சீர்காழியில், கிராம நிர்வாக அலுவலகர்கள் ஆர்ப்பாட்டம்

நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிப்பு விடுப்பு சரண்டரை உடனே வழங்க வேண்டும்.ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்.
சீர்காழியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுக்கா கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பவளச்சந்திரன் தலைமை தாங்கினார்.

வட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், கோட்ட செயலாளர் கோபாலகி ருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு காலத்தை இருட்டாக்கும் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிப்பு விடுப்பு சரண்டரை உடனே வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதிய மீண்டும் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாவை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com