search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சிகள் கூட்டம்"

    • பாரம்பரியமிக்க நம் நாட்டில் மேலை நாடுகளில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு முன்பே பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
    • மாணவர்கள் அந்த வாசகங்களை பின்பற்றி நடக்க வேண்டும்.

    பட்டமளிப்பு விழாவில் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத்தலைவர் பிபேக் டெப்ராய் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் இதுவரை இங்கு வந்ததில்லை. எனவே எனக்கு முதல் முறை. என்னை சிறப்பு விருந்தினராக அழைத்த கவர்னர் மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளருக்கு நன்றி. இமயம் முதல் குமரி வரை பல்வேறு வளங்களை இந்தியா பெற்றுள்ளது. மேலை நாடுகளில் பல்கலைகழகங்கள் உருவாவதற்கு முன்பே நாலந்தா, தக்சசீலம் போன்ற இடங்களில் பல்கலைகழகங்கள் இருந்தது. பாரம்பரியமிக்க நம் நாட்டில் மேலை நாடுகளில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு முன்பே பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் இந்தியா இருந்த போது ஆசியாவிலேயே முதல் பெண் பட்டதாரியாக 1983-ல் காதம்பரி என்பவர் பட்டம் பெற்றார். தற்போது அதிகளவில் பெண்கள் பட்டம் பெறுகின்றீர்கள்.

    உலக சுற்றுலாத்தலத்தில் இந்திய சுற்றுலா துறையால் அதிதி தேவோ பவ என்ற வாசகம் முழக்கமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வாசகம் இந்திய கலாச்சாரத்தையும், இந்து மதத்தையும் பற்றி பேசுகிறது. தைத்ரிய உபநிஷத்தில் வரும் மாத்ரு தேவோ பவ, பிதிர் தேவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ என்ற முழக்கங்கள் நம் தாய்,தந்தை, ஆசான், விருந்தினர்களை கடவுளாக கருத வேண்டும் என சொல்கிறது.

    மாணவர்கள் அந்த வாசகங்களை பின்பற்றி நடக்க வேண்டும். பட்டம் பெறுவோர் 20 வயதுடையவராக இருக்கிறீர்கள். நீங்கள் இனி பறந்து விரிந்து இருக்கும் உலகத்திற்கு செல்லப்போகிறீர்கள்.

    40 வயதில் உலகை முழுதும் தெரிந்து கொண்டு உங்களால் சாதனை படைக்க முடியும். மகிழ்ச்சி என்பது வெளி உலகில் எங்கிருக்கிறது என சொல்ல முடியாது. உங்களை நீங்கள் வென்றால் உலகை நீங்கள் வெற்றி பெறமுடியும்.

    2047-ல் உலகில் இந்தியா முன்னேறிய நாடாக இருக்கும். முன்னேறிய இளம் இந்தியாவை உருவாக்குவதில் இளம் பட்டதாரிகள் மிக முக்கிய பங்காற்ற வேண்டும். இந்தியாவின் பழங்காலம் பாரம்பரியமிக்கதாக உள்ளது. வருங்காலம் ஒளிமிகுந்த காலமாக அமைய உள்ளது.

    தற்போதைய சூழலில் நிச்சயமற்ற நிலை இருந்து வருகிறது. 2047-ல் இந்தியா உலகின் தலை சிறந்த நாடாக மாறுவதற்கான கட்டமைப்பு பணிகளை இளம் பட்டதாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இளம்பட்டதாரிகள் இந்த நாட்டிற்கு பல்வேறு பணிகளை திருப்பி அளிக்க வேண்டியதுள்ளது. சமூக பங்களிப்பை நீங்கள் நம் நாட்டிற்கு வழங்குவதற்கான நேரத்தை ஒதுக்கவேண்டும். நாடு ஒளிமிகுந்த பாதையை அடைய இளம்பட்டதாரிகள் தங்களது பங்களிப்பை செய்யவேண்டும். இப்போது பட்டம் வாங்கும் நீங்கள் 2047-ல் பட்டம் வழங்கக்கூடிய இடத்தில் இருக்கலாம். எதுவும் நடக்கலாம். சில நேரங்களில் திட்டமிடாததும் நடக்கும். ஆனால் மனதை தளர விடக்கூடாது. நீங்க தான் எதிர்கால இந்தியாவை கட்டமைப்பீர்கள். நீங்கள் தான் இளம் இந்தியா. உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் விமர்சனம்
    • வாரிசு அரசியலால் நாடு சீரழிந்துள்ளது. அவர்களுக்கு, அவர்களுடைய குடும்ப வளர்ச்சி மட்டுமே முக்கியம்.

