search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருட்கள்"

    • 20 நபர்களுக்கு ஹார்லிக்ஸ் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
    • டாக்டர் பாபு தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து பேசினார்.

    திருத்துறைப்பூண்டி:

    உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ரோட்டரி டெல்டா சங்கம் சார்பாக 20 நபர்களுக்கு மதர் ஹார்லிக்ஸ் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க தலைவர் மாணிக்கவாசகம் வரவேற்று பேசினார். இன்னர்வீல் சங்கம் சார்பாக உணவுப் பொருட்கள் வாங்கப்பட்டது. தலைவி ராஜேஸ்வரி, செயலாளர் வினோதா, முன்னாள் தலைவி கலந்து கொண்டனர். இந்நிகழ்வை ஏற்பாடு செய்த சங்க மருத்துவ சேர்மன் டாக்டர்பாபு கலந்து கொண்டு தாய்ப்பால் மகத்துவம் குறித்து பேசினார். தலைவர் மாணிக்கவாசகம், செயலர் அகிலன், பொருளாளர் விஜய்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் நெத்திமேட்டில் தனியார் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
    • அப்போது அங்கு வந்த ஒருவர் பொருட்களை வாங்காமல் அங்குள்ள பொருட்களை திருடி உள்ளார்.

    சேலம் நெத்திமேட்டில் தனியார் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் பொருட்களை வாங்காமல் அங்குள்ள பொருட்களை திருடி உள்ளார். இதை ஊழியர்கள் சி.சி.டி.வி கேமிராவில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை பிடித்து பொருட்களை பறிமுதல் செய்து செவ்வாய்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சபியுல்லாகான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.
    • வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு பொருட்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா விளத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.

    இப்பள்ளியில் 1970ம் ஆண்டு காலகட்டத்தில் ராஜ இல்லற ஜோதி என்பவர் 8-ம் வகுப்பு வரை பயின்றுள்ளார்.

    இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார் .

    இந்நிலையில் அவரது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மகன் பிரபு ராஜ்குமார் தன் தாய் பயின்ற திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் விளத்தூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்குத் தேவையான மின்விசிறிகள், மின்விளக்குகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் தரைவிரிப்புகள், தண்ணீர் குடம், எழுது பொருட்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிக்கும் தேவையான பல்வேறு பொருட்களை தமது ஜோதி அறக்கட்டளை சார்பில் கல்வி சீர்வரிசையாக வழங்க முடிவு செய்தார்.

    அதன்படி ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்ட அறக்கட்டளை பணியா ளர்கள், விளத்தூர் மற்றும் பயரி பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் சீர்வரிசை தட்டுகளுடன் பள்ளிக்கு தேவையான பொரு ட்களையும் எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்து வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் சுகந்தியிடம் கல்வி சீர் வரிசையை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மற்றும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு பரிசு பொருட்களும் சான்றி தழ்களும் வழங்கப்பட்டது .

    இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தையல் நாயகி, உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பி னர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுககு புகார்கள் வந்தது.
    • இதையடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுககு புகார்கள் வந்தது. இதை யடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதில், போலியானது, உணவுக்கு ஒவ்வாத கேடு தரக்கூடியது என்பது போன்ற உணவ பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, கடந்த மாதத்தில் கலப்பட ஜவ்வரிசி, தரமற்ற உணவு பொருள் விற்றது, கலப்பட ஆயில் விற்றது மற்றும் இதர பொருட்களில் கலப்படம் உள்ளிட்ட 14 வழக்குகளில் ரூ.85 ஆயிரம் அபராதம் விதித்து, வருவாய் அலுவலர் மேனகா உத்தரவிட்டார்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்களில் கலப்படம் செய்து விற்றால் கடும் நட வடிக்கை மேற்கொள்ளப்ப டும். கடைகளில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, என்றனர்.

    • கலை நிகழ்ச்சிகளில் 15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
    • கைவினை கலைஞர்களின் பொருட்கள் கண்காட்சியும், உணவு திருவிழாவும் 5 நாட்கள் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் இந்த ஆண்டு கோடை விழா நேற்று மாலை தொடங்கியது.

