search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாட்டில் ஊழலை ஊக்குவிப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுகின்றனர்: பிரதமர் மோடி விமர்சனம்
    X

    நாட்டில் ஊழலை ஊக்குவிப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுகின்றனர்: பிரதமர் மோடி விமர்சனம்

    • பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் விமர்சனம்
    • வாரிசு அரசியலால் நாடு சீரழிந்துள்ளது. அவர்களுக்கு, அவர்களுடைய குடும்ப வளர்ச்சி மட்டுமே முக்கியம்.

    அந்தமான் போர்ட் பிளேயரில் வீர சாவர்கர் சர்வதேச விமான நிலைய முனையத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டில் ஊழலை ஊக்குவிப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுகின்றனர். சில கட்சிகள் தங்களின் குடும்பத்திற்கான வளர்ச்சியை மட்டுமே விரும்புகின்றன. 2024-ல் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர்.

    ஜனநாயகம் என்பது மக்கள். மக்களால். மக்களுக்காக. ஆனால், பரம்பரை அரசியல் கட்சிகளுக்கு அது குடும்பம். குடும்பத்தினரால், குடும்பத்தினருக்காக. முதலில் குடும்பம்தான். நாட்டிற்காக ஒன்றுமில்லை. இதுதான் அவர்களது முழக்கம்... அங்கே வெறுப்பு ஊழல், திருப்திபடுத்தும் அரசியல் உள்ளது.

    வாரிசு அரசியலால் நாடு சீரழிந்துள்ளது. அவர்களுக்கு, அவர்களுடைய குடும்ப வளர்ச்சி மட்டுமே முக்கியம். நாடடில் ஏழை மக்கள் குறித்து அல்ல.

    டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏறுவதற்கு முன் அந்தமானில் மூவர்ணகொடி ஏறி விட்டது. ஆனால் அடிமைத்தனத்தின் அடையாளம் சில இருந்தது. தீவுகளின் பெயர்களை மாற்றியதன் மூலம் அந்த அடையாளங்களை நாம் நீக்கி உள்ளோம்.

    ஊழலை ஊக்குவிப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் கூடி இருக்கிறார்கள். குடும்பத்திற்காக இருந்தது. குடும்பமாக இருக்கிறது. குடும்பத்திற்காக இருப்பது. தான் எதிர்க்கட்சிகளின் தராக மந்திரம். குடும்பத்திற்காக அரசியல் செய்வதே எதிர்க்கட்சிகளின் கொள்கையாக இருந்து வருகிறது.

    ஊழல் வழக்குகளை சந்தித்தாலும் தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சிகள் நற்சான்று வழங்குகின்றன.

    மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட வன்முறைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேச மறுக்கின்றன. இந்தியாவில் சில கட்சிகளின் சுய நல அரசியலால் பெரு நகரங்களின் வளர்ச்சி தடைபட்டு உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் பழைய அரசாங்கத்தின் தவறுகளை திருத்தி இருக்கிறோம். மக்களுக்காக புதியவசதி, வாய்ப்புகளை பாரதீய ஜனதா ஆட்சியில் ஏற்படுத்தி கொடுத்து வருகிறோம். இந்தியாவின் புதிய வளர்ச்சிக்கு வித்திட்டு இருக்கிறோம்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    Next Story
    ×