search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்கலை அருகே"

    • இவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் மன வருத்தத்துடன் இருந்து வந்தார்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் கம்பியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தக்கலை:

    தக்கலை அருகே பரைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது52), கூலி தொழிலாளி. இவர் சுமார் ஆறு மாதம் முன்பு பாக்கு மரத்தில் ஏறியதில் தவறி கீழே விழுந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் மன வருத்தத்துடன் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் கம்பியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவில் மனைவி ரவிக்கு சாப்பாடு கொண்டு கொடுக்க சென்று பார்த்த போது கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் இவரை தக்கலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய கொண்டு சேர்த்தனர். பின்னர் கலா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராதவிதமாக பாலசாமி மீது மோதியது.
    • சிகிச்சை பலனின்றி இன்று காலை பாலசாமி உயிரிழந்தார்.

    தக்கலை:

    தேவிகோடு செறுவ ல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலசாமி (வயது81). இவர் கடந்த 30-ந்தேதி தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலில் நோக்கி கார் விரைந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பாலசாமி மீது மோதியது.

    இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பாலசாமி உயிரிழந்தார்.

    இது சம்பந்தமாக அவரது மகன் பால் வின்சிகர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் கார் டிரைவர் பாபநாசம் பகுதியை சேர்ந்த முத்து சுப்பிரமணியன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தக்கலை அருகே உள்ள கன்றுபிலாவிளை கொற்றிகோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜிலின் மனோ. இவரது மனைவி அஜி(வயது32).
    • ரெஜிலின் மனோ வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்

    நாகர்கோவில் :  தக்கலை அருகே உள்ள கன்றுபிலாவிளை கொற்றிகோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜிலின் மனோ. இவரது மனைவி அஜி(வயது32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரெஜிலின் மனோ வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் அஜி, தனது குழந்தைகளுடன் ஊரில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி தோழி வீட்டுக்கு செவ்வ தாக தனது தாயிடம் கூறிவிட்டு தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு அஜி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். பின்பு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. குழந்தைகளுடன் தனது மகள் மாயமானது குறித்து கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் தாய் பிரேமா புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அஜி கொற்றிக்கோடு மற்றும் தக்கலை பகுதியில் பலரிடம் நகை-பணத்தை வாங்கி விட்டு ஏமாற்றி சென்றதாக பலர் புகார் கொடுத்தனர். அந்த புகாரை பெற்றுக்கொண்ட கொற்றிக்கோடு போலீசார், அஜியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர் கேரள மாநிலம் பாறசாலை பகுதியில் தங்கியி ருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந் தனர். அவர்கள் செல்வ தற்கு முன்பாகவே, புகார் கொடுத்த வர்கள் பாறசாலைக்கு சென்று அஜி தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். உடனே பாற சாலை போலீசார் அஜியை மீட்டு விசாரணை நடத்தி கொற்றிகோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இந்நிலையில் முதலார் பகுதியை சேர்ந்த கிங்சிலி என்பவர் அஜி மீது போலீசில் புகார் செய்தார். தன்னிடம் ரூ.2லட்சத்து 43 ஆயிரம் வாங்கி ஏமாற்றி சென்ற அஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அஜியை கைது செய்தனர். மோசடி புகார்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்பு தக்கலை கோர்ட் டில் அஜி ஆஜர்படுத்தப் பட்டார். அவரை நீதி மன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அஜி தக்கலை பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • பொன்மனை பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் தருண்
    • கோயம்புத்தூரில் உறவினர் வீட்டில் தங்கி 9- ம் வகுப்பு படித்து வந்தான்.


    தக்கலை, அக்.7-

    குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் தருண் (வயது 15). இவன் கோயம்புத்தூரில் உறவினர் வீட்டில் தங்கி 9- ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த வாரம் விடுமுறையில் ஊருக்கு வந்த தருண், நண்பர் மேத்யூ ஜோஸ் என்பவருடன் தக்க லை அருகே மருந்துகோட்டை பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு மோட் டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து திரும் பிய போது, சித்திரங்கோடு அருகே ரோட்டில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் தருணுக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் இவர்களை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை தருண் பரிதாப மாக இறந்தார்.

    இது சம்பந்தமாக தருணின் தந்தை, கொற்றி கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பே ரில் போலீசார் விசாரணை நடத்தி மோட்டார் சைக் கிளை ஓட்டிய மேத்யூ ஜோஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். தருண் உடல் பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப் பட்டது. விடுமு றைக்கு வந்த நேரத்தில் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • எலக்ட்ரீசியன். இவருக்கு நிஷாந்தி என்ற மனைவியும், அஸ்வதி (6) அனுகிரகா (1) என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
    • கணவர்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

    நாகர்கோவில் : தக்கலை அருகே கிருஷ்ண மங்கலம் அக்கர விளை பகுதியை சேர்ந்தவர் மணிசந்தர் (வயது 36). எலக்ட்ரீசியன். இவருக்கு நிஷாந்தி என்ற மனைவியும், அஸ்வதி (6) அனுகிரகா (1) என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    மணிசந்தருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இதனால் கணவர்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் மணிசந்தர் மது அருந்திவிட்டு வீட்டில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் நிஷாந்தி கோபித்தில் குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    இதனால் மன வருத்தம் அடைந்த மணி சந்தர் வீட்டுக்குள் சென்று விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தக்கலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மணிசந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்மந்தமாக நிஷாந்தி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி சந்தர் உடலை பிரேத பரிசோதனை செய்ய தக்கலை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குழித்துறை தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
    • தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    தக்கலை:

    தக்கலை அருகே பரைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பொன் நாடார். இவரது மனைவி ஆர்தர் செல்வி (வயது 72). இவர் குழித்துறை தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது தக்கலை அருகே குன்னத்துகோணம் பகுதியில் இருக்கும் மகள் டெய்சி வீட்டில் வசித்து வருகிறார். ஆர்தர் செல்வி தினமும் அருகில் உள்ள குன்னத்துகுளத்தில் குளிப்பது வழக்கம்.

    வழக்கம்போல நேற்று அதிகாலை 5 மணிக்கு குளத்தில் குழிப்பதற்கு சென்றவர் நிலை தடுமாறி குளத்தில் விழுந்தார். மழை நேரம் என்பதால் குளத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வரத்து அதிகமானதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் இவரை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு ஏற்கனவே ஆர்தர் செல்வி இறந்துவிட்டதாக கூறினார்.

    இதுசம்பந்தமாக உறவினர் டெய்சி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×