என் மலர்
நீங்கள் தேடியது "destruction"
- மாஸ்டர் கவனிப்பதற்குள் கியாஸ் அழுத்தம் காரணமாக ரெகுலேட்டர் சிதறி தீப்பற்ற தொடங்கியது.
- கடைக்குள் இருந்தவர்கள், டீ குடித்து கொண்டிருந்தவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் நான்குவழி சாலை சந்திப்பில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கண்ணையன் என்பவர் டீ ஸ்டால் வைத்துள்ளார்.
கடை முன்பு சிலிண்டர் அடுப்பில் வைத்து பலகாரம் சுடும் போது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் இருந்து கியாஸ் வெளியாகி உள்ளது. இதனை பலகார மாஸ்டர் கவனிப்பதற்குள் கியாஸ் அழுத்தம் காரணமாக ரெகுலேட்டர் சிதறி தீப்பற்ற தொடங்கியது.
இதனை அடுத்து டீ கடைக்குள் இருந்தவர்கள், டீ குடித்து கொண்டு இருந்தவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர்.
இருந்த போதிலும் தீகொளுந்து விட்டு எரிந்ததில் கடை முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 2 இரு சக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது.கடை உரிமையாளர் பாலமுரு கனுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்து குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நம்பி இனி பயனில்லை என்று விவசாயிகளும், விளைநிலங்களை விற்று விடுகின்றனர்.
- குழந்தைகளை உயர் கல்வி படிக்க வைப்பதுடன் விவசாயத்தை பற்றி சொல்லிக்கொடுப்பதில்லை.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 1.92 லட்சம் எக்டரில் சாகுபடி பரப்பு உள்ளது. இவற்றில் பிரதானமாக தென்னை, கரும்பு, நெல், பல்வேறு வகையான காய்கறி வகைகள், பயிறு வகைகள் விவசாயிகளால் பயிரிடப்பட்டு வருகின்றன.ஆனால்விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள கிராமங்களில் பருவமழை பொய்த்து விடுவதால் விளைநிலங்கள் தரிசாக உள்ளன.
இதனை நம்பி இனி பயனில்லை என்று விவசாயிகளும், விளைநிலங்களை விற்று விடுகின்றனர்.குறிப்பாக ரோட்டை ஒட்டிய விளைநிலங்களில், தொழிற்சாலைகள், வணிகக்கடைகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பயன்பாட்டிற்கு விற்கப்படுகிறது.சிலர் விவசாயத்தை கைவிட்டு கோழிப்பண்ணை மற்றும் தென்னை நார் தொழிற்சாலைகளில் ஈடுபடுகின்றனர். எனவே கிராமப்புற இளைஞர்கள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த குறுந்தொழில்களில் ஈடுபடும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:-
தண்ணீர் பற்றாக்குறை, உர விலை உயர்வு, பருவ மழை பொய்த்தல், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமை போன்ற பல காரணங்களால் சிலர் விவசாயத்தை கைவிடுகின்றனர்.அதிலும் பலர் தங்களது குழந்தைகளை உயர் கல்வி படிக்க வைப்பதுடன் விவசாயத்தை பற்றி சொல்லிக்கொடுப்பதில்லை.இதன் காரணமாக ஆண்டுதோறும் பல 100 ஏக்கரில் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. விவசாய காரணங்களைத்தவிர, வேறு காரணங்களுக்காக விவசாய நிலத்தை விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது.விவசாயத்துக்கு தேவையான இடுபொருள், உரம், தண்ணீர், மின்சாரம் மிக குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஏழை விவசாயிகளுக்கு எளிய வகையில் கடன் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை:
காவிரி பாசனப் பகுதியில் கெயில் குழாய் பதிக்க பயிர்களை அழித்திருப்பதற்கு தினகரன், ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்:-
காவிரி டெல்டாவில் பயிர் இருக்கிற வயல்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்கிற வேலைகளை மத்திய அரசின் கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருவது கடுமையான கண்டனத்திற்குரியது.
சீர்காழியை அடுத்த மாதானம் முதல் செம்பனார் கோவில் அருகிலுள்ள மே மாத்தூர் வரை விளை நிலங்களில் எரிவாயு குழாய்களைப் பதிக்க வேண்டும் என கெயில் நிறுவனம் ஒற்றைக்காலில் நின்று வருகிறது.
ஆனால் அப்பகுதி விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதனையும் மீறி நாற்றாங்கால்களிலும், நடவு செய்யப்பட்டிருக்கிற வயல்களிலும் எந்திரங்களைக் கொண்டு வந்து இறக்கி, எரிவாயு குழாய்களைப் பதிப்பதற்கான பணிகளை அரசு அதிகாரிகள் துணையோடு மேற்கொண்டிருக்கிறார்கள்.
