search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "finance ministry"

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா
    • புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

    வரும் ஏப்ரல்-மே மாதத்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பல முக்கிய அம்சங்களை குறித்து உறுப்பினர்களிடையே தெரிவித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 2 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளன.

    வீடுகளில் சூரிய மின் தகடுகள் பதிக்கப்பட்டும் திட்டம் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் கிடைக்கும்.

    அங்கன்வாடிகளுக்கு போஷன் 2.0 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    மீன்வளத்துறைக்காக தனி துறை அமைக்கப்பட்டதில் 2013-14லிருந்து கடல் உணவு ஏற்றுமதி இரட்டிப்பாகி உள்ளது.

    இவ்வாறு நிதியமைச்சர் கூறினார்.

    • வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் கடன் சுமை குறைவு
    • வர்த்தக நிறுவனங்களின் முடிவெடுக்கும் திறனை பயங்கரவாதம் பாதிக்கிறது

    நாட்டின் பொருளாதார சிந்தனையை வகுக்க உதவும் அமைப்பான "நிதி ஆயோக்", இந்திய நிதித்துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கவுடில்யா பொருளாதார சந்திப்பு (Kautilya Economic Conclave) எனும் பொருளாதார நிபுணர்களின் சந்திப்பு கூட்டம் இந்திய தலைநகர் புது டெல்லியில் நடைபெற்றது.

    இதில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டின் மொத்த கடன் தொகையை குறைக்க வழி தேடுகிறோம். கடனை குறைக்க, வளர்ந்து வரும் நாடுகள் கடைபிடிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். நமது நாட்டு கடன் தொகையை குறைத்தாக வேண்டியது கட்டாயம். வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் கடன் அதிகம் அல்ல. ஆனாலும் எதிர்கால சந்ததியினர் இதன் தாக்கத்தை அனுபவிக்காத வகையில் பொறுப்புணர்ச்சியுடன் நாம் நடந்து கொள்ள வேண்டும். இந்த திசையில் தற்போது அரசாங்கத்தின் முயற்சிகள் சீராக்கப்பட்டு வருகிறது. நிச்சயம் இதை குறைத்து விடுவோம் என நம்புகிறேன். ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு, உலக வர்த்தக நிறுவனம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் செயல்திறனும் பயன்பாடும் குறைந்து வருகிறது. போர்கள் மற்றும் நாடுகளுக்கு இடையேயான சச்சரவு மற்றும் பயங்கரவாதம், நிறுவனங்கள் நீண்ட கால வர்த்தக முடிவுகளை எடுப்பதை தடுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த மார்ச் மாத இறுதி வரை உள்ள தரவுகளின்படி, மத்திய அரசாங்கத்தின் கடன் ரூ.155.6 டிரில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக கடனும், அதை அடைப்பதற்கான அதிக செலவினங்களும், 'கிரெடிட் ரேட்டிங்' எனப்படும் வாங்கும் கடனை திருப்பி அடைக்கும் திறனுக்கான தர வரிசை பட்டியலில் இந்தியாவை முன்னேற முடியாமல் தடுக்கிறது.

    இந்த ஆண்டு ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகியிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. #GST #January2019
    புதுடெல்லி :

    நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலுக்கு வந்தது.

    இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டது.



    இந்த ஆண்டின் ஜனவரி மாத ஜி.எஸ்.டி வரி வசூல், ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி. வரி வசூல், ஜூலை மாதத்தில் ரூ.95 ஆயிரம் கோடியாகவும், ஆகஸ்டு மாதத்தில் ரூ.91 ஆயிரம் கோடியாகவும், செப்டம்பர் மாதம் ரூ.92,150 கோடியாகவும், அக்டோபர் மாதம் ரூ.83 ஆயிரம் கோடியாகவும், நவம்பர் மாதம் ரூ.80,808 கோடியாகவும், டிசம்பர் மாதத்தில் ரூ.94 ஆயிரம் கோடியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #GST #January2019
    ரூபாய் நியாயமற்ற அளவுக்கு சரிந்து போய்விடாமல் தடுப்பதை உறுதி செய்வதற்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எல்லாவற்றையும் செய்யும் என சுபாஷ் சந்திர கார்க் கூறியுள்ளார். #SubhashChandraGarg #IndianRupee #RupeeValue
    புதுடெல்லி:

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருகிறது. நேற்று சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.72.91 ஆனது. வர்த்தக போர் அச்சம், வங்கிகள், இறக்குமதியாளர்கள் குறிப்பாக எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இடையே அமெரிக்க டாலருக்கு ஏற்பட்டு உள்ள தொடர் கிராக்கி ஆகியவற்றின் காரணமாக ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது என்று கூறப்படுகிறது.

    ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் நேற்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார். அதில் அவர், “ரூபாய் நியாயமற்ற அளவுக்கு சரிந்து போய்விடாமல் தடுப்பதை உறுதி செய்வதற்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எல்லாவற்றையும் செய்யும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.  #SubhashChandraGarg #IndianRupee #RupeeValue
    ×