search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி"

    • மருத்துவமனை அருகே தார் சாலையின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • இருசக்கர வாகனம், சின்னக்கண்ணி மீது மோதியது.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் தளவாபாளையம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த பிச்சைக்காரன் என்பவரின் மனைவி சின்னகண்ணி( வயது 73). கூலித் தொழிலாளியான இவர் தளவாபாளையம் கால்நடை மருத்துவமனை அருகே தார் சாலையின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கடம்பங்குறிச்சி ஓட்டக்குளம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (32) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், சின்னக்கண்ணி மீது மோதியது. படுகாயம் அடைந்த அவர், கரூர் அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாய் கடித்ததில் காலில் பலத்த காயமடைந்த மேரி குளோரியை மீட்டு ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருநின்றவூர்:

    பட்டாபிராம், அம்பேத்கர் நகர், சுசில் பிரான்சிஸ் தெருவில் வசித்து வருபவர் மேரி குளோரி(வயது82). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர் நேற்று காலை, பாபு நகர் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    வீட்டின் அருகே வந்த போது தெருவில் சுற்றிய நாய் ஒன்று திடீரென மூதாட்டி மேரி குளோரி மீது பாய்ந்து கடித்து குதறியது. இதில் நிலை தடுமாறிய மேரி குளோரி கீழே விழுந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டபடி திரண்டு வந்தனர். உடனே மேரி குளோரியை கடித்து குதறிய நாய் ஓடிவிட்டது. நாய் கடித்ததில் காலில் பலத்த காயமடைந்த மேரி குளோரியை மீட்டு ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிக அளவு நாய்கள் தெருக்களில் சுற்றி வருகின்றன. இதனால் விபத்துக்களும், நாய்கள் பொதுமக்களை துரத்தி கடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன. இதனை தடுக்க தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சேலம் மாவட்டம் தாரமங்கலம் 15-வது வார்டு கோழிக்கட்டானூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (70).
    • படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்த கோவிந்தம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் 15-வது வார்டு கோழிக்கட்டானூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (70). இவர் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு செல்வதற்காக கோழிக்கட்டானூர் கணக்குப்பட்டி பிரிவு ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டாபுரம் நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார்சைக்கிள் கோவிந்தம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்த கோவிந்தம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த கோவிந்தம்மாள் நேற்று காலை உயிரிழந்தார். இது பற்றி கோவிந்தம்மாளின் மகன் சக்திவேல் (38) கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மூதாட்டி ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார்.
    • வெள்ளை நிற ரவுக்கையும், மஞ்சள் நிற சேலையும் அணிந்துள்ளார்.

    நாகர்கோவில் : ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டி ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவர் மருத்துவ கல்லூரி நிர்வாக கட்டிடம் அருகே இறந்த நிலையில் கிடந்துள்ளார். 70 வயது மதிக்கத்தக்க இவர் வெள்ளை நிற ரவுக்கையும், மஞ்சள் நிற சேலையும் அணிந்துள்ளார். அவர் யார்? எங்கிருந்து வந்தார்? என்பது யாருக்கும் தெரியவில்லை.

    இச்சம்பவம் குறித்து ஆசாரிபள்ளம் கிராம நிர்வாக அலுவலர் ஹரி நயினார் பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் சப்-இன்ஸ்பெக்டர் மேரி மெரிபா வழக்குப்பதிவு செய்து மூதாட்டி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி உள்ளார். இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மேல் விசாரணை செய்து வருகிறார்.

    • காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு உறங்கி உள்ளார்.
    • மர்ம நபர்கள் மூதாட்டியை தாக்கி நகையை கொள்ளையடித்து சென்றனர்

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீனவ கிராமம் அண்ணா சாலை தெருவை சேர்ந்த நாராயணசாமி மனைவி இருதாயி (வயது 70).

    இவர் கீற்று கயிறு விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.

    இவரது மகள், மகன்கள் திருமணம் செய்து கொண்டு தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    கடையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இருதாயி தனியாக வாழ்ந்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு உள்ளே படுத்து உறங்கி உள்ளார்.

    நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த இருவர் இருதாயி முகத்தை துணியை போட்டு மூடிவிட்டு அவரை தாக்கி கழுத்தை நெரித்துள்ளனர்.

