தக்கலை அருகே கார் மோதி முதியவர் பலி

எதிர்பாராதவிதமாக பாலசாமி மீது மோதியது.சிகிச்சை பலனின்றி இன்று காலை பாலசாமி உயிரிழந்தார்.
தக்கலை அருகே கார் மோதி முதியவர் பலி
Published on

தக்கலை:

தேவிகோடு செறுவ ல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலசாமி (வயது81). இவர் கடந்த 30-ந்தேதி தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலில் நோக்கி கார் விரைந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பாலசாமி மீது மோதியது.

இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பாலசாமி உயிரிழந்தார்.

இது சம்பந்தமாக அவரது மகன் பால் வின்சிகர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் கார் டிரைவர் பாபநாசம் பகுதியை சேர்ந்த முத்து சுப்பிரமணியன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com