திருப்பூர் அரிசி ஆலைகளில் அதிரடி ஆய்வு

ரேசன் அரிசி முறைகேடு நடைபெறாமல் இருக்க மில் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்தி ஆகியோரும் சோதனையில் ஈடுபட்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஊத்துக்குளி:

குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல் துறை இயக்குநர்அருண் உத்தரவின்பேரில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மற்றும் ஈரோடு சரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஸ்குமார் ஆகியோர் திருப்பூர் ஊத்துகுளி பகுதியில் உள்ள அரிசி ஆலைகளில் சோதனை நடத்தினர்.அவர்களுடன் காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்தி ஆகியோரும் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ரேசன் அரிசி முறைகேடு நடைபெறாமல் இருக்க மில் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். . முறைகேடுகள் பற்றி தெரியவந்தால் சம்மந்தபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்கை விடுத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com