மின்னல் தாக்கி பலியான பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

வயலில் நடவு பணியில் ஈடுபட்டிருந்தபோது இடி, மின்னல் தாக்கி இறந்தார்.மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரண உதவி தொகை வழங்கல்.
நிவாரண தொகையை துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
நிவாரண தொகையை துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
Published on

திருவையாறு:

திருவையாறு அருகே திருச்சோற்றுத்துறையை சேர்ந்த நடராஜன் மனைவி சாரதாம்பாள் (வயது 55). இவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு வயலில் நடவு பணியில் ஈடுபட்டிருந்தபோது இடி மின்னல் தாக்கி இறந்தார்.

இந்த நிலையில் தமிழக அரசின் மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரண உதவித் தொகையை திருவையாறு தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் பழனியப்பன் தலைமையில் சாரதாம்பாள் மகன் பாரதிராஜாவிடம் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழுத் தலைவர் அரசாபரகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்டபாணி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயசீலன், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், ஊராட்சிமன்றத் தலைவர் ரேவதி முருகானந்தம், ஆகியோர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com