search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "லட்சம்"

  • பல உணவு பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது.
  • பில்லின் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார்.

  துருக்கியை சேர்ந்தவர் பிரபல சமையல் கலை நிபுணர் நுஸ்ரெட் கோட்சே என்ற சால்ட் பே. இவர் துபாயில் ஒரு உணவகம் நடத்தி வருகிறார். அங்கு சமீபத்தில் ஒரு வாடிக்கையாளர்கள் குழுவாக சென்று உணவு சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு வந்த பில் தொகையை சால்ட் பே தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  மிகப்பெரிய உணவு பில்லான அதில், மொத்தம் ரூ.90 லட்சம் பில் தொகை இருந்தது. 'பணம் வரும்... போகும்...' என்ற தலைப்புடன் அந்த பில்லின் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார். அந்த பில்லில், பிரெஞ்ச் பொறியல், கோல்டன் பக்லாவா, பழத்தட்டு, துருக்கிய காபி மற்றும் சமையல்காரரின் கையொப்பம் கொண்ட இறைச்சி உணவுகள் உள்ளிட்ட பல உணவு பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

  உணவை தவிர பல விலை உயர்ந்த பானங்களையும் அருந்தியதற்கான தொகையும் பில்லில் இருந்தது. அதோடு வாடிக்கையாளர்கள் தாராளமாக சுமார் ரூ.20 லட்சத்தை டிப்ஸ்சாக வழங்கி இருந்ததும் பில்லில் இடம் பெற்றிருந்தது. இந்த பில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நாள்தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் பசியால் அவதிப்படும் போது ஒரு நேர உணவுக்காக இவ்வளவு செலவழிப்பது வெட்கக்கேடானது என ஒரு பயனரும், பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளனர்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • சிலர் உண்மையை மறைத்து சேவல்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
  • வெற்றியை நிச்சயிக்கும் என்பதால் தரமான சண்டை சேவல்களை தேடி அலைந்து வருகின்றனர்.

  தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு எருது விடும் விழா பிரபலம் என்றால் ஆந்திராவில் சேவல் சண்டை பிரபலமாகும். ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையின்போது கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு சேவல் சண்டை நடத்தப்படுகிறது.

  ஆந்திராவில் சண்டை சேவல்களுக்கு வைரஸ் மற்றும் சுவாச பிரச்சனை நோய் தாக்கப்பட்டு ஏராளமான சேவல்கள் இறந்தன.

  இதனால் சேவல் வளர்ப்பவர்கள் கடும் நஷ்டம் அடைந்தனர். தற்போது சங்கராந்தி பண்டிகை நெருங்கி வருவதால் தரமான சண்டை சேவல்களின் விலை 30 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதாவது சண்டை சேவல்கள் ரூ 2.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  வெளிமாநிலங்களில் இருந்து சேவல்களை வாங்கி வந்து தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறி மோசடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

  இதுகுறித்து சேவல் வளர்ப்பவர் ஒருவர் கூறுகையில்:-

  வெளிநாடுகளில் இருந்து சேவல்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் சிலர் உண்மையை மறைத்து சேவல்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

  வெளிநாடுகளில் இருந்து சேவல்கள் விற்பனை செய்தால் நம்முடைய கால சூழ்நிலையை தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்து போகும் என கூறினார்.

  சேவல்கள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதனுடைய எடை வேகம் சண்டையிடும் திறன் மட்டுமே வெற்றியை நிச்சயிக்கும் என்பதால் தரமான சண்டை சேவல்களை தேடி அலைந்து வருகின்றனர்.

  • விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
  • கட்சி நிர்வாகிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

  திருவட்டார், நவ.23-

  திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் குமரன்குடி ஊராட்சிக்குட்பட்ட மங்காட்டுகடை பகுதியில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நடைபெற்றது.

  விழாவில் விஜய்வசந்த் எம்.பி. கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து, குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

  இந்நிகழ்ச்சியில் திருவட் டார் வட்டார ஆணை யாளர்கள் சசி, யசோதா, வட்டார பொறி யாளர் சஞ்சுபொன்ராஜன், அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், முன்னாள் வட்டார தலைவர் ஜெகன் ராஜ், குமரன்குடி ஊராட்சி மன்ற தலைவர் பால்சன், துணை தலைவர் சுபலா, வேர்கிளம்பி பேரூராட்சி துணை தலைவர் துரைராஜ் மனுவேல், மாவட்ட காங் கிரஸ் பொதுசெயலாளர் ஜான்இக்னேசியஸ், ஆற்றூர் நகர தலைவர் ஜான் வெர்ஜின், வட்டார பொது செயலாளர் ஜஸ்டின், ஓ.பி.சி. பிரிவு வட்டார தலைவர் ஜெகன், அரசு ஒப்பந்தகாரர் பிரின்ஸ் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
  • ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடிமைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

  கன்னியாகுமரி :

  கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு பகுதியான அஞ்சுகூட்டு விளை அருந்ததியர் காலனியில் விஜய்வசந்த் எம்.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டநிதியில்இருந்து ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடிமைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது.

  கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரிஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநா தன்,பேரூராட்சி 15- வது வார்டு கவுன்சிலர் பூலோகராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கன்னியா குமரி பாராளு மன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

  இந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வக்கீல் சாம் சுரேஷ்குமார், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ், முன்னாள் பேரூரா ட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
  • அனந்தமங்கலம் - பள்ளிக்கல் செல்லும் சாலையை காங்கிரீட் சாலையாக அமைக்க ரூ.5 - லட்சம்

  மார்த்தாண்டம் :

  கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பைங்குளம் ஊராட்சியில் உள்ள ஊற்றுக்குழி முதல் ஊற்றுக்குழி சர்ச் செல்லும் சாலை, கைசூண்டி மோகன் மருத்துவமனை முதல் பொற்றவிளை செல்லும் சாலை, அனந்தமங்கலம் - பள்ளிக்கல் செல்லும் சாலை ஆகிய மூன்று சாலைகள் பல வருடங்களாக சீரமைக்காமல் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் இந்த சாலைகளில் பொது மக்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

  இப்பகுதிகளில் உள்ள மக்கள் இந்த சாலைகளை காங்கிரீட் சாலைகளாக சீரமைத்து தர வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஊற்றுக்குழி முதல் ஊற்றுக்குழி சர்ச் செல்லும் சாலையை காங்கிரீட் சாலையாக அமைக்க ரூ.5 -லட்சமும், கைசூண்டி மோகன் மருத்துவமனை முதல் பொற்றவிளை செல்லும் சாலையை காங்கிரீட் சாலையாக அமைக்க ரூ.9 - லட்சமும், அனந்தமங்கலம் - பள்ளிக்கல் செல்லும் சாலையை காங்கிரீட் சாலையாக அமைக்க ரூ.5 - லட்சமும் என மூன்று சாலைகளையும் சீரமைக்க மொத்தம் 19 - லட்சம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தார்.

  இதையெடுத்து இந்த 3 சாலைகளும் காங்கிரீட் சாலைகளாக சீரமைக்கும் பணிகள் முடிவடை ந்ததையடுத்து கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. மூன்று சாலைகளையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • ரூ.3 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது
  • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்

  புதுக்கோட்டை

  அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் ராஜேந்திரபுரம் தென்னை வணிக வளாகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 16 விவசாயிகள் 4,016 கிலோ கொப்பரை தேங்காயை கொண்டு வந்தனர். இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.78-ம், குறைந்தபட்சம் ரூ.76-க்கும் கொப்பரை தேங்காய் ஏலம் போனது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் போட்டி போட்டு கொப்பரைகளை ஏலம் எடுத்தனர். இதனால் ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்து 258-க்கு கொப்பரை ஏலம் போனதாக அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் குணசேகரன் தெரிவித்தார்.

  • விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
  • அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது.

  கன்னியாகுமரி :

  கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு ஒற்றையால் விளை பகுதியில் விஜய் வசந்த் எம்.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது.

  பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், கவுன்சிலர் சுஜா அன்பழகன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

  கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த், அடிக்கலை நாட்டி வைத்து புதிய அங்கன்வாடி அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குமரி கிழக்கு காங்கிரஸ் கமிட்டி செயலா ளர் வக்கீல் சீனிவாசன், அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சாம் சுரேஷ்குமார், , அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், பேரூ ராட்சி சுகாதார அதிகாரி முருகன், கவுன்சிலர்கள் ஆனிரோஸ் தாமஸ், அட்லின் சேகர், ஒற்றையால்விளை இந்து நாடார் சமுதாய வகை முத்தாரம்மன் கோவில் டிரஸ்ட் தலைவர் பாலசுந்தரம், முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ், கொட்டாரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ஆதி லிங்கபெருமாள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
  • களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்

  மார்த்தாண்டம் :

  களியக்காவிளை பேரூராட்சிட்பட்ட 9-வது வார்டு கைதக்குழியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலி ருந்து ரூ.15 லட்சம் செலவில் பாலம் கட்டி முடிக்கப்ப ட்டது. இதனை விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்.

  களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் பினு லால்சிங், அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்னகுமார், வட்டார தலைவர் ரவி சங்கர், பேரூராட்சி காங்கி ரஸ் கமிட்டி தலைவர் பென்னட், வார்டு உறுப்பினர்கள் ஜெயகலா, விஜயா, சுசீலா, ரிபாய், தாஸ் உட்பட கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்துகொண்ட னர்.

