என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - தொழிலாளிக்கு  20 ஆண்டுகள் சிறை தண்டனை
    X

    கோப்புபடம்

    சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

    • குடிமங்கலம் காவல் துறையினா் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனா்.
    • சிறுமியை கடந்த 2020 டிசம்பரில் வெளியூருக்குக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

    உடுமலை:

    திருப்பூா் மாவட்டம், உடுமலையை சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (வயது 20), வெல்டிங் தொழிலாளி. இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தைகூறி கடந்த 2020 டிசம்பரில் வெளியூருக்குக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் பேரில் குடிமங்கலம் காவல் துறையினா் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனா். இந்த வழக்கு திருப்பூா் விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி டி.பாலு தீா்ப்பு வழங்கினாா். இதில், சந்தோஷ்குமாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

    Next Story
    ×