search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2047-ம் ஆண்டு உலகில் இந்தியா முன்னேறிய நாடாக இருக்கும்: பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத்தலைவர் பேச்சு
    X

    2047-ம் ஆண்டு உலகில் இந்தியா முன்னேறிய நாடாக இருக்கும்: பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத்தலைவர் பேச்சு

    • பாரம்பரியமிக்க நம் நாட்டில் மேலை நாடுகளில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு முன்பே பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
    • மாணவர்கள் அந்த வாசகங்களை பின்பற்றி நடக்க வேண்டும்.

    பட்டமளிப்பு விழாவில் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத்தலைவர் பிபேக் டெப்ராய் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் இதுவரை இங்கு வந்ததில்லை. எனவே எனக்கு முதல் முறை. என்னை சிறப்பு விருந்தினராக அழைத்த கவர்னர் மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளருக்கு நன்றி. இமயம் முதல் குமரி வரை பல்வேறு வளங்களை இந்தியா பெற்றுள்ளது. மேலை நாடுகளில் பல்கலைகழகங்கள் உருவாவதற்கு முன்பே நாலந்தா, தக்சசீலம் போன்ற இடங்களில் பல்கலைகழகங்கள் இருந்தது. பாரம்பரியமிக்க நம் நாட்டில் மேலை நாடுகளில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு முன்பே பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் இந்தியா இருந்த போது ஆசியாவிலேயே முதல் பெண் பட்டதாரியாக 1983-ல் காதம்பரி என்பவர் பட்டம் பெற்றார். தற்போது அதிகளவில் பெண்கள் பட்டம் பெறுகின்றீர்கள்.

    உலக சுற்றுலாத்தலத்தில் இந்திய சுற்றுலா துறையால் அதிதி தேவோ பவ என்ற வாசகம் முழக்கமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வாசகம் இந்திய கலாச்சாரத்தையும், இந்து மதத்தையும் பற்றி பேசுகிறது. தைத்ரிய உபநிஷத்தில் வரும் மாத்ரு தேவோ பவ, பிதிர் தேவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ என்ற முழக்கங்கள் நம் தாய்,தந்தை, ஆசான், விருந்தினர்களை கடவுளாக கருத வேண்டும் என சொல்கிறது.

    மாணவர்கள் அந்த வாசகங்களை பின்பற்றி நடக்க வேண்டும். பட்டம் பெறுவோர் 20 வயதுடையவராக இருக்கிறீர்கள். நீங்கள் இனி பறந்து விரிந்து இருக்கும் உலகத்திற்கு செல்லப்போகிறீர்கள்.

    40 வயதில் உலகை முழுதும் தெரிந்து கொண்டு உங்களால் சாதனை படைக்க முடியும். மகிழ்ச்சி என்பது வெளி உலகில் எங்கிருக்கிறது என சொல்ல முடியாது. உங்களை நீங்கள் வென்றால் உலகை நீங்கள் வெற்றி பெறமுடியும்.

    2047-ல் உலகில் இந்தியா முன்னேறிய நாடாக இருக்கும். முன்னேறிய இளம் இந்தியாவை உருவாக்குவதில் இளம் பட்டதாரிகள் மிக முக்கிய பங்காற்ற வேண்டும். இந்தியாவின் பழங்காலம் பாரம்பரியமிக்கதாக உள்ளது. வருங்காலம் ஒளிமிகுந்த காலமாக அமைய உள்ளது.

    தற்போதைய சூழலில் நிச்சயமற்ற நிலை இருந்து வருகிறது. 2047-ல் இந்தியா உலகின் தலை சிறந்த நாடாக மாறுவதற்கான கட்டமைப்பு பணிகளை இளம் பட்டதாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இளம்பட்டதாரிகள் இந்த நாட்டிற்கு பல்வேறு பணிகளை திருப்பி அளிக்க வேண்டியதுள்ளது. சமூக பங்களிப்பை நீங்கள் நம் நாட்டிற்கு வழங்குவதற்கான நேரத்தை ஒதுக்கவேண்டும். நாடு ஒளிமிகுந்த பாதையை அடைய இளம்பட்டதாரிகள் தங்களது பங்களிப்பை செய்யவேண்டும். இப்போது பட்டம் வாங்கும் நீங்கள் 2047-ல் பட்டம் வழங்கக்கூடிய இடத்தில் இருக்கலாம். எதுவும் நடக்கலாம். சில நேரங்களில் திட்டமிடாததும் நடக்கும். ஆனால் மனதை தளர விடக்கூடாது. நீங்க தான் எதிர்கால இந்தியாவை கட்டமைப்பீர்கள். நீங்கள் தான் இளம் இந்தியா. உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×