search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Opposittion"

    • இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் குறித்து வலியுறுத்தி பேசுவார் என தெரிகிறது.
    • கூட்டம் முடிந்ததும் 1-ந் தேதி இரவு சென்னை திரும்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்போதே தங்களை தயார்படுத்தி வருகிறது.

    பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பாக பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடி நிறுத்தப்படுகிறார். ஆனால் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்று இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.

    இந்த சூழலில் மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்பட 16 கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்தது. இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடந்தது. இந்த கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டது.

    இந்த கூட்டணியின் 3-வது கூட்டம் இன்றும், நாளையும் மும்பையில் நடைபெற உள்ளது. இதில் 16 கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்க வாய்ப்புள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அத்துடன் பிரதமர் வேட்பாளர் குறித்தும் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்ட வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

    மும்பையில், இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் குறித்து வலியுறுத்தி பேசுவார் என தெரிகிறது. கூட்டம் முடிந்ததும் 1-ந் தேதி இரவு அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.

    • பாரம்பரியமிக்க நம் நாட்டில் மேலை நாடுகளில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு முன்பே பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
    • மாணவர்கள் அந்த வாசகங்களை பின்பற்றி நடக்க வேண்டும்.

    பட்டமளிப்பு விழாவில் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத்தலைவர் பிபேக் டெப்ராய் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் இதுவரை இங்கு வந்ததில்லை. எனவே எனக்கு முதல் முறை. என்னை சிறப்பு விருந்தினராக அழைத்த கவர்னர் மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளருக்கு நன்றி. இமயம் முதல் குமரி வரை பல்வேறு வளங்களை இந்தியா பெற்றுள்ளது. மேலை நாடுகளில் பல்கலைகழகங்கள் உருவாவதற்கு முன்பே நாலந்தா, தக்சசீலம் போன்ற இடங்களில் பல்கலைகழகங்கள் இருந்தது. பாரம்பரியமிக்க நம் நாட்டில் மேலை நாடுகளில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு முன்பே பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் இந்தியா இருந்த போது ஆசியாவிலேயே முதல் பெண் பட்டதாரியாக 1983-ல் காதம்பரி என்பவர் பட்டம் பெற்றார். தற்போது அதிகளவில் பெண்கள் பட்டம் பெறுகின்றீர்கள்.

    உலக சுற்றுலாத்தலத்தில் இந்திய சுற்றுலா துறையால் அதிதி தேவோ பவ என்ற வாசகம் முழக்கமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வாசகம் இந்திய கலாச்சாரத்தையும், இந்து மதத்தையும் பற்றி பேசுகிறது. தைத்ரிய உபநிஷத்தில் வரும் மாத்ரு தேவோ பவ, பிதிர் தேவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ என்ற முழக்கங்கள் நம் தாய்,தந்தை, ஆசான், விருந்தினர்களை கடவுளாக கருத வேண்டும் என சொல்கிறது.

    மாணவர்கள் அந்த வாசகங்களை பின்பற்றி நடக்க வேண்டும். பட்டம் பெறுவோர் 20 வயதுடையவராக இருக்கிறீர்கள். நீங்கள் இனி பறந்து விரிந்து இருக்கும் உலகத்திற்கு செல்லப்போகிறீர்கள்.

    40 வயதில் உலகை முழுதும் தெரிந்து கொண்டு உங்களால் சாதனை படைக்க முடியும். மகிழ்ச்சி என்பது வெளி உலகில் எங்கிருக்கிறது என சொல்ல முடியாது. உங்களை நீங்கள் வென்றால் உலகை நீங்கள் வெற்றி பெறமுடியும்.

    2047-ல் உலகில் இந்தியா முன்னேறிய நாடாக இருக்கும். முன்னேறிய இளம் இந்தியாவை உருவாக்குவதில் இளம் பட்டதாரிகள் மிக முக்கிய பங்காற்ற வேண்டும். இந்தியாவின் பழங்காலம் பாரம்பரியமிக்கதாக உள்ளது. வருங்காலம் ஒளிமிகுந்த காலமாக அமைய உள்ளது.

