search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலப்படம்"

    • போலீசார் மற்றும் அதிகாரிகள் பேகம் பேட்டையில் உள்ள அவரது குடோனில் இருந்த மூலப்பொருட்களை ஆய்வு செய்தனர்.
    • ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ரஹீம் சரணியா. இவர் ஐதராபாத் மேல் பள்ளியில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

    போலீசார் மற்றும் அதிகாரிகள் பேகம் பேட்டையில் உள்ள அவரது குடோனில் இருந்த மூலப்பொருட்களை ஆய்வு செய்தனர்.

    இதில் கலப்பட இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்தது தெரிந்தது. ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கலப்பட இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்ததாக பாண்டுரங்க ராவ், ரஹீம், அஜய்குமார், அஹர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பேகம் பேட்டை பஜாரில் உள்ள கடைகளில் சோதனை செய்து ஏராளமான கலப்பட இஞ்சி, பூண்டு பேஸ்ட் பறிமுதல் செய்தனர்.

    குன்னத்தூர்:

    குன்னத்தூர் சித்தாண்டி பாளையத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் இந்த கடையில் வாங்கப்பட்ட ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதி பொதுமக்கள் கலப்படம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் அரிசியை தனியாக எடுத்து பத்திரப்படுத்தி வைத்துள்ளனர்.

    ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பிளாஸ்டிக் அரிசியை கலப்படம் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுககு புகார்கள் வந்தது.
    • இதையடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுககு புகார்கள் வந்தது. இதை யடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதில், போலியானது, உணவுக்கு ஒவ்வாத கேடு தரக்கூடியது என்பது போன்ற உணவ பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, கடந்த மாதத்தில் கலப்பட ஜவ்வரிசி, தரமற்ற உணவு பொருள் விற்றது, கலப்பட ஆயில் விற்றது மற்றும் இதர பொருட்களில் கலப்படம் உள்ளிட்ட 14 வழக்குகளில் ரூ.85 ஆயிரம் அபராதம் விதித்து, வருவாய் அலுவலர் மேனகா உத்தரவிட்டார்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்களில் கலப்படம் செய்து விற்றால் கடும் நட வடிக்கை மேற்கொள்ளப்ப டும். கடைகளில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, என்றனர்.

    • டீக்கடைகள் உணவகங்கள் பழக்கடை குளிர்பான கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 2 டீக்கடைகளில் கலப்பட தூள் வைத்திருந்த 2 கிலோ டீ தூள் அழிக்கப்பட்டது,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி, பண்ருட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள டீக்கடைகள் உணவகங்கள் பழக்கடை குளிர்பான கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது காலா வதியான பொருட்கள், குளிர்பானங்கள், கலப்பட டீ தூள், பழக்கடைகளில் கார்போக்கல் வைத்து பழங்கள் பழுக்க வைக்க படுகிறதா என்பதை குறித்து ஆய்வு மேற்கொண்டனர் 2 டீக்கடைகளில் கலப்பட தூள் வைத்திருந்த 2 கிலோ டீ தூள் அழிக்கப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    • வெல்லம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 4700 கிலோ (அஸ்கா) சர்க்கரை மற்றும் வெல்லத்தை பிளீச்சிங் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • பொதுமக்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும் வெல்லத்தை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் திருப்பூர்மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிரஞ்சீவி, பாலமுருகன், விஜயகுமார் மற்றும் ரகுநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மடத்துக்குளம் வட்டார பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது ஆலைகளில் தயாரித்து விற்பனைக்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்ததில் கலப்படம் என சந்தேகிக்கப்பட்ட 2500 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதிலிருந்து 2 வெல்லம் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. 

    மேலும் வெல்லம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 4700 கிலோ (அஸ்கா) சர்க்கரை மற்றும் வெல்லத்தை பிளீச்சிங் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெல்லம் அடர் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். மாறாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக வேதிப்பொருட்களான சோடியம் பை சல்பேட், கால்சியம் கார்பனேட், சல்பர் டை ஆக்சைடு, சூப்பர் பாஸ்பேட் போன்ற ரசாயன பொருட்களை பயன்படுத்தக்கூடாது. வெல்லம் தயாரிக்க அஸ்கா பயன்படுத்தக்கூடாது என வெல்லம் தயாரிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

    வெல்லம் உற்பத்தியாளர்கள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்றிருக்க வேண்டும் . அரசு உத்தரவின்படி வெல்லம் தயாரிக்கும் இடங்களில் சிசிடிவி. கேமரா பொருத்தி இருக்க வேண்டும். வெல்லம் தயாரிப்பில் விதிமீறல் இருப்பது தெரியவந்தால், உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை பாயும்.

    பொதுமக்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும் வெல்லத்தை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். வியாபாரிகள் தரமற்ற வெல்லத்தை வாங்கி விற்கக்கூடாது.

    இவர் அவர் கூறினார்.

    ×