மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி படுகாயம்

மருத்துவமனை அருகே தார் சாலையின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். இருசக்கர வாகனம், சின்னக்கண்ணி மீது மோதியது.
மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி படுகாயம்
Published on

வேலாயுதம் பாளையம்

கரூர் மாவட்டம் தளவாபாளையம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த பிச்சைக்காரன் என்பவரின் மனைவி சின்னகண்ணி( வயது 73). கூலித் தொழிலாளியான இவர் தளவாபாளையம் கால்நடை மருத்துவமனை அருகே தார் சாலையின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கடம்பங்குறிச்சி ஓட்டக்குளம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (32) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், சின்னக்கண்ணி மீது மோதியது. படுகாயம் அடைந்த அவர், கரூர் அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com