    அந்தமான் போர்ட் பிளேயரில் வீர சாவர்கர் சர்வதேச விமான நிலைய முனையத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டில் ஊழலை ஊக்குவிப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுகின்றனர். சில கட்சிகள் தங்களின் குடும்பத்திற்கான வளர்ச்சியை மட்டுமே விரும்புகின்றன. 2024-ல் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர்.

    ஜனநாயகம் என்பது மக்கள். மக்களால். மக்களுக்காக. ஆனால், பரம்பரை அரசியல் கட்சிகளுக்கு அது குடும்பம். குடும்பத்தினரால், குடும்பத்தினருக்காக. முதலில் குடும்பம்தான். நாட்டிற்காக ஒன்றுமில்லை. இதுதான் அவர்களது முழக்கம்... அங்கே வெறுப்பு ஊழல், திருப்திபடுத்தும் அரசியல் உள்ளது.

    வாரிசு அரசியலால் நாடு சீரழிந்துள்ளது. அவர்களுக்கு, அவர்களுடைய குடும்ப வளர்ச்சி மட்டுமே முக்கியம். நாடடில் ஏழை மக்கள் குறித்து அல்ல.

    டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏறுவதற்கு முன் அந்தமானில் மூவர்ணகொடி ஏறி விட்டது. ஆனால் அடிமைத்தனத்தின் அடையாளம் சில இருந்தது. தீவுகளின் பெயர்களை மாற்றியதன் மூலம் அந்த அடையாளங்களை நாம் நீக்கி உள்ளோம்.

    ஊழலை ஊக்குவிப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் கூடி இருக்கிறார்கள். குடும்பத்திற்காக இருந்தது. குடும்பமாக இருக்கிறது. குடும்பத்திற்காக இருப்பது. தான் எதிர்க்கட்சிகளின் தராக மந்திரம். குடும்பத்திற்காக அரசியல் செய்வதே எதிர்க்கட்சிகளின் கொள்கையாக இருந்து வருகிறது.

    ஊழல் வழக்குகளை சந்தித்தாலும் தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சிகள் நற்சான்று வழங்குகின்றன.

    மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட வன்முறைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேச மறுக்கின்றன. இந்தியாவில் சில கட்சிகளின் சுய நல அரசியலால் பெரு நகரங்களின் வளர்ச்சி தடைபட்டு உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் பழைய அரசாங்கத்தின் தவறுகளை திருத்தி இருக்கிறோம். மக்களுக்காக புதியவசதி, வாய்ப்புகளை பாரதீய ஜனதா ஆட்சியில் ஏற்படுத்தி கொடுத்து வருகிறோம். இந்தியாவின் புதிய வளர்ச்சிக்கு வித்திட்டு இருக்கிறோம்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    • பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில் 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
    • இன்றைய கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பங்கேற்கவில்லை.