    இந்த விழா வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதன் தொடக்க விழாவில் தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோடைவிழாவை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், முரசு கொட்டி தொடங்கி வைத்தார். முன்னதாக விழாவில் பங்கேற்க வந்த சிறப்பு விருந்தினர்களை அனைத்து மாநில கலைஞர்களும் வரிசையாக நின்று தங்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி வரவேற்றனர்.

    பின்னர் கலை விழா தொடங்கியதும் குஜராத் மாநில கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் திரைப்பட பாடகி சின்ன பொண்ணுவின் நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாநில கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

    இந்த கலைவிழாவில் இந்தியாவின் 15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். மேலும் கோடை விழாவையொட்டி பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை வளர்ச்சி கூட்டமைப்பு சார்பில் கைவினை கலைஞர்களின் பொருட்கள் கண்காட்சியும், உணவு திருவிழாவும் 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கலை விழா தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. முடிவில் நிர்வாக அலுவலர் சீனிவாசன் அய்யர் நன்றி கூறினார்.

    • பல மணிநேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.
    • வீடுகளில் இருந்த தளவாட பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள வண்டலூர் ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது45). நேற்று மின்கசிவு காரணமாக இவரது கூரை வீட்டில் தீப்பிடித்தது.

    அப்போது காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென பரவி வண்டலூர் மாரியம்மன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த தமிழரசி , வெங்கடேசன், பாப்பையன், ராஜேந்திரன், ராஜேஷ் கண்ணா, மதீஷ் ராஜ், சுப்பிரமணியன், அரவிந்த் , பெரியசாமி, ராகுல் ஆகியோ ரின் கூரைவீடுகளுக்கும் பரவியது.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகை, கீழ்வேளூர், வேளா ங்கண்ணி, தலைஞாயிறு உள்ளிட்ட 4 தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து பல மணிநேரம் போராட்ட த்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.

    ஆனாலும் இந்த தீவிபத்தில் 11 கூரைவீடுகளும் முழுமையாக எரிந்து சாம்பலானது. மேலும் வீடுகளில் இருந்த தளவாட பொருட்கள் எரிந்து சேதமானது.

    இந்த தீவிபத்தில் ஒரு ஆடும் இறந்தது.

    இதன் சேதமதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    தகவல் அறிந்ததும் அமைச்சர் ரகுபதி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினர்.

    இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • மர்மநபர்கள் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நீலகிரி பஞ்சாயத்து செம்பருத்தி தெருவை சேர்ந்தவர் பத்மநாதன் (வயது 38).

    இவர் தஞ்சை ரகுமான் நகரில் பித்தளை ,இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் கடைக்கு வந்த பத்மநாதன் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மர்மநபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தீப்பிடித்து வீட்டிலிருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
    • மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்ததா?

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள மணத்திடல் கிராமம் புது தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 50) தொழிலாளி.

    இவர் குடும்பத்துடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார்.

    இவர் இன்று காலை வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் கூலி வேலைக்கு சென்று விட்டார். அப்போது திடீரென வீட்டில் இருந்து புகை கிளம்பியது. சிறு நேரத்தில் மள மளவென தீப்பிடித்து எரிய தொடங்கின.

    இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அப்போது தீப்பிடித்து வீட்டிலிருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது . இதில் வீடு கட்டிடம் தரைமட்டமாகியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே திருவையாறு தீயணைப்பு நிலையம் மற்றும் நடுக்காவேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் .

    அதன்பேரில் நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சியடைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இருப்பினும் வீட்டில் இருந்த நகை, பணம், ஆவணங்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகின . ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் ஆகியதாக கூறப்படுகிறது .

