என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிராம்பட்டினத்தில், அடுத்தடுத்து 2 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது
    X

    தீயில் எரிந்து சேதமான கூரை வீடு.

    அதிராம்பட்டினத்தில், அடுத்தடுத்து 2 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது

    • நேற்றிரவு வழக்கம்போல் இருவரும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
    • ரூ. 3 லட்சம்‌ மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40).

    இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி மற்றும் தாய் இருவரும் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இதேபோல் அருகில் உள்ள வீட்டில் வீரையன் (44) என்பவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவியும், மகளும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்றிரவு வழக்கம்போல் இருவரும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது, திடீரென நள்ளிரவில் வெடிக்கும் சத்தம் கேட்டு இருவரும் கண் விழித்து பார்த்தபோது வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் கத்தி கூச்சலிட்டனர்.

    அதற்குள்ளாக, அருகில் இருந்த மாரிமுத்து என்பவரின் வீட்டிலும் தீ பரவியது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து தண்ணீர் ஊற்றி போராடி தீயை அணைத்தனர்.

    இதில் வீட்டில் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

    அதிர்ஷ்டசவமாக வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    Next Story
    ×