    பெங்களூரு:

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் ஏற்பாட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

    காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதில் பாராளுமன்ற தேர்தலை ஓரணியில் திரண்டு எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

    இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. தாஜ் வெஸ்ட் எண்டு ஓட்டலில் நடைபெறும் இக்கூட்டத்தில், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றன.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, திருமாவளவன், கேசி வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

    எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாளையும் தொடர்ந்து நடைபெறும். இன்றைய கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பங்கேற்கவில்லை. நாளைய கூட்டத்தில் சரத் பவார் மற்றும் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எதிர்க்கட்சிகள் முதல் கூட்டத்தில் 14 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்
    • கர்நாடகாவில் நடைபெறும் 2-வது கூட்டத்தில் 24 கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு

    மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. கூட்டணி என்றாலும் தனிப்பெரும்பான்மை என்பதால் பா.ஜனதா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த முறையும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

    மோடி ஹாட்ரிக் வெற்றி பெற்றால், அது நாட்டிற்கு ஆபத்து எனக் கூறிவரும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இதற்கான முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெறுகிறது. அதில் 14 கட்சிகள் இடம் பிடித்திருந்தன. இன்றும், நாளையும் கர்நாடகாவில் நடைபெற இருக்கும் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு போட்டியாக பா.ஜனதா நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை டெல்லியில் நடத்துகிறது. இதில் 30 கட்சிகள் கலந்து கொள்ளும் எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதாவின் இந்த திடீர் கூட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் ''பிரதமர் மோடி, பா.ஜனதா மலைத்துப் போய் உள்ளனர். பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் திடீரென தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து யோசித்துள்ளார்.

    அந்த கூட்டணிக்கு மூச்சு கொடுத்து உயிர்கொடுக்க முயற்சிக்கிறார். திடீரென, நாளை டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவே இதுவாகும்'' என்றார்.

    • இன்றும், நாளையும் கர்நாடக மாநிலத்தில் இருக்கக்கூடிய பெங்களூருவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது.
    • ஆபத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்காகத் தான் இந்தக் கூட்டம் நடைபெறுகிறதே தவிர வேறு அல்ல.

    சென்னை:

    காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பெங்களூரு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமர் மோடி தலைமையில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, ஏற்கனவே பீகார் மாநிலம், பாட்னாவில் எதிர்க்கட்சித்தலைவர் கூட்டத்தைக்கூட்டி அதில் சில முடிவுகளை எடுத்தோம்.

    அதைத்தொடர்ந்து, இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் கர்நாடக மாநிலத்தில் இருக்கக்கூடிய பெங்களூருவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில் 24 கட்சியினுடைய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். பீகாரிலும், தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலும் பி.ஜே.பி.-யை வீழ்த்துவதற்காக தொடர்ந்து கூட்டப்படக்கூடிய கூட்டம் இது.

    பி.ஜே.பி. ஆட்சிக்கு மிகப் பெரிய எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதனுடைய வெளிப்பாடுதான் இது. அமலாக்கத்துறை இன்றைக்கு அவர்களால் ஏவப்பட்டு, ஏற்கனவே வடமாநிலப் பகுதிகளில் அந்தப் பணிகளை செய்து கொண்டிருந்தவர்கள், தற்போது தமிழ்நாட்டிலும், அந்தப் பணியை தொடங்கி இருக்கிறார்கள்.

    ஆகவே, அதைப்பற்றியெல்லாம் கிஞ்சுற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் கவலைப்படவில்லை. இன்றைக்கு, உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கக்கூடிய மாண்புமிகு பொன்முடி இல்லத்தில், அமலாக்கத்துறையின் மூலமாக சோதனை நடத்தப்படுகிறது என்று சொன்னால், இந்த வழக்கை பொறுத்தவரையில், அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, புனையப்பட்ட பொய் வழக்கு இந்த வழக்கு. ஏறக்குறைய 13 ஆண்டு காலத்திற்கு முன்பு போடப்பட்ட வழக்கு. தொடர்ந்து 10 ஆண்டுகாலம் அ.தி.மு.க. தான் ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போதெல்லாம், இதைப்பற்றி எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை.

    அண்மையில்கூட பொன்முடி மீது கடந்த கால ஆட்சியாளர்களால் சுமத்தப்பட்டிருந்த இரண்டு வழக்குகளிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். ஆகவே, இந்த வழக்கைப் பொறுத்த வரையிலே சட்டரீதியாக அவர் இதனை நிச்சயமாக சந்திப்பார்.

