி மின்சார திட்டத்தை முறையாக செயல்படுத்தினால் மின்சாரம் சேமிக்கப்படும். அரசுத்துறைகளின் தேவையற்ற செலவுகள் குறையும் என்றனர்.

    • தொழிலாளியின் குடும்பத்தினர் தங்குவதற்கு இடமின்றி தற்போது வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
    • அரசு உதவ வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடத்தில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் விசைத்தறி தொழிலாளி கருப்பசாமி(52) என்பவரது வீட்டின்மேற்கூரை சூறைக்காற்றால் முழுவதுமாக தூக்கி வீசப்பட்டது. மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அதன் இடிபாடுகள் வீட்டில் இருந்த மிக்ஸி, கிரைண்டர், பேன், டிவி, உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் மேல் விழுந்து அனைத்தும் முழுமையாக சேதம் அடைந்தன.

    இதனால் தற்போது அந்த தொழிலாளியின் குடும்பத்தினர் தங்குவதற்கு இடமின்றி தற்போது வீதியில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையே கருப்புசாமி வீடு அருகே இருந்த 2 ஓட்டு வீடுகளும், சூறைக்காற்றால் கடுமையாக சேதமடைந்துள்ளன. சூறைக்காற்றில் வீடுகள்,மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்த நிலையில், அரசு உதவ வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கலெக்டரின் உத்தரவில், கனிம வள உதவி கமிஷனர் வள்ளல், கண்காணிப்பு அதிகாரியால் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை.
    • விவசாயிகள்-பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் குறித்து கல் குவாரி உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி விவசாயிகள் அனுமதியின்றி இயங்கும் கல்குவாரி முறைகேடு குறித்து கனிமவளத்துறை யினரிடம் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குவாரி முறைகேடுகள் குறித்து குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் மக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீதும் கனிம வளத்துறையினர் நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

    கடந்த 2022 நவம்பர் 14-ந் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலக கனிமவளத்துறை அலுவலகத்தில் கலெக்டர் வினீத் அதிரடி ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். ஆனாலும் துறை அதிகாரிகளின் செயல்பாடு திருப்தி அளிக்கும்வகையில் இல்லை. இதனால் கனிமவ ளத்துறை உதவி கமிஷனர் வள்ளலை பதவியில் இருந்து விடுவித்து கலெக்டர் வினீத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

    கலெக்டரின் உத்தரவில், கனிம வள உதவி கமிஷனர் வள்ளல், கண்காணிப்பு அதிகாரியால் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை.மாதாந்திர விவசாயிகள் கூட்டம், அமைச்சர் நடத்திய ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்கவில்லை. கனிமவள த்துறை அலுவல கத்தில் சம்பந்தமில்லாமல் ஒரு பெண் இருப்பதாக வைக்கப்பட்ட புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மாவட்ட நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளார். இத்தகைய காரணங்களுக்காக உதவி இயக்குனர் பணியில் இருந்து வள்ளல் நீக்கப்படுகிறார்.அவருக்கு பதில் புவியியலாளர் (ஜியாலஜிஸ்ட்) சச்சின் ஆனந்த், கூடுதல் பொறுப்பாக மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனராக நியமிக்க ப்படுகிறார் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து வள்ளலிடம் நிருபர்கள் கருத்து கேட்க முயன்ற போது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

    இந்தநிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலக கனிமவ ளத்துறை அலுவலகத்தில் கோமதி என்பவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். அவரை தனிப்பட்ட முறையில் உதவி இயக்குனர் வள்ளல் பணியமர்த்தி இருந்தார். அரசின் சார்பில் நியமிக்கப்படாமல் தனிப்பட்ட முறையில் பணியமர்த்தியதால் இது குறித்து விளக்கம் அளிக்க கலெக்டர் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் வள்ளல் எந்தவித விளக்கமும் அளிக்கவில்ைல.

    மேலும் கோமதிக்கு கல்குவாரி உரிமையாளர்கள் தரப்பில் இருந்து மாதந்தோறும் சமபளம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கனிம வளத்துறை அலுவலகத்தில் விவசாயிகள்-பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் குறித்து கல் குவாரி உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து கோமதியை பணியில் இருந்து நீக்க இன்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • மறுமார்க்கத்தில் சேலம்- கோவை (06803) ெரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
    • ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் விரைவு ெரயில் 31ந் தேதி வரை ஏதேனும் ஒரு இடத்தில் 50 நிமிடங்கள் நின்று செல்லும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    கோவை- சேலம் மெமு ெரயில் சேவை 31-ந் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

    இது குறித்து சேலம் ெரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு- சேலம் ரெயில் நிலையம் இடையே தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.ஆகையால் வருகிற 31ந்தேதி வரை கோவை- சேலம் (06802) மெமு ெரயில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் சேலம்- கோவை (06803) ெரயிலும் ரத்து செய்யப்படுகிறது.இது போன்றே, ஆலப்புழா- தன்பாத் (13352) ெரயில் 31-ந் தேதி வரை ஏதேனும் ஒரு இடத்தில் 30 நிமிடங்கள் வரை நின்று செல்லும். எர்ணாகுளம்- டாடாநகர் (18190) புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் விரைவு ெரயில் 31ந் தேதி வரை ஏதேனும் ஒரு இடத்தில் 50 நிமிடங்கள் நின்று செல்லும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    குன்னத்தூர்:

