தக்கலை அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி சாவு

குழித்துறை தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
தக்கலை அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி சாவு
Published on

தக்கலை:

தக்கலை அருகே பரைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பொன் நாடார். இவரது மனைவி ஆர்தர் செல்வி (வயது 72). இவர் குழித்துறை தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது தக்கலை அருகே குன்னத்துகோணம் பகுதியில் இருக்கும் மகள் டெய்சி வீட்டில் வசித்து வருகிறார். ஆர்தர் செல்வி தினமும் அருகில் உள்ள குன்னத்துகுளத்தில் குளிப்பது வழக்கம்.

வழக்கம்போல நேற்று அதிகாலை 5 மணிக்கு குளத்தில் குழிப்பதற்கு சென்றவர் நிலை தடுமாறி குளத்தில் விழுந்தார். மழை நேரம் என்பதால் குளத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வரத்து அதிகமானதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் இவரை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு ஏற்கனவே ஆர்தர் செல்வி இறந்துவிட்டதாக கூறினார்.

இதுசம்பந்தமாக உறவினர் டெய்சி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com