    காயங்களுடன் மயங்கிய மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் தோடு உள்ளிட்ட 6½ பவுன் நகைகளை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.

    காலையில் அவ்வழியே சென்றவர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சண்முகத்தை இரும்பு கம்பியால் பலமாக தாக்கியும், நல்லம்மாளை கழுத்தை கத்தியால் அறுத்தும் கொலை செய்தனர்.
    • மர்ம கும்பலை பிடிக்க கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையம் குச்சிக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி நல்லம்மாள் என்கிற சின்னப்பிள்ளை.

    கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சண்முகத்தை இரும்பு கம்பியால் பலமாக தாக்கியும், நல்லம்மாளை கழுத்தை கத்தியால் அறுத்தும் கொலை செய்தனர். மேலும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக வீட்டுக்குள் மிளகாய் பொடிகளை தூவி விட்டு சென்றனர்.

    மர்ம நபர்கள் தாக்கியதில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சண்முகத்தை நேற்று காலை அவரது வீட்டிற்கு வந்த உறவினர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுதொடர்பாக பரமத்திவேலூர் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் வந்தனர்.

    பின்னர் சண்முகத்தை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த நல்லம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டிற்குள் பல்வேறு பகுதிகளில் கைரேகை பதிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை பிடிக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா உத்தரவின் பேரில் கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த தனிப்படையினர் சம்பவம் நடந்த சண்முகத்தின் வீடு உள்ள பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் மற்றும் சம்பவ நடைபெற்ற நேரத்தில் அப்பகுதி உள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான எண்களை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தொடர்ந்து பரமத்திவேலூர் பகுதியில் பரபரப்பு நீடித்து வருகிறது.

    • மிக அதிக வயதில் 4-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியானவர் என்ற பெருமையை கார்த்திகாயினி அம்மா பெற்றார்.
    • நாரீ சக்தி என்ற விருதை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் வழங்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஹரிப்பாடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகாயினி அம்மா. 101 வயது மூதாட்டியான இவர், குடும்ப ஏழ்மை காரணமாக சிறு வயதிலேயே வேலைக்கு சென்றார். இதனால் அவர் தனது இளமை பருவத்தில் பள்ளிக்கு செல்லவில்லை. இந்நிலையில் தனது 96 வயதில் அவருக்கு படிக்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆகவே கடந்த 2018-ம் ஆண்டு 4-ம் வகுப்பு படித்தார். மிகவும் ஆர்வமாக படித்த அவர், தேர்வில் 98 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

    இதன்மூலம் மிக அதிக வயதில் 4-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியானவர் என்ற பெருமையை கார்த்திகாயினி அம்மா பெற்றார். அப்போது அவருக்கு நாரீ சக்தி என்ற விருதை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் வழங்கினார். இந்நிலையில் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி கார்த்திகாயினி அம்மா ஹரிப்பாட்டில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு கேரள மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • குழித்துறை தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
    • தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    தக்கலை:

    தக்கலை அருகே பரைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பொன் நாடார். இவரது மனைவி ஆர்தர் செல்வி (வயது 72). இவர் குழித்துறை தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது தக்கலை அருகே குன்னத்துகோணம் பகுதியில் இருக்கும் மகள் டெய்சி வீட்டில் வசித்து வருகிறார். ஆர்தர் செல்வி தினமும் அருகில் உள்ள குன்னத்துகுளத்தில் குளிப்பது வழக்கம்.

    வழக்கம்போல நேற்று அதிகாலை 5 மணிக்கு குளத்தில் குழிப்பதற்கு சென்றவர் நிலை தடுமாறி குளத்தில் விழுந்தார். மழை நேரம் என்பதால் குளத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வரத்து அதிகமானதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் இவரை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு ஏற்கனவே ஆர்தர் செல்வி இறந்துவிட்டதாக கூறினார்.

    இதுசம்பந்தமாக உறவினர் டெய்சி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவனந்தபுரத்தில் உள்ள ரஷ்மி வீட்டிற்கு செல்வதாக சென்று வீட்டில் இருந்து கிளம்பி உள்ளார்.
    • வழக்குப்பதிவு செய்து பிரேமாவை தேடி வருகிறார்கள்.