    எது, எப்படி இருந்தாலும், வர இருக்கக்கூடிய பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்த வரையில், இதற்கெல்லாம் நிச்சயமாக மக்கள் பதில் வழங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஒரே வரியில் சொல்லவேண்டும் என்று சொன்னால், பீகாரிலும், கர்நாடக மாநிலத்திலும் இதைத்தொடர்ந்து இன்னும் பல மாநிலங்களில் நடைபெற விருக்கக்கூடிய இந்த கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்புவதற்காக, செய்து கொண்டிருக்கக்கூடிய தந்திரம் தான் தவிர, வேறல்ல. இதை எல்லாம் நிச்சயமாக எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய நாங்கள் சமாளிப்பதற்கு தயாராக இருக்கிறோம்.

    கேள்வி: உங்களுக்கு கொடுக்கக்கூடிய நெருக்கடியாக பார்க்கிறீர்களா?

    பதில்: ஏற்கனவே தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் ஆளுநர் தேர்தல் பிரச்சாரத்தை எங்களுக்காக நடத்திக் கொண்டிருக்கிறார். இப்போது அமலாக்கத்துறையும் சேர்ந்திருக்கிறது. ஆகவே, தேர்தல் வேலை எங்களுக்கு சுலபமாக இருக்கும் என்று தான் நான் கருதுகிறேன்.

    கே: கடந்த முறை நீங்கள் பீகார் சென்ற போது அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு நடந்தது, பிறகு இரண்டாவது முறை யாக பெங்களூர் செல்லும் போது அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு நடக்கிறது, இதை எப்படி பார்க்கிறீர்கள்?

    ப: இது எல்லாம் சகஜம், சர்வ சாதாரணம். மக்களை திசை திருப்புவதற்காக செய்யக்கூடிய நாடகம். இதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கே தெரியாதா. நீங்களே உங்கள் மனசாட்சியை கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே இது நியாயமா, இதை எதற்காக செய்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

    கே: பெங்களூருக்கு செல்கிறீர்கள், காவேரி விவகாரம் பற்றி பேசுவீர்களா?

    ப: காவேரி பிரச்சனை பொறுத்தவரையிலே, மேகதாது பிரச்சனை பொறுத்தவரையிலே என்றைக்கு கலைஞர் அதிலே ஒரு முடிவெடுத்து அந்தப் பணியை நிறைவேற்றி கொண்டிருந்தாரோ, அந்தப் பணியில் கிஞ்சிற்றும் மாறாமல் அதை கடைப்பிடிப்போம்.

    இந்தக் கூட்டம் என்பது, ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆட்சியை அப்புறப்படுத்துவதற்காக நடைபெறவுள்ள கூட்டம். காவேரி பிரச்சனை பற்றிய கூட்டம் அல்ல.

    இன்னும் சொல்லப் போனால், இப்போது இந்தியாவிற்கே ஆபத்து வந்திருக்கிறது, அந்த ஆபத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்காகத் தான் இந்தக் கூட்டம் நடைபெறுகிறதே தவிர வேறு அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு வரவில்லை
    • பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் அழைக்கவில்லை

    காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டம் கர்நாடகாவில் இன்றும் நாளையும் நடைபெற இருக்கிறது. இதற்காக 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்கள் கர்நாடக மாநிலம் புறப்பட்ட வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில், கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் ஹெச்.டி. குமாரசாமி கூறுகையில் ''எதிர்க்கட்சிகள் மதசார்பற்ற ஜனதா தளத்தை அவர்களின் ஒரு பகுதியாக கருதவே இல்லை. அதனால், மெகா கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் இருக்குமா? என்பதற்கான கேள்விக்கே இடமில்லை'' என்றார்.

    பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அழைப்பு வந்ததா? என்ற கேள்விக்கு, ''எங்களை அவர்கள் அழைக்கவில்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்'' என்றார்.

