search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LAKHS"

    • பாகூரில் உள்ள போலீஸ் நிலையம் பழுதடைந்த நிலையில் உள்ளது.
    • சிறப்பு கட்டிடங்கள் பிரிவு மூலம் சீரமைக்க திட்டமிடப்பட்டது.

    புதுச்சேரி:

    பாகூரில் உள்ள போலீஸ் நிலையம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனைத் பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடங்கள் பிரிவு மூலம் சீரமைக்க திட்டமிடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இன்று ரூ.30 லட்சத்து 77ஆயிரம் செலவில் சீரமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலமைதாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், இன்ஸ்பெக்டர் கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் நந்த குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வல்லவன், உதவி பொறியாளர் ரவீந்திரன், இளநிலை பொறியாளர் ஏகாம்பரம், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.3 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது
    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்

    புதுக்கோட்டை

    அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் ராஜேந்திரபுரம் தென்னை வணிக வளாகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 16 விவசாயிகள் 4,016 கிலோ கொப்பரை தேங்காயை கொண்டு வந்தனர். இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.78-ம், குறைந்தபட்சம் ரூ.76-க்கும் கொப்பரை தேங்காய் ஏலம் போனது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் போட்டி போட்டு கொப்பரைகளை ஏலம் எடுத்தனர். இதனால் ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்து 258-க்கு கொப்பரை ஏலம் போனதாக அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் குணசேகரன் தெரிவித்தார்.

    • வட்டியுடன் கடனை திருப்பி கொடுத்து விடுவதாக கூறி உள்ளார்.
    • திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு தப்பி செல்ல முயன்றபோது பிடிபட்டார்.

    நாகப்பட்டினம்:

    மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் அசலாம் (வயது43).

    இவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

    வியாபாரம் தொடர்பாக அசலாம் மலேசியாவுக்கு சென்று வரும்போது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பட்டமங்க ளத்தை சேர்ந்த பில்லப்பன் (50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் பில்லப்பன் கடந்த 2014-ம் ஆண்டு மலேசியாவில் தனக்கு ரூ.500 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாகவும், அதை விற்று பராமரிக்க வேண்டும் எனக்கூறி அசலாமிடம் ரூ.2 கோடியே 13 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.

    அப்போது வட்டியுடன் கடனை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் கூறி உள்ளார்.

    இதேபோல பழக்கத்தின் பேரில் பூம்புகார் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதனிடம் ரூ.28 லட்சம், உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் உதயகுமார் என்பவரிடம் ரூ.31 லட்சம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் நவநீதிகிருஷ்ணன் என்பவ ரிடம் ரூ.10 லட்சம் என கடன் வாங்கி உள்ளார்.

    முன்னாள் எம்.எல்.ஏ., தொழில் அதிபர்கள் உள்பட 4 பேரிடம் ரூ.2 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமாக கடன் வாங்கி விட்டு அதை திருப்பி தராமல் பில்லப்பன் காலம் தாழ்த்தி வந்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த 4 பேரும் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2015-ம் ஆண்டு புகார் அளித்தனர்.

    புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதுதொடர்பாக கடந்த 25.4.2022 அன்று நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதை அறிந்த பில்லப்பன் தலைமறைவாகி விட்டார்.

    போலீசார் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கும் 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பி தொடர்ந்து தேடும் பணியை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு தப்பி செல்ல முயன்றபோது, விமான நிலைய போலீசார் பில்லப்பனை பிடித்து, நாகை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவரை நேற்று முன்தினம் நாகை போலீசார் கைது செய்து அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட னர்.

    பின்னர் நாகை கோர்ட்டில் நீதிபதி நாகப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    அவரை வருகிற 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    அதன்படி போலீசார் பில்லப்பனை சிறையில் அடைத்தனர்.

    • மைக்ரோ ஏ.டி.எம். மூலமாக பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டைகள் மூலம் கடன் வழங்கப்பட்டது.
    • கூட்டுப்பொறுப்புக்குழுக்களை சேர்ந்த 10 பேருக்கு ரூ.4.50 லட்சம் கடன் வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் உள்ள சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை அங்காடியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    பண்டகசாலையின் சுயசேவைபிரிவு மருந்தகங்கள் மற்றும் அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டு கும்பகோணம் பகுதி மக்களுக்கு சிறப்பான சேவையாற்றி வருவதாக பாராட்டினார்.

    முன்னதாக, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு வருகை தந்த ராதாகிருஷ்ணன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் பேங்க் ஆன் வீல்ஸ் வேன்-ஐ தொடக்கி வைத்து, மைக்ரோ ஏ.டி.எம். மூலமாக பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டைகள் மூலம் கடன் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, வங்கியின் தலைமை கிளை மூலம் 6 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 70 பேருக்கு ரூ.12 லட்சமும், 2 கூட்டுப்பொறுப்புக்குழுக்களை சேர்ந்த 10 பேருக்கு ரூ.4.50 லட்சமும் கடன் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் வங்கி தலைவர் ஆசைமணி, தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, வங்கி மேலாண்மை இயக்குநர் பெரியசாமி, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி, முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, வங்கி முதன்மை வருவாய் அலுவலர் ஜெகத்ரட்சகன், பண்டகசாலை தலைவர் அயூப்கான், பண்டகசாலையின் துணைப்பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான சிவசுப்பிரமணியன் மற்றும் துணைப்பதிவாளர்கள் தயாள விநாயக அமல்ராஜ், அட்சயப்பிரியா, கருப்பையா, வங்கியின் உதவி பொது மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பலகார சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்தனர்.
    • 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், மாலினி, தம்பதியர். இவர்கள் கடந்த சில வருடங்களாகவே நரசிங்கபுரம், விநாயகபுரம், திருநாவுக்கரசு நகர், தில்லை நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பலகார சீட்டு நடத்துவதாக மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை வசூல் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அவர்களிடம் பணம் கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தங்களிடம் பணம் வசூல் செய்து கொண்டு மோசடி செய்த 2 பேரிடமிருந்து தங்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என கூறினார்கள். இதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட சந்திரசேகர், மாலினி ஆகிய இருவரையும் போலீசார் அழைத்து விசாரித்தனர்.

    அப்பொழுது விரைவில் அனைவருக்கும் பணத்தை கொடுத்து விடுவதாக அவர்கள் கூறினர். இதை தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.

    • ரூ.30.75 லட்சம் அரசு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்.
    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட்டது

    கரூர்:

    ரூ.30.75 லட்சம் அரசு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் 62 உள்ளிட்ட 362 மனுக்கள் பெறப்பட்டது.

    பின்னர் ரூ.4,14,240ல் 12 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஒரு நபருக்கு தங்கத் தந்தை திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா, தாட்கோ திட்டத் தின் கீழ் 5 பேருக்கு ரூ.26.61 லட்சத்தில் நிலம் வாங்கும் திட்டம், தொழில் முனைவோர் திட்டத்தின் சார்பில் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் அரசு மானியத்துடன் தொழில் தொடங்குவதற்கான ஆணைகள் என மொத்தம் 18 பேருக்கு ரூ.30.75 லட்சத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளைகலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதின், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அன்புமணி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×