சேத்தியாத்தோப்பு பகுதியில் அதிகாரிகள் சோதனை2 டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் அழிப்பு.

டீக்கடைகள் உணவகங்கள் பழக்கடை குளிர்பான கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.2 டீக்கடைகளில் கலப்பட தூள் வைத்திருந்த 2 கிலோ டீ தூள் அழிக்கப்பட்டது,
கடையில் அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி. 
கடையில் அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி. 
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி, பண்ருட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள டீக்கடைகள் உணவகங்கள் பழக்கடை குளிர்பான கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது காலா வதியான பொருட்கள், குளிர்பானங்கள், கலப்பட டீ தூள், பழக்கடைகளில் கார்போக்கல் வைத்து பழங்கள் பழுக்க வைக்க படுகிறதா என்பதை குறித்து ஆய்வு மேற்கொண்டனர் 2 டீக்கடைகளில் கலப்பட தூள் வைத்திருந்த 2 கிலோ டீ தூள் அழிக்கப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com