    இது குறித்து போலீசார், மின் கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்ததா ? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக வீடு இழந்து பாதிக்கப்பட்ட சேகர் குடும்பத்திற்கு தாசில்தார் பழனியப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் கவுதமன் ஆகியோர் ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை
    • சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    கன்னியாகுமரி:

    சென்னை முதன்மை செயலாளர் மற்றும் தொழிலாளர் ஆணையர் கடைகள் மற்றும் நிறுவனங்களில் 2009-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் 2011-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு (பொட்டல பொருட்கள்) விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்டபிரபு தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அஞ்சுகிராமம் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் நியாய விலைக்கடைகள், கிடங்குகள் மற்றும் சுற்றுலா, வழிபாட்டு தலங்கள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாங்களில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதுபற்றி தொழிலாளர் உதவி ஆணையர் மணிகண்ட பிரபு கூறுகையில், முத்திரை இடப்படாத எடையளவுகள் வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத பொட்டலப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் அதிகபட்சமாக சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், பொட்டலமிடுபவர் மற்றும் இறக்குமதியாளர் பதிவு சான்று பெறாதது, பொருட்களில் குறிப்பிட்டுள்ள எடை மற்றும் அளவுகள் இல்லாமை ஆகிய குற்றங்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.

    • அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறது.
    • 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு அரசு, ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறம் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவ சிய பொருட்களை வினி யோகம் செய்து வருகிறது.

    இவற்றை சிலர் முறைகேடாக கடத்தி கள்ள சந்தையில் விற்று அதிக லாபம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனர். இவர்கள் பற்றியும், ரேசன் பொருட்கள் பதுக்கல் குறித்தும் பொதுமக்கள், 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ரகசியம் பாதுகாக்கப்படும்.

    இதற்காக மாநில உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு ள்ளது. இது காவல்துறை தலைவரின் நேரடி கண்கா ணிப்பில் செயல்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.36.86 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

      பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகில் உள்ள கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணைய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 67.47 குவிண்டால் எடை கொண்ட 18ஆயிரத்து 310தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன.

    இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.27.80-க்கும், குறைந்த விலையாக ரூ.20.00-க்கும், சராசரி விலையாக ரூ.24.25-க்கும் என்று ரூ 1லட்சத்து 50ஆயிரத்து 636-க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 201.68 1/2 குவிண்டால் எடை கொண்ட 443மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.85.15-க்கும், குறைந்த விலையாக ரூ.84.09-க்கும், சராசரி விலையாக ரூ.85.09-க்கும், இரண்டாம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.84.29-க்கும், குறைந்த விலையாக ரூ.70.99-க்கும், சராசரி விலையாக ரூ.83.15க்கும் என்று ரூ.16லட்சத்து 41ஆயிரத்து 952க்கு விற்பனை ஆனது.

    110.49குவிண்டால் எடை கொண்ட 148மூட்டை சிவப்புஎள் விற்பனைக்கு வந்தது. இதில் சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.114.99-க்கும், குறைந்த விலையாக ரூ96.69-க்கும், சராசரி விலையாக ரூ.111.11க்கும் என ரூ.11லட்சத்து 85ஆயிரத்து 504க்கு விற்பனையானது. அதேபோல்110.75 குவிண்டால் எடை கொண்ட 354 மூட்டை நிலக்கடலை காய் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    இதில் அதிகப்படி விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.70.49க்கும், குறைந்த விலையாக ரூ 55 .09க்கும்,சராசரி விலையாக ரூ.64.21க்கும் என 354 மூட்டை நிலக்கடலை காய் ரூ.7லட்சத்து 8 ஆயிரத்து 87க்கு விற்பனை ஆனது. ஒட்டு மொத்தமாக இந்தவாரம் தேங்காய், தேங்காய் பருப்பு,எள், நிலக்கடலை காய் ஆகியவை ரூ.36லட்சத்து 86ஆயிரத்து179க்கு விற்பனை ஆனது.

    • ஈரோட்டில் புகையிலை பொருட்கள்- கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடா சலபதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது எண்ணமங்கலம், ராம கவுண்டன் குட்டை பகுதியில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் சோத னை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் - ஹான்ஸ் பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரிந்தது.

    விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வன் என தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வனை கைது செய்தனர் அவரிடமிருந்து 105 புகையிலை, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதேப்போல் சத்தியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சலீம் தலைமையான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சத்தியமங்கலம்-பவானிசாகர் ரோட்டில் தரைபாலம் அருகே அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசை கண்டதும் தப்பியோட முயன்றார்.

    அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(27) என்பதும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்தி ருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×