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் கெயில் எரிவாயு குழாய்களை விளை நிலங்களில் பதிப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த இரண்டொரு நாட்களுக்குள்ளாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிற இந்தப் பணியை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். அங்கே குவிக்கப்பட்டிருக்கிற கனரக வாகனங்களையும், எந்திரங்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
நாகப்பட்டினம் மாவட்டம் மாதானத்திலிருந்து நரிமனம் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணையை கொண்டு செல்வதற்காக, உழவர்களின் எதிர்ப்பையும் மீறி, குறுவை நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் காவல்துறை துணையுடன் குழாய்ப் பாதை அமைக்கும் பணிகளை கெயில் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.
உழவர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதிக்காமல் அத்துமீறி வயலில் நுழைந்து, பயிர்களை அழித்து, குழாய்ப் பாதை அமைப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
மாதானம் முதல் மேமாத்தூர் வரை கெயில் எண்ணைக் குழாய்ப் பாதை அமைப்பதால் அப்பாதை நெடுகிலும் உள்ள 30 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்கள் பாதிக்கப்படும்.
இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். உழவர்களின் வாழ்வாதாரங்களை பறித்து விட்டு, எண்ணை குழாய்ப் பாதைகளை அமைப்பது கண்களை பறித்து விற்று விட்டு, அந்தக் காசில் கண்மை வாங்குவதற்கு இணையான அபத்தமான, அழிவுச் செயலாகும்.
விவசாயத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்திவிடும்.
எனவே, இனியாவது விழித்துக் கொண்டு இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட மத்திய அரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:-
விவசாயிகள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், கெயில் நிறுவனம் மே 16 -ம் தேதி, மேமாத்தூர், காளகஸ்தி நாதபுரம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு விதை விட்ட மற்றும் நடவு செய்த வயல்களில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கி பயிர்களை நாசப்படுத்தி, குழாய் பதிக்க முனைந்தபோது, மக்கள் கொதித்து எழுந்தனர்.
நேற்று முன்தினம் உமையாள்புரம் கிராமத்தில் நடவு செய்த விளைநிலத்தில் ராட்சத குழாய் பதிக்கும் வேலைக்காக பொக்லைன் இயந்திரத்தை இறக்கிப் பயிர்களை அழித்துள்ளது கெயில் நிறுவனம்.
கொச்சியிலிருந்து பெங்களூருக்கு எரிவாயு குழாய் கொண்டு செல்ல மேற்கு மாவட்ட விளைநிலங்களில் குழாய் அமைக்க கெயில் நிறுவனம் முயற்சித்தபோது, விவசாயிகள் போராடிய தால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கெயில் நிறுவனத்துக்கு தடை விதித்தார்.
காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுத்தல் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை ரத்துச் செய்யக்கோரி மக்கள் போராட்டம் தீவிரமடையும் சூழலை உணர்ந்துகொண்டு, தமிழக அரசு இத்திட்டங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
கஜா புயல் தாக்கியதில் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்து விட்டன.
இதனால் தென்னந்தோப்பு வைத்திருந்த விவசாயிகள் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு, மதுரை, சேலம் போன்ற ஊர்களுக்கு தினசரி 100 லாரிகளில் தேங்காய் மற்றும் இளநீர் அனுப்பப்படும். ஆனால் இப்போது தென்னை மரங்கள் லட்சக்கணக்கில் சாய்ந்து கிடப்பதால் சென்னைக்கு வந்து கொண்டிருந்த தேங்காய் வரத்து பாதியாக குறைந்து விட்டது. இதன் காரணமாக தேங்காய் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை தேங்காய் விலை உயர்ந்து விட்டது. 20 ரூபாய்க்கு விற்ற நடுத்தர தேங்காய் இப்போது 25 ரூபாய்க்கு விற்கிறார்கள். 15 ரூபாய்க்கு கிடைத்த சிறிய தேங்காய் 20 ரூபாயாக உயர்ந்து விட்டது. பெரிய தேங்காய் 30 ரூபாய் இருந்து 37 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் சிந்தாதிரிப்பேட்டை, வில்லிவாக்கம், வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ஆலந்தூர், சைதாப்பேட்டை, தி.நகர், அடையார், மயிலாப்பூர், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளிலும் தேங்காய் விலை அதிகளவு உயர்ந்து விட்டது.
இதுபற்றி சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் தேங்காய் வியாபாரி ராமசாமி கூறியதாவது:-
சென்னைக்கு தினசரி அதிராம்பட்டினம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, பேராவூரணி, தஞ்சாவூர், மன்னார்குடி, பொள்ளாச்சி, தேனி, நாகர்கோவில், ஆந்திரா ஆகிய இடங்களில் இருந்து லாரிகளில் தேங்காய் வரும்,
இப்போது கஜா புயல் சேதத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருந்த தேங்காய் வரத்து அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது.
ஒரு லாரிக்கு 10 டன் வீதம் தினசரி 60 லாரிகளில் தேங்காய் வருவது நின்று விட்டது. இதனால் தேங்காய் விலை 5 முதல் 7 ரூபாய் வரை உயர்ந்து விட்டது.