    தற்போதைய சூழலில் நிச்சயமற்ற நிலை இருந்து வருகிறது. 2047-ல் இந்தியா உலகின் தலை சிறந்த நாடாக மாறுவதற்கான கட்டமைப்பு பணிகளை இளம் பட்டதாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இளம்பட்டதாரிகள் இந்த நாட்டிற்கு பல்வேறு பணிகளை திருப்பி அளிக்க வேண்டியதுள்ளது. சமூக பங்களிப்பை நீங்கள் நம் நாட்டிற்கு வழங்குவதற்கான நேரத்தை ஒதுக்கவேண்டும். நாடு ஒளிமிகுந்த பாதையை அடைய இளம்பட்டதாரிகள் தங்களது பங்களிப்பை செய்யவேண்டும். இப்போது பட்டம் வாங்கும் நீங்கள் 2047-ல் பட்டம் வழங்கக்கூடிய இடத்தில் இருக்கலாம். எதுவும் நடக்கலாம். சில நேரங்களில் திட்டமிடாததும் நடக்கும். ஆனால் மனதை தளர விடக்கூடாது. நீங்க தான் எதிர்கால இந்தியாவை கட்டமைப்பீர்கள். நீங்கள் தான் இளம் இந்தியா. உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் விமர்சனம்
    • வாரிசு அரசியலால் நாடு சீரழிந்துள்ளது. அவர்களுக்கு, அவர்களுடைய குடும்ப வளர்ச்சி மட்டுமே முக்கியம்.

    அந்தமான் போர்ட் பிளேயரில் வீர சாவர்கர் சர்வதேச விமான நிலைய முனையத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டில் ஊழலை ஊக்குவிப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுகின்றனர். சில கட்சிகள் தங்களின் குடும்பத்திற்கான வளர்ச்சியை மட்டுமே விரும்புகின்றன. 2024-ல் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர்.

    ஜனநாயகம் என்பது மக்கள். மக்களால். மக்களுக்காக. ஆனால், பரம்பரை அரசியல் கட்சிகளுக்கு அது குடும்பம். குடும்பத்தினரால், குடும்பத்தினருக்காக. முதலில் குடும்பம்தான். நாட்டிற்காக ஒன்றுமில்லை. இதுதான் அவர்களது முழக்கம்... அங்கே வெறுப்பு ஊழல், திருப்திபடுத்தும் அரசியல் உள்ளது.

    வாரிசு அரசியலால் நாடு சீரழிந்துள்ளது. அவர்களுக்கு, அவர்களுடைய குடும்ப வளர்ச்சி மட்டுமே முக்கியம். நாடடில் ஏழை மக்கள் குறித்து அல்ல.

    டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏறுவதற்கு முன் அந்தமானில் மூவர்ணகொடி ஏறி விட்டது. ஆனால் அடிமைத்தனத்தின் அடையாளம் சில இருந்தது. தீவுகளின் பெயர்களை மாற்றியதன் மூலம் அந்த அடையாளங்களை நாம் நீக்கி உள்ளோம்.

    ஊழலை ஊக்குவிப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் கூடி இருக்கிறார்கள். குடும்பத்திற்காக இருந்தது. குடும்பமாக இருக்கிறது. குடும்பத்திற்காக இருப்பது. தான் எதிர்க்கட்சிகளின் தராக மந்திரம். குடும்பத்திற்காக அரசியல் செய்வதே எதிர்க்கட்சிகளின் கொள்கையாக இருந்து வருகிறது.

    ஊழல் வழக்குகளை சந்தித்தாலும் தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சிகள் நற்சான்று வழங்குகின்றன.

    மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட வன்முறைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேச மறுக்கின்றன. இந்தியாவில் சில கட்சிகளின் சுய நல அரசியலால் பெரு நகரங்களின் வளர்ச்சி தடைபட்டு உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் பழைய அரசாங்கத்தின் தவறுகளை திருத்தி இருக்கிறோம். மக்களுக்காக புதியவசதி, வாய்ப்புகளை பாரதீய ஜனதா ஆட்சியில் ஏற்படுத்தி கொடுத்து வருகிறோம். இந்தியாவின் புதிய வளர்ச்சிக்கு வித்திட்டு இருக்கிறோம்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    ×