    • நாளை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
    • இன்றைய தினம் நடைபெற உள்ள விருந்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொள்ளவில்லை.

    சென்னை:

    எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். இதற்காக இன்று காலை 11.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு செல்கிறார். இன்று மாலையில் நடைபெறும் விருந்திலும், நாளை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். 2 நாள் கூட்டத்தை முடித்துக்கொண்டு பெங்களூருவில் இருந்து நாளை இரவு 9 மணிக்கு மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைகிறார்.

    பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் நடத்தும் 2 நாள் ஆலோசனை கூட்டத்தின் முதல் நாளான இன்று அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் விருந்தும், நாளை ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது.

    இன்றைய தினம் நடைபெற உள்ள விருந்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொள்ளவில்லை. நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மட்டும் கலந்துகொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
    • பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சியும் பங்கேற்கிறது.

    பெங்களூரு:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, கடந்த மாதம் 23-ம் தேதி காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பீகார் தலைநகர் பாட்னாவில் கூடி ஆலோசனை நடத்தினர். அதில் பாராளுமன்ற தேர்தலை ஓரணியில் திரண்டு எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பெங்களூரு தாஜ் வெஸ்ட் எண்டு ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    இதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள். அப்போது தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்களின் முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது.

    காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 24 கட்சிகள் பங்கேற்கின்றன.

    எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் ஓட்டலுக்கு முன்புறத்தில் தலைவர்களை வரவேற்கும் வகையில் அவர்களின் உருவ படங்கள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன. அந்த ஓட்டல் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, கூட்டணிக்கு என்ன பெயர் சூட்டுவது, குறைந்தபட்ச பொது செயல் திட்டங்களை உருவாக்குவது, ஒருவேளை எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் பிரதமராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த கூட்டம் நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை தற்போது நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.

    • மத்திய பா.ஜனதா அரசின் ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற இருக்கிறது.

    நெல்லை:

    மூத்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நல்லசிவத்தின் நூற்றாண்டு நினைவு நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

    அதன்படி நெல்லை, ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே அவரது நூற்றாண்டு விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் தலைமை குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

    நாளை மற்றும் நாளை மறுதினம் பெங்களூருவில் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. பா.ஜனதாவை வரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து கூட்டம் நடத்தப்படுகிறது.

    இதுவரை மணிப்பூரில் நடந்த கலவரத்தில் 150-க்கும் மேற்பட்ட நபர்கள் கொல்லப்பட்ட சூழலிலும் 36 லட்சம் மக்கள் தொகை கொண்ட மணிப்பூரில் இருந்து பல்லாயிரம் நபர்கள் வெளியிடத்திற்கு குடிபெயர்ந்த சூழலிலும் அங்கு நடக்கும் கலவரத்தை பாரத பிரதமர் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை.

    மணிப்பூரில் நடக்கும் மோதலுக்கு பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.-ன் அணுகுமுறை சரியில்லாதது தான் காரணம். இந்திய நாட்டில் பழங்குடியின மக்களுக்கென மாநில வாரியாக தனித்தனி சட்டங்கள் உள்ளது.

    யாரிடமும் எந்த கருத்தும் கேட்கப்படாமல் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சி ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை நியமனம் செய்து அங்குள்ள ஆட்சியை சீர்குலைக்கும் செயலை பா.ஜனதா செய்து வருகிறது. தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    விலைவாசி உயர்வு, விலையை கட்டுப்படுத்துவது போன்றவைகள் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. உணவு உற்பத்தி தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை தடுக்க மத்திய அரசு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

    ஆனால் தமிழகத்தில் மாநில அரசு தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் குறைந்த விலைகளில் தக்காளி விற்பனை செய்து வருவது வரவேற்கத்தக்கது.

    மத்திய பா.ஜனதா அரசின் ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற இருக்கிறது. வருகிற 23-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொள்கிறார்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த நோக்கம்.

