search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.ஏ.பி. பாசன வாய்க்கால்"

    • சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது.
    • பெண்கள் செல்ல முடியாத அளவில் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பி.ஏ. பி. பாசன திட்டம் என்று அழைக்கப்படும் பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர்,கோவை,மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வழியாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் பிரதான கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் கரைகளில் ஆங்காங்கே மரத்தின் நிழலில் குடிமகன்கள் அமர்ந்து தினசரி மது குடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

    அவ்வாறு மது குடித்துவிட்டு பாட்டில்கள் மற்றும் பாலிதீன் கவர்களை அங்கேயே போட்டுச் செல்வதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. பல நேரங்களில் போதை தலைக்கேறிய நிலையில் குடிமகன்கள் பாட்டில்கள் மற்றும் பாலிதீன் கவர்களை வாய்க்காலின் உள்ளே வீசி செல்லும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இங்கு மது குடிப்பதால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதனை தட்டி கேட்டால் அவர்களை எதிர்த்து பேசுவதால் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த வழியாக பெண்கள் செல்ல முடியாத அளவில் அச்சமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் குடிமகன்கள் தினசரி இதனை வாடிக்கையாக கொண்டுள்ளதால் பி.ஏ.பி. வாய்க்கால் தற்காலிக பார்களாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    எனவே போலீசார் உடனடியாக இந்த பகுதிகளில் தீவிர ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை விடுத்து வருகிறார்கள். சமூக விரோத செயல்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பாக இதனை தடுக்க வேண்டும் என விவசாயிகள்,சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×