  • வட்டியுடன் கடனை திருப்பி கொடுத்து விடுவதாக கூறி உள்ளார்.
  • திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு தப்பி செல்ல முயன்றபோது பிடிபட்டார்.

  நாகப்பட்டினம்:

  மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் அசலாம் (வயது43).

  இவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

  வியாபாரம் தொடர்பாக அசலாம் மலேசியாவுக்கு சென்று வரும்போது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பட்டமங்க ளத்தை சேர்ந்த பில்லப்பன் (50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

  இந்த நிலையில் பில்லப்பன் கடந்த 2014-ம் ஆண்டு மலேசியாவில் தனக்கு ரூ.500 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாகவும், அதை விற்று பராமரிக்க வேண்டும் எனக்கூறி அசலாமிடம் ரூ.2 கோடியே 13 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.

  அப்போது வட்டியுடன் கடனை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் கூறி உள்ளார்.

  இதேபோல பழக்கத்தின் பேரில் பூம்புகார் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதனிடம் ரூ.28 லட்சம், உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் உதயகுமார் என்பவரிடம் ரூ.31 லட்சம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் நவநீதிகிருஷ்ணன் என்பவ ரிடம் ரூ.10 லட்சம் என கடன் வாங்கி உள்ளார்.

  முன்னாள் எம்.எல்.ஏ., தொழில் அதிபர்கள் உள்பட 4 பேரிடம் ரூ.2 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமாக கடன் வாங்கி விட்டு அதை திருப்பி தராமல் பில்லப்பன் காலம் தாழ்த்தி வந்தார்.

  இதனால் சந்தேகம் அடைந்த 4 பேரும் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2015-ம் ஆண்டு புகார் அளித்தனர்.

  புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

  இதுதொடர்பாக கடந்த 25.4.2022 அன்று நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

  இதை அறிந்த பில்லப்பன் தலைமறைவாகி விட்டார்.

  போலீசார் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

  இதையடுத்து போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கும் 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பி தொடர்ந்து தேடும் பணியை மேற்கொண்டனர்.

  இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு தப்பி செல்ல முயன்றபோது, விமான நிலைய போலீசார் பில்லப்பனை பிடித்து, நாகை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  அவரை நேற்று முன்தினம் நாகை போலீசார் கைது செய்து அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட னர்.

  பின்னர் நாகை கோர்ட்டில் நீதிபதி நாகப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

  அவரை வருகிற 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

  அதன்படி போலீசார் பில்லப்பனை சிறையில் அடைத்தனர்.

  • மர்ம நபர் மொபட்டில் இருந்த ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்தை திருடிக்கொண்டு ஓடினார்.
  • அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

  பட்டுக்கோட்டை:

  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த அதம்பை வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் பாலன் (வயது 41 ) விவசாயி.
  சம்பவத்தன்று பாலன் பட்டுக்கோட்டை பெரிய தெரு பகுதியில் உள்ள அரசு வங்கியில், தன்னுடைய கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் விவசாய தேவைக்காக எடுத்துள்ளார்.

  தன்னுடைய மொபைட்டில் பணத்தை வைத்துகொண்டு புறப்பட்டார்.

  அப்போது மேலும் கூடுதலாக பணம் தேவைப்பட்டதால், பட்டுக்கோட்டை வடசேரி சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் முன்பு மொபைட்டை நிறுத்திவிட்டு உள்ளே சென்று பணம் எடுத்தார்.

  இதனை நோட்டமிட்ட மர்ம நபர் சென்றுவிட்டு மீண்டும் வந்த போது, மர்ம நபர் மொபைட்டில் இருந்த ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்தை திருடி கொண்டு ஓடினார்.

  இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாலன் திருடன்.. திருடன்.. என சத்தம் போட்டார்.

  அதற்குள் அந்த மர்மநபர் தப்பி ஓடிவிட்டார்.

  இது குறித்து பாலன் பட்டுக்கோட்டை நகர போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

  அதில் வங்கியில் பாலன் பணம் எடுக்கச் சென்ற பொழுது மர்மநபர் ஒருவர் மாஸ்க் அணிந்தவாறு பின்புறம் வந்து நின்றுள்ளார்.

  அதனை தொடர்ந்து பாலன் பணம் எடுத்ததை அறிந்த, அந்த மர்ம நபர் இரு சக்கர வாகனத்தில் மேலும் ஒரு நபருடன் சேர்ந்து அவரை பின்தொடர்ந்து சென்று பணத்தை திருடி சென்றது பதிவாகியுள்ளது.

  தொடர்ந்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.