    மாநிலத்திற்கு மாநிலம் அரசியல் கட்சிகளிடம் வேறுபாடுகள் இருந்தாலும் அகில இந்திய அளவில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதை ஒரே நோக்கமாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது.

    எத்தனை ஊழல் வழக்குகள் இருந்தாலும் பா.ஜ.க.வில் யாரேனும் சேர்ந்தால் அவர்கள் புனிதராகி விடுகிறார்கள். இப்படிப்பட்ட கேவலமான நடவடிக்கையை பா.ஜ.க. செய்து வருகிறது. மக்கள் அவர்களை கண்டிப்பாக நிராகரிப்பார்கள். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.

    இவர் அவர் கூறினார்.

    • சோனியா தலைமையில் நடக்கும் 2 நாள் கூட்டத்தில் பங்கேற்க இப்போது 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • கூட்டத்திற்கு வரும் தலைவர்களுக்கு சோனியா காந்தி நாளை விருந்து அளிக்க உள்ளார்.

    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது.

    பிரதமர் மோடிக்கு எதிராக அணி திரளும் வகையில், பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் 23-ந்தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்தது. அப்போது அதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 15 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இதன் 2-வது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நாளை நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடக்கும் 2 நாள் கூட்டத்தில் பங்கேற்க இப்போது 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    கூட்டத்திற்கு வரும் தலைவர்களுக்கு சோனியா காந்தி நாளை விருந்து அளிக்க உள்ளார். அதைத் தொடர்ந்து நாளை மறுதினம், எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்க உள்ளது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை பெங்களூரு புறப்பட்டு செல்கிறார். சோனியா காந்தி அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் அவர் பெங்களூரில் தங்கி இருந்து நாளை மறுநாள் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

    முதல் கூட்டம் பாட்னாவில் நடந்த போது பெரிய அளவில் விவாதங்கள் நடக்கவில்லை. ஒருமித்த கருத்துடன் பிரதமர் வேட்பாளரும் முடிவு செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் இப்போது நடைபெற உள்ள 2-வது ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி ஒற்றுமை, பிரசார உத்திகள் பிரதமர் வேட்பாளர் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    • முதல் ஆலோசனை கூட்டத்தில் டெல்லியின் அவசர சட்டம் தொடர்பாக காங்கிரசுக்கும், ஆம்ஆத்மி கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
    • பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்தும் வகையில் சோனியா காந்தி தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன.

    ஆனால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒருமித்த கருத்துடன் ஒன்று திரளுமா? என்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவுகிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைமையை ஏற்க சில மாநில கட்சி தலைவர்கள் தயங்குகிறார்கள்.

    எதிர்க்கட்சிகள் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளை ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் மேற்கொண்டார். அவரது தீவிர முயற்சியால் கடந்த மாதம் 23-ந்தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்தது.

    இதில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள் உள்பட 16 கட்சிகள் பங்கேற்றன.

    தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது என்று இந்த கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது கூட்டத்தை இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் பருவமழை காரணமாக அந்த கூட்டத்தை கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தை நாளையும் (13-ந்தேதி), நாளை மறுநாளும் (14-ந் தேதி) நடத்த முடிவு செய்து இருந்தனர். ஆனால் அந்த தேதியில் கூட்டம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு அனுப்பி உள்ளது. புதிதாக 8 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, கொங்குநாடு மக்கள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    பாட்னாவில் ஜூன் 23-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

    வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் வருகை தர வேண்டும். நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்.