அதேபோல் இளநீர் விலையும் 10 ரூபாய் உயர்ந்துள்ளது. புயலில் சாய்ந்த தென்னை மரங்கள் 40 வருடத்து மரம் ஆகும். இனி மேல் மரம் வைத்தால் 7 ஆண்டுக்கு பிறகுதான் பலன் கிடைக்கும்.
இதுவரை காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மற்ற ஊர்களுக்கு தேங்காய் அனுப்பி வந்தனர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி அவர்களின் தேவைக்கு மற்ற ஊர்களில் இருந்து தேங்காய் அனுப்பி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கஜா புயலில் சாய்ந்து கீழே முறிந்து கிடக்கும் மரங்களில் இருந்து தேங்காய் பறித்து இப்போது அனுப்பி வருகின்றனர். இன்னும் ஒரு மாதத்துக்கு பிறகு இதுவும் நின்று விடும். அப்போது தேங்காய் விலை மேலும் உயரும்.
இவ்வாறு வியாபாரி ராமசாமி கூறினார். #GajaCyclone #DeltaDistricts #DeltaFarmers
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான ராசிங்காபுரம், குரங்கணி, மேலசொக்க நாதபுரம் உள்ளிட்ட கிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்து காணப்படும் இந்த பகுதிகளில் ஏராளமான மா மரங்கள், தென்னந்தோப்புகள் அதிக அளவில் உள்ளது.
இந்த பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. எனவேதான் ஏராளமான விளை நிலங்கள் காணப்படுகிறது. போடி அருகே மரிமூர்குளம் பகுதியில் கந்தவேல் தோட்டத்தில் ஏராளமான தென்னங்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கந்தவேலின் மகன் குமார் தென்னங்கன்றுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது தென்னங் கன்றுகள் கருகி அழிந்த நிலையில் காணப்பட்டது. இந்த தென்னங்கன்றுகளில் ஆசிட் ஊற்றப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.சுமார் 250 தென்னங்கன்றுகள் மர்ம கும்பலால் ஆசிட் ஊற்றப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் வன விலங்குகள் அதிகம் சுதந்திரமாக உலா வருகிறது. அந்த விலங்குகள் இந்த பகுதியில் மேயும் போது ஆசிட் படிந்த புற்களை தின்றால் அவை உயிரிழக்க நேரிடும் அபாயம் உள்ளது. இது குறித்து குமார் குரங்கணி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து தென்னங்கன்றுகளுக்கு ஆசிட் ஊற்றிய நபர்கள் யார்? எதற்காக ஊற்றிச் சென்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி 110-ன் மூலம் தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி இத்திட்டத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பிளாஸ்டிக் பொருட் களின் பயன்பாட்டை தடை செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கலெக்டர் சாந்தா தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை குறைக்கும் வகையிலும், அதற்கு பதிலாக மாற்று பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும், தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை குறைத்தல் தொடர்பான பயிற்சி பட்டறை வகுப்பில் ஒவ்வொரு அரசு அலுவலகங்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான நடைமுறை சாத்தியங்கள் குறித்தும், மாற்று பொருட்கள் பயன்பாடுகள் குறித்தும், அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தினை பெரம்பலூர் மாவட்டத்தில் முழுமையாக அமல்படுத்த அரசு அலு வலர்களும், பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை அனைத்து அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். இதன் மூலம் அரசு அலுவலகங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பில் பொதுமக்களுக்கு முன் மாதிரியாக விளங்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன், இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) டாக்டர் சசிகலா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மாவட்டம் கோபிக்கு வந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீதிமன்றத்தின் மீது நம்பகத்தன்மை இல்லாததால் தங்க தமிழ்செல்வன் மட்டும் வழக்கை வாபஸ் பெறுகிறார். மற்ற எம்.எல்.ஏ.க்கள் சட்டப்படி வழக்கை சந்திப்பார்கள். சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கும் போது ஸ்லீப்பர் செல் யார் என்று தெரியவரும்.
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் எங்கள் கட்சி சந்திக்க தயாராக உள்ளது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அரசு அழிவை நோக்கி செல்கிறது. அந்த கட்சியை மீட்கும் பொறுப்பை பொதுமக்கள் எங்களிடம் கொடுத்துள் ளார்கள். இனிவரும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை மீட்டு எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின்னர் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு நேற்று முன்தினம் இரவு கோவைக்கு செல்வதற்காக வேனில் புஞ்சைபுளியம்பட்டி வழியாக டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. வந்தார். அப்போது பஸ் நிலையம் முன்பு அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தார்கள். பின்னர் அங்கு திரண்டிருந்த கூட்டத்துக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-
தற்போது வெளியான 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சம்பந்தமான தீர்ப்பு மக்களை எவ்வளவு வேதனைப்படுத்தியிருக்கும் என்பது தெரியும். விரைவில் அனைத்து தரப்பினரும் விரும்பும் ஒரு ஆட்சி தமிழகத்தில் அமையும் என்பதை உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். 2 மாதங்களில் வரும் தீர்ப்பில் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும். அதன்பின்னர் அம்மாவின் ஆட்சி மலரும் என உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.