மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

சேலம் மாவட்டம் தாரமங்கலம் 15-வது வார்டு கோழிக்கட்டானூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (70). படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்த கோவிந்தம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
Published on

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் 15-வது வார்டு கோழிக்கட்டானூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (70). இவர் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு செல்வதற்காக கோழிக்கட்டானூர் கணக்குப்பட்டி பிரிவு ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டாபுரம் நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார்சைக்கிள் கோவிந்தம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்த கோவிந்தம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சையில் இருந்த கோவிந்தம்மாள் நேற்று காலை உயிரிழந்தார். இது பற்றி கோவிந்தம்மாளின் மகன் சக்திவேல் (38) கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com