தக்கலை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை மனைவி கோபித்து கொண்டு சென்றதால் பரிதாபம்

எலக்ட்ரீசியன். இவருக்கு நிஷாந்தி என்ற மனைவியும், அஸ்வதி (6) அனுகிரகா (1) என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.கணவர்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
தக்கலை அருகே  விஷம் குடித்து வாலிபர் தற்கொலை மனைவி கோபித்து கொண்டு சென்றதால் பரிதாபம்
Published on

நாகர்கோவில் : தக்கலை அருகே கிருஷ்ண மங்கலம் அக்கர விளை பகுதியை சேர்ந்தவர் மணிசந்தர் (வயது 36). எலக்ட்ரீசியன். இவருக்கு நிஷாந்தி என்ற மனைவியும், அஸ்வதி (6) அனுகிரகா (1) என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

மணிசந்தருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இதனால் கணவர்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் மணிசந்தர் மது அருந்திவிட்டு வீட்டில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் நிஷாந்தி கோபித்தில் குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனால் மன வருத்தம் அடைந்த மணி சந்தர் வீட்டுக்குள் சென்று விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தக்கலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மணிசந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்மந்தமாக நிஷாந்தி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி சந்தர் உடலை பிரேத பரிசோதனை செய்ய தக்கலை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com