search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sum"

    • விபத்தில் உயிரிழந்த ராமனின் வாரிசுதாரரான அவரது மனைவி நீலா என்பவருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.
    • ரூ.30 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில், விபத்தில் உயிரிழந்த ராமனின் வாரிசுதாரரான அவரது மனைவி நீலா என்பவருக்கு விபத்து காப்பீட்டு தொகை ரூ.30 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

    அருகில் பாரத ஸ்டேட் வங்கி நாகை மண்டல மேலாளர் ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை முதன்மை மேலாளர் ராமநாதன், புதுப்பட்டினம் கிளை மேலாளர் ஹேம்நாத் மற்றும் பலர் உள்ளனர்.

    • நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிப்பு விடுப்பு சரண்டரை உடனே வழங்க வேண்டும்.
    • ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுக்கா கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பவளச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    வட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், கோட்ட செயலாளர் கோபாலகி ருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு காலத்தை இருட்டாக்கும் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிப்பு விடுப்பு சரண்டரை உடனே வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதிய மீண்டும் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாவை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வங்கி கணக்குகள் ரூ. 1 கோடியே 11 லட்சம் மதிப்பிலான தொகையுடன் முடக்கம்.
    • வாகன விபத்தில் ஈடுபட்ட 1,123 நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    நாகப்பட்டினம்:

    2023 -ம் ஆண்டின் தொடக்க நாளான இன்று நாகை எஸ்பி. அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாகை மாவட்டத்தில் 2022-ம் ஆண்டில் மட்டும் 1 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பிடிக்கப்பட்டு, 68 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 105 கஞ்சா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    மேலும் இரண்டு படகுகள், 4 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், கடத்தலில் ஈடுபட்ட 69 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான தொகையுடன் முடக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

    தொடர்ந்து 2021 ஆம் ஆண்டைவிட 2022 ஆம் ஆண்டில் குற்ற சம்பவங்கள் குறைந்து உள்ளது. திருட்டு வழக்குகள் 80 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், களவு போன 82 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளது.

    மேலும், 2022 -ம் ஆண்டில் வாகன விபத்தில் ஈடுபட்ட 1123 நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் பாதுகாப்பான புத்தாண்டு அமைய நாகை மாவட்ட மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தெரிவித்தார்.

    • வயலில் நடவு பணியில் ஈடுபட்டிருந்தபோது இடி, மின்னல் தாக்கி இறந்தார்.
    • மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரண உதவி தொகை வழங்கல்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே திருச்சோற்றுத்துறையை சேர்ந்த நடராஜன் மனைவி சாரதாம்பாள் (வயது 55). இவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு வயலில் நடவு பணியில் ஈடுபட்டிருந்தபோது இடி மின்னல் தாக்கி இறந்தார்.

    இந்த நிலையில் தமிழக அரசின் மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரண உதவித் தொகையை திருவையாறு தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் பழனியப்பன் தலைமையில் சாரதாம்பாள் மகன் பாரதிராஜாவிடம் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழுத் தலைவர் அரசாபரகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்டபாணி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயசீலன், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், ஊராட்சிமன்றத் தலைவர் ரேவதி முருகானந்தம், ஆகியோர் உடனிருந்தனர்.

    • உள்ளாட்சி தேர்தலின்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.
    • 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கருவாழக்கரை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவரது எதிர் வீட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்கிற ராஜசேகர் (34).

    இவர்கள் இருவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.

    இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு கணேசன் மற்றும் அவரது உறவினர்கள் அமிர்தம், லட்சுமி ஆகியோர் அங்கு நின்று கொண்டிருந்தபோது் ராஜசேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெங்கடேசன் (33), வெங்கடேஷ் (33), மணி (38), முனி என்கிற மணிகண்டன் (27), விஜி என்கிற விஜய் (27), விக்னேஷ் (28) ஆகிய 7 பேரும் சேர்ந்து கணேசன், அமிர்தம், லட்சுமி ஆகிய 3 பேரையும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

    மேலும் கணேசன் வீட்டில் இருந்த நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து சேதப்படுத்தி உள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கு மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று மாவட்ட கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இளங்கோ தீர்ப்பு வழங்கினார்.

    ராஜசேகர், வெங்கடேசன், வெங்கடேஷ், மணி, விஜய், விக்னேஷ் ஆகிய 6 பேருக்கும் 4 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், மணிகண்டனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

    அபராத தொகையை கட்டத்தவறினால் தலா 2 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

    • ஒவ்வொரு ஊரிலும் கோவில் நிலங்களை வைத்திருக்கும் குத்தகைதாரர்கள் கோவிலுக்கு குத்தகை தொகையை தவறாமல் வழங்கவேண்டும்.
    • ஒவ்வொருவரும் தினந்தோறும் இறைவழிபாட்டை கடைபிடித்தால் தான் தர்மம் தழைக்கும்.

    சீர்காழி:

    அகோபில மடம்ஜீயர் அழகிய சிங்கர் திருநாங்கூ ரில் சதுர்மாஸியவிரதம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திருவாலி கிராமத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான லெட்சுமி நரசிம்மர்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

    ஒவ்வொரு ஊரிலும் கோவில் நிலங்களை வைத்தி ருக்கும் குத்தகை தாரர்கள் கோவிலுக்கு குத்தகை தொகையை தவறாமல் வழங்கவேண்டும். அந்த தொகையை கொண்டுதான் கோவிலின் தினந்தோறும் பூஜை நடைபெறும்ஒவ்வொ ருவரும் தின ந்தோறும் இறைவழிபாட்டை கடைபி டித்தால் தான் தர்மம் தழை க்கும். இயற்கை மாறாமல் இருக்கும் தற்போழுது உலக முழுவதும் கொரோனா உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கபடுகின்றனர். இந்த நோய்களைதடுத்திட பாரம்பரிய உணவு முறை களை நாம் உட்கொள்ள வேண்டும்.

    மேலும் நம்முடைய முன்னோர்கள் வகுத்து தந்த மாதா, பிதா, குரு மற்றும் தெய்வ என்கிற கோட்பாட்டை நாம் கடைபிடிக்கவேண்டும் என்றார். பின்பு அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்அப்போது பக்த ஜன சபைதலைவர் ரெகுநாதன், ஆசிரியர்கள் ஸ்ரீனிவாசன், சசிகோபாலன், பாலாஜி பட்டாச்சாரியார் உடனிரு ந்தனர்.

    ×