search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power cuts"

    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
    • மின்சார தடையால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனை அமைந்துள்ளது. இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    மேலும் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி முதல் திடீரென மின்சாரம் தடைபட்டது. வெகு நேரம் ஆகியும் மின் இணைப்பு வழங்க வில்லை. இது குறித்து மின்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் தொடர்பு கொண்ட போது எவ்வித பதிலும் அளிக்க வில்லை.

    இன்று அதிகாலை 4 மணி வரை மின்சாரம் வழங்கப்பட வில்லை. இந்த அறிவிக்கப்பட்டாத மின்சார தடையால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதியடைந்தனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்த முதியோர்களும் அவதிக்குள்ளாகினர்.

    • மேலூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    • தேவையான அளவுக்கு உயரழுத்த மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. தற்போது 2நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் பகல் நேரங்களிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    மேலும் பகல் நேரங்களில் மிக குறைந்த மின்னழுத்தமே பிரச்சினை ஏற்படுகிறது. வீட்டில் இயக்கப்படும் மோட்டார், பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின் ஆகியவை செயல்படுவதில்லை. இதனால் வெளியே செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாத ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    கடை மற்றும் வீடுகளிலும் பல்புகள் அவ்வப்போது மினிட்டாம்புச்சியை மின்னுவது போல் விட்டுவிட்டு வருகிறது. இதனால் பல்புகள் செயலிழந்து விடுகிறது. எனவே மேலூர் நகர்பகுதியில் அறிவிக்காத மின்வெட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    குறைந்த அழுத்த மின்சாரம் வருவதை சரி செய்து தேவையான அளவுக்கு உயரழுத்த மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் கடும் அவதி- மறியல்
    • மின்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் மின்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இதில் அரியாங்குப்பம் கிழக்கு மற்றும் மேற்கு பஞ்சாயத்து, அரியாங்குப்பம் நகரப் பகுதி, வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம், காக்காயந்தோப்பு, ராதா கிருஷ்ணன் நகர், மணவெளி, ஓடைவெளி, டோல்கேட் மற்றும் நோணாங்குப்பம் வரை மின் விநியோகம் வழங்கப்பட்டும் பரா மரித்தல் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக இரவு 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் மின்சாரம் தடைபட்டு வருகிறது.

    இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு 9 மணிக்கு தடைபடும் மின்சாரம் எப்ப வரும்? என எதிர்பார்த்து கொண்டு தங்களது தூக்கத்தையும் தொலைத்து பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அரியாங்குப்பம் கோட்டை மேடு சந்திப்பில் ஒரு சிலர் திடீர் சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்து வந்த அரியாங்குப்பம் போலீசார் அவர்களை சமாதா னப்படுத்தி மின் இணைப்பு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

    கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைத்து மின் விநியோகம் தடை இல்லாமல் வழங்க மின்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதே நிலை நீடிக்கும் எனில் புதுவை-கடலூர் சாலையில், பாய், தலையணையுடன் படுத்து தூங்கும் போராட்டமும், மின்துறை அலுவலகத்திற்கு மலர் வளையம் வைக்கும் போராட்டமும், நடத்த உள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரி வித்தனர்.

    துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    குன்னத்தூர்:

    குன்னத்தூர், 16 வேலம்பாளையம், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இந்த மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் குன்னத்தூர், ஆதியூர், தளபதி, கவுதம்பாளையம், கருமஞ்செறை, நவக்காடு, வெள்ளரவெளி, சின்னையம்பாளையம், வேலம்பாளையம், கணபதிபாளையம், செட்டி ஊட்டை, குறிச்சி, நல்லி கவுண்டம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், சொக்கனூர் ஆகிய பகுதிகளில் 18-ந்தேதி காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என பெருந்துறை மின்வாரிய பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • இரவு சுமார் 11.30 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது,
    • மின்சாரம் நேற்று இரவு முழுவதும் இல்லை

    கடலூர்:

    திட்டக்குடி அருகே வாகையூர்,ஆக்க னூர், பாளையம், இடைச்செ ருவாய் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது இன்று காலை 9.30 மணி வரை மின்சாரம் இல்லாமல் பள்ளி செல்லும் மாணவ மாணவர்கள், குழந்தைகள், முதியோர் உட்பட மின்சாரம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டனர்.     