    குன்னத்தூர், 16 வேலம்பாளையம், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இந்த மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் குன்னத்தூர், ஆதியூர், தளபதி, கவுதம்பாளையம், கருமஞ்செறை, நவக்காடு, வெள்ளரவெளி, சின்னையம்பாளையம், வேலம்பாளையம், கணபதிபாளையம், செட்டி ஊட்டை, குறிச்சி, நல்லி கவுண்டம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், சொக்கனூர் ஆகிய பகுதிகளில் 18-ந்தேதி காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என பெருந்துறை மின்வாரிய பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • ரேசன் அரிசி முறைகேடு நடைபெறாமல் இருக்க மில் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
    • காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்தி ஆகியோரும் சோதனையில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்குளி:

    குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல் துறை இயக்குநர்அருண் உத்தரவின்பேரில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மற்றும் ஈரோடு சரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஸ்குமார் ஆகியோர் திருப்பூர் ஊத்துகுளி பகுதியில் உள்ள அரிசி ஆலைகளில் சோதனை நடத்தினர்.அவர்களுடன் காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்தி ஆகியோரும் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரேசன் அரிசி முறைகேடு நடைபெறாமல் இருக்க மில் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். . முறைகேடுகள் பற்றி தெரியவந்தால் சம்மந்தபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்கை விடுத்தனர். 

    • பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு ஏற்ப ஆட்டோ மீட்டா் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும்.
    • தமிழகத்திலும் ஆட்டோக்களுக்கு வாகனத்தை புதுப்பிக்கும்போது அரசு சாா்பில் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றனா்.

    திருப்பூர்:

    திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.திருப்பூா் குமரன் சிலை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணியின் மாவட்டத் தலைவா் நாகராஜ் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளா்கள் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு ஏற்ப ஆட்டோ மீட்டா் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றுக்கான வரியை மத்திய, மாநில அரசுகள் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும். கட்டுமான தொழிலாளா்களுக்கு ஒதுக்கீடு செய்ததுபோல ஆட்டோ தொழிலாளா்களுக்கும் அரசு வீடு ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    அனைத்து ஆட்டோ தொழிலாளா்களும் நலவாரியத்தில் பதிவு செய்வதற்கு ஏதுவாக ஆன்லைன் பதிவை எளிதாக்க வேண்டும். ஆந்திர மாநிலத்தில் உள்ளதுபோல தமிழகத்திலும் ஆட்டோக்களுக்கு வாகனத்தை புதுப்பிக்கும்போது அரசு சாா்பில் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றனா்.

    • இந்த பயிற்சி வகுப்புகள் 100 நாள்கள் தொடா்ச்சியாக நடத்தப்படும்.
    • இந்தப் பயிற்சி வகுப்பில் 150 இளைஞா்கள் வரையில் கலந்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    நான் முதல்வன் திட்டத்தின்கீழ் வங்கிப் பணி உள்ளிட்ட அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர மே 20 -ந் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக பணியாளா் தோ்வாணையம், ெரயில்வே பணியாளா் தோ்வாணையம் மற்றும் வங்கிப் பணியாளா் தோ்வாணையம் ஆகியவற்றின் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தமிழகத்தைச் சோ்ந்த போட்டித் தோ்வாளா்கள் வெற்றி பெற உதவிடும் வகையில் மாவட்டந்தோறும் கட்டணமில்லாப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.இந்த பயிற்சி வகுப்புகள் 100 நாள்கள் தொடா்ச்சியாக நடத்தப்படும்.

    பயிற்சிக்கான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்தப் பயிற்சி வகுப்பில் 150 இளைஞா்கள் வரையில் கலந்து கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    எனவே, திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டத்தின் பயிற்சி மையத்தில் சேர மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான இளைஞா்கள் நேரடியாக இணையதளம் வாயிலாக மே 20 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 94990-55944 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000, அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
    • ஜூன் 30ந் தேதி வரை இத்திட்டத்தில் இணைய அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    பெண்கள், குழந்தைகள் பெயரில் முதலீடு செய்யும் வகையில் மகளிா் மேன்மை சேமிப்பு பத்திர திட்டம் அஞ்சல் அலுவலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்லடம் அஞ்சல் துறை சாா்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மகிளா சம்மன் சேவிங் எனப்படும் மகளிா் மேன்மை சேமிப்புப் பத்திரத் திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பெயரில் சேமிப்புக் கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம்.

    இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000, அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். காலாண்டுக்கு ஒரு முறை 7.5 சதவீதம் கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. சேமிப்புப் பணத்தில் 40 சதவீதத்தை ஓராண்டுக்குப் பின் எடுத்துக் கொள்ளலாம்.

    இத்திட்டத்தின் முதிா்வு காலம் இரண்டு ஆண்டுகள். கணக்குதாரா் அல்லது பாதுகாவலா் இறந்தாலும், கணக்குதாரா் கடும் நோய்வாய்ப்பட்டாலும் ஆவணங்களை சமா்ப்பித்து முன்முதிா்வு செய்ய முடியும். ஜூன் 30ந் தேதி வரை இத்திட்டத்தில் இணைய அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ள திருப்பூா் தலைமை அஞ்சல் அலுவலகத்தையோ அல்லது அந்தந்த பகுதி கிளை அஞ்சல் அலுவலகங்களையோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×