    சோனியா காந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார். பாட்னா கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. பெங்களூருவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி எதிர்க்கட்சிகளுக்கு விருந்து அளிக்கிறார். பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்தும் வகையில் அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

    இந்த கூட்டத்தில் மாநில அளவில் கூட்டணிகளை உருவாக்குவது, நாடு முழுவதும் 450 தொகுதிகளில் பொது வேட்பாளர்களை நிறுத்துவது, குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுப்பது ஆகியவை குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

    முதல் ஆலோசனை கூட்டத்தில் டெல்லியின் அவசர சட்டம் தொடர்பாக காங்கிரசுக்கும், ஆம்ஆத்மி கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அவசர கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் ஆதரவை தெரிவிக்காவிட்டால் அடுத்த கூட்டத்தை புறக்கணிக்க போவதாக கெஜ்ரிவால் மிரட்டினார். அப்போது அவரை மம்தா பானர்ஜி, சரத்பவார் ஆகியோர் சமாதானப்படுத்தினர்.

    பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்க ஆம்ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் அழைப்பு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கலவரம் நடக்கும் மணிப்பூர் தலைநகர் இம்பால் போய் பார்க்கவில்லை.
    • பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பொறுத்தவரை ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

    மதுரை:

    பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மணிப்பூரில் நடைபெறும் மதக்கலவரம் நீடித்துக் கொண்டே செல்கிறது. அங்கு மனித உரிமைகள் நிறைய நடக்கிறது. மெய்தி எனும் இந்து சமுதாயம் சுமார் 50 சதவீதம் பேர் உள்ளனர். மாற்று சமுதாயத்தினர் அவர்களை முந்த முயற்சிக்கிறார்கள்.

    பிரதமர் மோடி அமெரிக்கா போவதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இது வருத்தம் அளிக்கிறது. கலவரம் நடக்கும் மணிப்பூர் தலைநகர் இம்பால் போய் பார்க்கவில்லை. பிரதமர் உடனே போய் கலவரத்தை அடக்க முயற்சி செய்ய வேண்டும்.

    பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பொறுத்தவரை ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. எல்லாரும் சேர்ந்து வந்தால் ஒற்றுமையாக செயல்பட்டால் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது. நரேந்திர மோடி பிரதமராக இருந்த காலத்தில் எதுவும் செய்யவில்லை.

    கோவில்கள் அனைத்தும் வெளிவர முயற்சி செய்து கொடுத்தோம். ஜாதி, மதம் மற்றும் அனைத்து இந்துக்களையும் ஒற்றுமையாக்க முயற்சி செய்தோம். இந்து ஒற்றுமைக்காக பா.ஜனதாவுக்கு ஓட்டு கிடைக்கும். பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்கு உள்ள ஜால்ரா போடுபவர்கள் கூறினார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. மோடி எதுவும் செய்யவில்லை என தொண்டர்கள் கூறுகிறார்கள்.

    வெள்ளைக்காரர்கள், முஸ்லிம்கள் நமது கலாச்சாரத்தை கெடுத்து விட்டு சென்றனர். அதை மீட்பதற்கும், மறுமலர்ச்சி ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என இந்துக்களிடம் எண்ணம் வந்துள்ளது. அதற்காக நமக்கு ஓட்டு கிடைக்கும்.

    மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க பெயர் வைப்பது குறித்து பாராளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது. பிரபுல் பட்டேல் என்னிடம் கூறினார். மதுரை விமான நிலைய திறப்பு விழா சமயத்தில் மேடையில் பிரபுல் பட்டேல் அறிவிக்க இருந்த நேரத்தில் ப.சிதம்பரம் அறிவிக்க விடாமல் தடுத்து விட்டார்.

    முத்துராமலிங்க தேவர், தேவர் என்பதை தவிர நாட்டுடைய விடுதலைக்காக போராடியவர். ராஜ குடும்பத்தை சேர்ந்தவர். மதுரை விமான நிலையத்திற்கு அவர் பெயர் வைக்காதது எனக்கு மிகவும் வருத்தம். இன்றைக்கு ஆட்சியில் இருந்தாலும் யாரும் ஆதரவு அளிக்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. யாரும் ஆதரிக்கவில்லை.

    இவர்கள் கடிதம் கொடுத்தால் பாராளுமன்றத்தில் பேசி மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க ஏற்பாடு செய்வேன். ஒருவருக்கு ஒருவர் பொறாமையில் பேசி செயல்படுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×