    நேற்று மழை காற்று அதிக அளவில் இல்லை, இருப்பினும் மின்சாரம் நேற்று இரவு முழுவதும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் தங்கு தடை இன்றி பொது மக்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • துணை மின்நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் நடைடிபெறவுள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் : 

    பல்லடம் மின் கோட்டம் காளிவேலம்பட்டி துணை மின்நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வருகிற 13-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் வருமாறு:- செம்மிபாளையம், சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, அண்ணா நகா், ஊஞ்சபாளையம், ராசாகவுண்டம்பாளையம், லட்சுமி மில்ஸ், சாமிகவுண்டன்பாளையம், பெரும்பாளி, மின் நகா், சின்னியம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மின்வாரிய செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
    • பாலாஜி நகா் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடக்கிறது.
    நிலக்கரி வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்றும், அதனால் கர்நாடகத்தில் மின்வெட்டை அமல்படுத்தக்கூடாது என்றும் மின்துறை அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். #kumaraswamy
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் மின்சார பிரச்சினைகள் தொடர்பாக மின்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று பெங்களூரு விதான சவுதாவில் ஆலோசனை நடத்தினார். மின்துறை அவர் வசமே உள்ளது. இந்த கூட்டத்தில் அந்த துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து குமாரசாமி அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை. அடுத்து வரும் காலங்களிலும் கர்நாடகத்தில் மின்வெட்டை அமல்படுத்தக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி மத்திய அரசு, கர்நாடகத்திற்கு போதிய அளவு நிலக்கரியை ஒதுக்கீடு செய்யவில்லை. இதுகுறித்து மத்திய நிலக்கரித்துறை மந்திரிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளார்.



    முடிந்தவரை நிலக்கரியை வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. நிலக்கரியை ஒதுக்கியவுடன், அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் கர்நாடகத்திற்கு கொண்டு வந்து சேர்க்க ரெயில்வேத்துறை உதவ வேண்டும் என்று கேட்டுள்ளோம். கர்நாடக மின்சாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் டெல்லிக்கு சென்றுள்ளனர். அவர்கள் ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை அதிகாரிகளை சந்தித்து, நிலக்கரி விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

    நிலக்கரி பற்றாக்குறையை தடுக்க மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. மேலும் சூரியசக்தி உற்பத்தி மற்றும் நீர்மின் உற்பத்தி மூலம் மின் பற்றாக்குறையை சமாளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு மின்சாரம் தடையின்றி கிடைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.#kumaraswamy
    தமிழகத்தில் மின்வெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்வதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். #MinisterThangamani
    புதுடெல்லி:

    தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி டெல்லியில் இன்று மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கமணி கூறியதாவது:-

    தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பை அதிகரிப்பதற்காக மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். கூடுதல் நிலக்கரி வழங்குவதாக மத்திய அரசு கூறியுள்ளது. தினமும் நிலக்கரி அனுப்புவதாகவும் கூறியுள்ளார்கள்.



    தமிழகத்தில் மழை காரணமாக மின்சார தேவை குறைந்திருப்பதால் உற்பத்தியையும் குறைத்திருக்கிறோம். வடசென்னையில் 3 நாட்களுக்கான  நிலக்கரியும், தூத்துக்குடியில் 6 நாட்களுக்கான நிலக்கரியும் கையிருப்பு உள்ளது. ஒடிசாவில் ஏற்பட்ட மழை காரணமாகவே கடந்த வாரத்திற்கான நிலக்கரி கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

    தமிழகத்தில் மின்வெட்டு என எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றன. அரசியல் செய்வதற்காக மின்வெட்டு இருப்பதாக பேசி வருகிறார்கள். தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு என்பதே வராது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterThangamani

    ×