    ராஜாக்கமங்கலம் :

    வெள்ளிச்சந்தை அருகே முட்டம் அழிக்கால் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஜான் ரோஸ். மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பிரேமா (வயது 58). இவர்களுக்கு ரஷ்மி, மேரி லதா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இதில் ரஷ்மியை திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொடுத்து ள்ளனர். மேரிலதா அழிக்காலில் உள்ளார்.

    நேற்று முன்தினம் பிரேமா திருவனந்தபுரத்தில் உள்ள ரஷ்மி வீட்டிற்கு செல்வதாக சென்று வீட்டில் இருந்து கிளம்பி உள்ளார். மாலை வெகு நேரமாகியும் அவர் ரஷ்மி வீடு சென்று சேரவில்லை. உடனடியாக அவர்கள் பிரேமாவை திருவனந்தபுரம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை இது குறித்து பதட்டம் அடைந்த ஜான் ரோஸ் குடும்பத்தினர் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தனர். ஜான் ரோசின் மகள் மேரிலதா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து பிரேமாவை தேடி வருகிறார்கள்.

    • மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • அழகம்மாள் தனியாக வசித்து வந்தார்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பொய்யாங்குளம் பகுதியை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது 75), தனியாக வசித்து வந்தார். இவரது 2-வது மகன் ஆறுமுகம்(42) திருமணம் செய்யாமல் ஆன்மீகத்தில் ஈடுபட உள்ளதாக தாயிடம் தெரிவித்துள்ளார்.

    இதனால் அவர் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து அழகம்மாள் மயங்கி கிடந்தார். அவரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வங்கியில் இருந்து எடுத்து வந்ததை கண்காணித்து கைவரிசை காட்டிய கும்பல்
    • பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில், செப்.20-

    வெள்ளிச்சந்தை அருகே உள்ள பேயோடு சாந்தபுரத்தை சேர்ந்தவர் பெஞ்சமின். இவரது மனைவி மேரி குளோபல் (வயது 72). இவர் நேற்று பேயோடு சந்திப்பில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த தனது நகையை வாங்க சென்றார். அங்கு 15 பவுன் நகையை வாங்கி கை பையில் வைத்துக்கொண்டு நாகர்கோவிலுக்கு புதுத்துணி வாங்க அரசு பஸ்சில் வந்தார்.

    அண்ணா பஸ் நிலையத்தில் இறங்கிய மேரி குளோபல் செம்மாங்குடி ரோட்டில் உள்ள கடை ஒன்றில் துணி வாங்க சென்றார். அங்கு வைத்து தனது கை பையை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த 15 பவுன் நகையை காணவில்லை. அதோடு ரூ.15 ஆயிரம் பணமும் மாயமாகி இருந்தது.

    இதனால் திகைத்து போன அவர் உடனடியாக பஸ் நிலையத்துக்கும், அங்கிருந்து தான் நடந்து வந்த பாதையிலும் சென்று நகையையும், பணத்தையும் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. பஸ்சில் வந்த போது தனது நகையையும், பணத்தையும் யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் மேரி குளோபல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வங்கியில் இருந்து மேரி குளோபல் நகை வாங்கி வந்ததை நோட்டமிட்ட மர்ம நபர் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீ சார் சந்தேகிக்கி றார்கள். இதன் காரணமாக வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீ சார் ஆய்வு செய்து வருகி றார்கள். அண்ணா பஸ் நிலையத்தில் இதுபோன்ற நகை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

    ஓடும் பஸ்சில் நகை பறிக்கும் கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனி கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை யாக இருந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    அதே சமயம் நகை திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கின்றன. வெளியூர்களில் இருந்து வரும் கும்பல் நேரடியாக நகை திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

    • செல்லம்மாள் தனது மகன் ஜெயராமனுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.
    • சாலையோரத்தில் இருந்த குட்டையில் தவறி விழுந்துள்ளார்.

    திருவாரூர்:

    திருமக்கோட்டை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது 75).

    மணி இறந்து விட்ட நிலையில் செல்லம்மாள் தனது மகன் ஜெயராமனுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் செல்லம்மாள் நேற்று இரவு அப்பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது, சாலையோரத்தில் இருந்த குட்டையில் தவறி விழுந்து மூழ்கி இறந்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆன்ரோஅஸ்வந்த் ஆரோக்கியராஜ் மற்றும் திருமக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×