search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Solar panels"

    • ஒவ்வொருவர் வீட்டிலும் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமிக்க முடியும்.
    • மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யவும் இத்திட்டம் உதவியாக இருக்கும்.

    காஞ்சிபுரம்:

    வீடுகளில் சோலார் பேனல் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என காஞ்சிபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஒவ்வொருவர் வீட்டிலும் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமிக்க முடியும். மேலும் உபரி மின்சாரத்தை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரூ.15,000 முதல் ரூ.18 ஆயிரம் வரை பெற முடியும். மேலும் இத்திட்டத்தில் இணைவோர்க்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    குறிப்பாக மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யவும் இத்திட்டம் உதவியாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய விரும்புவோர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியை அஞ்சல் துறையில் பணியாற்றும் தபால்காரர்களும் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பெற உங்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தையோ அல்லது உங்கள் பகுதியில் தினம்தோறும் வரும் தபால்காரரை அணுகி விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா
    • புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

    வரும் ஏப்ரல்-மே மாதத்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பல முக்கிய அம்சங்களை குறித்து உறுப்பினர்களிடையே தெரிவித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 2 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளன.

    வீடுகளில் சூரிய மின் தகடுகள் பதிக்கப்பட்டும் திட்டம் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் கிடைக்கும்.

    அங்கன்வாடிகளுக்கு போஷன் 2.0 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    மீன்வளத்துறைக்காக தனி துறை அமைக்கப்பட்டதில் 2013-14லிருந்து கடல் உணவு ஏற்றுமதி இரட்டிப்பாகி உள்ளது.

    இவ்வாறு நிதியமைச்சர் கூறினார்.

    • புறம்போக்கு நிலங்களில் மட்டும் நடந்துவந்த இந்த பணி திடீரென மலைப்பகுதி மற்றும் நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
    • பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன்பு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சோலார் பேனல்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    புறம்போக்கு நிலங்களில் மட்டும் நடந்துவந்த இந்த பணி திடீரென மலைப்பகுதி மற்றும் நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மின்சாரம் தாக்கி பொதுமக்கள், கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. அனுமதி யின்றி வைக்கப்பட்ட சோலார் பேனல்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளித்த தால் அவை அகற்ற ப்பட்டன.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் நீர்வழி த்தடங்களில் மீண்டும் சோலார் பேனல்கள் அமைக்க ப்பட்டு வருகின்றது. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரி கள் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இந்த பணிகள் மேற்கொள்ள முறையான அனுமதி பெறப்பட்டு ள்ளதா என தெரிய வில்லை. எனவே பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன்பு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • பல லட்சக்கணக்கான விசைத்தறியாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்
    • பொதுக்குழு கூட்டத்திற்கு சோமனூர் சங்க துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    மங்கலம்:

    கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் சோமனூர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு சோமனூர் சங்க துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் குமாரசாமி, துணைசெயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பூபதி ஆகியோர் முன்னிலையில் கிளை சங்க பொறுப்பாளர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    நிலுவை மின் கட்டணத்திற்கு வட்டி அபராதம் ஏதும் இல்லாமல் மின் கட்டணம் செலுத்த அரசு நடவடிக்கை எடுக்ககோரி ஒவ்வொரு விசைத்தறியாளரும் தனித்தனியாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்புவது , தமிழக அரசு 25 சதவீத மானிய விலையில் சூரியஒளி மின் உற்பத்தி தகடுகள் வழங்க வேண்டும்.

    குறைந்த கூலியின் அடிப்படையில் தொழில் செய்து வரும் பல லட்சக்கணக்கான விசைத்தறியாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    • 500 வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சிறிய ரக மின் உற்பத்தி ஆலைகள், ஊரக வளர்ச்சித் துறை வாயிலாக ஊராட்சிகள் தோறும் அமைக்கப்பட்டன.
    • இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளி மின்சார திட்டத்தை முறையாக செயல்படுத்தினால் மின்சாரம் சேமிக்கப்படும்.

    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் சூரிய ஒளி மின் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட சோலார் பேனல்கள் பயனற்று வீணாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2011 - 12ம் ஆண்டு சோலார் தெருவிளக்குகள் அமைக்கும் திட்டத்துக்காக 500 வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சிறிய ரக மின் உற்பத்தி ஆலைகள், ஊரக வளர்ச்சித் துறை வாயிலாக ஊராட்சிகள் தோறும் அமைக்கப்பட்டன.சூரிய ஒளி வாயிலாக இயங்கக்கூடிய தெருவிள க்குகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டது.

    சோலார் மின் திட்டம் வாயிலாக தெரு விளக்குகள் உட்பட கிராமங்களில் பயன்படுத்தப்படும் பொது மோட்டார்களுக்கும் இதைப் பயன்படுத்த திட்டமிட ப்பட்டது.இத்திட்டம் வாயிலாக கிராமங்களின் மின் பயன்பாட்டுக்கான செலவுகள் பெரிதும் குறையும் என எதிர்பார்க்க ப்பட்டது.அவ்வகையில் மாவட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம், பல்லடம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்கள் சிலவற்றில் சோலார் பேனல் அமைக்கப்பட்டது.

    மின்சாரத்தை சேமிக்கவும், மாற்று எரி சக்தியான சூரிய ஒளியை முழு அளவில் பயன்படுத்தக் கூடிய வகையில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் போதிய பராமரிப்பு, கண்காணிப்பு இல்லாததால் முடங்கிவிட்டது. கிராமங்களில் நிறுவப்பட்ட சோலார் பேனல்கள் பயன்பாடின்றி காணப்படுகின்றன. தன்னார்வ லர்கள் கூறுகையில், சில கிராம ங்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சோலார் தெரு விளக்குகளும், நாளடைவில் காணாமல் போனது. இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளி மின்சார திட்டத்தை முறையாக செயல்படுத்தினால் மின்சாரம் சேமிக்கப்படும். அரசுத்துறைகளின் தேவையற்ற செலவுகள் குறையும் என்றனர்.

    • தற்போது தற்காலிகமாக பஸ்கள் நின்று திரும்புவதால் இப்பணி சற்று தாமதமாகி வருகிறது.
    • மேற்கூரையில் சோலார் மின் உற்பத்தி செய்ய தகடுகள் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் காமராஜ் ரோட்டில் உள்ளது. இதில் ஏறத்தாழ ரூ.40 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது.பஸ் நிலையத்தில் 45 பஸ்கள் நிற்கும் வசதி, தரை தளத்தில் 84 கடைகள், முதல் தளத்தில் 3உணவு விடுதிகள் அமைந்துள்ளன. இதுதவிர நிர்வாக அலுவலகம், போக்குவரத்து கழக நேரக்காப்பாளர் அலுவலகங்களும் உள்ளன. 4 பகுதிகளில் பொதுக்கழிப்பிடம், எலக்ட்ரிக் வாகனம் சார்ஜிங் ஸ்டேஷன், கண்காணிப்பு கேமரா, பஸ் புறப்பாடு அறிவிப்பு வசதி, பயணிகள் இருக்கை வசதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட வசதிகளும் இடம் பெற்றுள்ளன.கடைகளுக்கான ஏலம் முடிந்துள்ளன. வளாகம் முழுவதும் கட்டுமான பணி முற்றிலும் நிறைவடைந்து பெயின்டிங் மற்றும் நகாசு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

    பஸ்கள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதியில் இரு பெரிய அளவிலான ஆர்ச் அமைக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது. ஆர்ச் அமையும் இடத்தில் தற்போது தற்காலிகமாக பஸ்கள் நின்று திரும்புவதால் இப்பணி சற்று தாமதமாகி வருகிறது.

    பஸ் நிைலய பிரதான கட்டடத்தின் மேற்கூரையில் சோலார் மின் உற்பத்தி செய்ய தகடுகள் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் 50 கே.வி., மின்சாரம் பெறப்படும். அதனை மின் வாரியத்துக்கு நேரடியாக வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.வாரியத்துக்கு வழங்கும் மின் அளவுக்கு ஏற்ப மாநகராட்சிக்கு மின் கட்டணத்தில் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.கட்டுமான பணிகள் அதிகபட்சமாக இன்னும் ஒரு மாத காலத்துக்குள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால் விரைவில் பணிகள் முடிந்து இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

    ×