search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Ponmudy"

    • செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
    • பொன்முடி இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சியின்போது கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி செம்மண் குவாரிகளில் மணல் அள்ளியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக 2012-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பொன்முடி, மற்றும் அவரது மகன் கவுதமசிகாமணி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இதுதொடர்பாக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி ஏற்கனவே ஆஜரானார். அப்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை முடிவில் அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறையினர் கைது செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் விசாரணைக்கு பிறகு பொன்முடியை அமலாக்கத்துறையினர் விடுவித்தனர்.

    இந்த நிலையில் செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இதை ஏற்று பொன்முடி இன்று காலை 10.45 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக மீண்டும் அதிரடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அமலாக்கத்துறையினர் தாங்கள் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையிலேயே பொன்முடியிடம் 2-வது முறையாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • பொது பாடத்திட்டத்தில் எந்த தவறும் கிடையாது.
    • கல்வி தரத்தை மேம்படுத்த, துறை முதன்மை செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதையடுத்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பொது பாடத்திட்டத்தில் எந்த தவறும் கிடையாது. தமிழக கல்வி கொள்கை விரைவில் அமலுக்கு வரும்.

    புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை ஏற்றுக்கொள்வோம். அரியர் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் பொருந்தாது.

    கல்வி தரத்தை மேம்படுத்த, துறை முதன்மை செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

    நிரந்தர பதிவாளர்கள், நிரந்தர தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்களும் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விரிவாக பேசினார்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று அரசு பல்கலைக் கழக துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பொது பாடத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் துணைவேந்தர்களின் கருத்துக்களை அமைச்சர் பொன்முடி கேட்டறிந்தார்.

    இந்த கூட்டத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்தும் விளக்கி கூறப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒவ்வொரு கல்லூரிகளிலும் விழாவாக கொண்டாடுவது குறித்தும் இந்த கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி சில ஆலோசனைகளை வழங்கினார். பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விரிவாக பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமைச்சர் பொன்முடி வீட்டில் அரசியல் காரணத்திற்காக அமலாக்கத்துறை சோதனை செய்யவில்லை.
    • அரசியல் கொலைகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    சேலம்:

    சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆடிட்டர் ரமேஷ் நியாயமாக செயல்படக்கூடியவர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நியாயம் கேட்பவர். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவர் கொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகளாகியும் இதுவரை உண்மையான கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது

    இந்த விஷயத்தில் தமிழ்நாடு காவல்துறை சரியாக செயல்படவில்லை. முதலமைச்சர் படம் சித்தரிக்கப்பட்டால் உடனடியாக காவல்துறை கைது செய்கிறது. செந்தில் பாலாஜி ஆபரேஷன் செய்த பிறகு அவரது போட்டோக்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த விஷயத்திலும் அவரை வெளியில் காண்பிக்காத வகையில் போலீஸ் அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

    அமைச்சர் பொன்முடி வீட்டில் அரசியல் காரணத்திற்காக அமலாக்கத்துறை சோதனை செய்யவில்லை. அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி அந்த சோதனை நடந்திருக்கிறது.

    அரசியல் கொலைகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிராம நிர்வாக அதிகாரி உட்பட பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ளதை காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக பொன்முடியும், கவுதம சிகாமணியும் நேற்று மாலை ஆஜரானார்கள்.
    • சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின்னர் இரவு 10.10 மணியளவில் பொன்முடியும், அவரது மகனும் அமலாக்கத்துறை அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர்.

    சென்னை:

    செம்மண் குவாரி மூலம் சட்டவிரோதமாக பணம் ஈட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் சென்னையில் அமலாக்கத்துறையினர் கடந்த 2 நாட்களாக சுமார் 27 மணி நேரம் விசாரணை செய்தனர்.

    நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக பொன்முடியும், கவுதம சிகாமணியும் நேற்று மாலை 3.52 மணியளவில் ஆஜரானார்கள். அவர்களை மூன்றாவது தளத்துக்கு அழைத்துச் சென்று தனித்தனியாக அறைகளில் வைத்து விசாரித்தனர்.

    சுமார் ஒன்றரை மணி நேர விசாரணைக்கு பின்னர் அமைச்சர் பொன்முடி அங்கிருந்த 5-வது தளத்தில் உள்ள விசாரணை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    அவரிடம் செம்மண் குவாரி மூலம் சட்ட விரோதமாக பணம் ஈட்டியது, அந்த பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்தது ஆகியவற்றை பற்றி கேள்விகளை எழுப்பி பதில் பெற்றதாகத் தெரிகிறது. இருவரிடமும் தலா 100 கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டதாக தெரிகிறது.

    சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின்னர் இரவு 10.10 மணியளவில் பொன்முடியும், அவரது மகனும் அமலாக்கத்துறை அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர். அவர்களிடம் தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு அழைப்பாணை எதுவும் வழங்கப்படவில்லை என கூறப்பட்டது.

    • அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
    • எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் 2 நாள் பெங்களூரு சென்ற நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

    சென்னை:

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனைக்குப் பிறகு அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

    அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்குச் சென்றார். நேற்று மாலை விசாரணைக்கு மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி அமைச்சர் பொன்முடி மீண்டும் நேற்று மாலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கவுதம சிகாமணியும் விசாரணைக்கு ஆஜரானார்.

    சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்று, அமைச்சர் பொன்முடி, எம்.பி. கவுதம சிகாமணி இரவு வீட்டிற்கு புறப்பட்டனர்.

    இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி இன்று சந்தித்தார்.

    எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் 2 நாள் பெங்களூரு சென்ற நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

    முதலமைச்சர் பெங்களூருவில் இருந்தபோது தொலைபேசியில் அமைச்சர் பொன்முடியுடன் பேசிய நிலையில் தற்போது சந்தித்துள்ளார்.

    • சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்றது.
    • மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பவில்லை என அமலாக்கத்துறை தகவல்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணி முதல் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றது.

    சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்றது.

    விசாரணையின்போது அமைச்சர் பொன்முடியிடம் ஆம், இல்லை என்ற அடிப்படையில் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    மேலும், சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், பணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    அமைச்சர் பொன்முடியின் மகனும், எம்.பியுமான கௌதம சிகாமணியிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது.

    இதையடுத்து, அமைச்சர் பொன்முடி, எம்.பி. கௌதம சிகாமணி வீட்டிற்கு புறப்பட்டனர்.

    இதற்கிடையே, அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 7 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.81.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

    ரூ. 13 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    மேலும், அமைச்சர் பொன்முடியின் வங்க கணக்கில் இருந்த 41.9 கோடி ரூபாய் வைப்பு நிதி முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

    • சோதனையின் முடிவில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.
    • பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    சென்னை:

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடுகள், அலுவலகங்கள் என அவர் தொடர்புடைய 7 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பொன்முடியின் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. சோதனையின் முடிவில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. இன்றும் பொன்முடி விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் (PMLA) அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி. தொடர்புடைய 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது ரூ.81.7 லட்சம் பணம், ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. வங்கி கணக்கில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த ரூ.41.9 கோடி முடக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை கூறி உள்ளது.

    • பொன்முடி இன்று மாலை மீண்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.
    • எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திற்கு முன்பும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.

    தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு அவரது மகன் டாக்டர் கவுதமசிகாமணி எம்.பி. வீடு உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து சோதனை நடத்தினார்கள்.

    அமைச்சர் பொன்முடியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று இன்று அதிகாலை 3 மணி வரை விசாரணை மேற்கொண்டனர். இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் வழங்கினர். அதன்படி இன்று ஆஜரானார்.

    இந்நிலையில் கர்நாடகாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திற்கு முன்பும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.

    பாட்னா கூட்டத்திற்கு முன்பும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. எதிர்க்கட்சிகளிடையே பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டம் அவசியம். ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பதும் அவசியம்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
    • இன்று அமைச்சர் பொன்முடியுடன் அவரது மகனும் எம்.பி.யுமான கவுதம சிகாமணியும் விசாரணைக்கு ஆஜரானார்.

    சென்னை:

    தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்குப் பிறகு அமைச்சர் பொன்முடியை நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்குச் சென்றார்.

    இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கவுதம சிகாமணியும் விசாரணைக்கு ஆஜரானார்.

    • அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று இன்று அதிகாலை 3 மணி வரை விசாரணை மேற்கொண்டனர்.
    • அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர் துணிச்சலுடனும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு பொன்முடிக்கு அறிவுரை கூறினார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று பெங்களூரு சென்றிருந்தார். இன்றும் அங்குதான் உள்ளார்.

    இந்த நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு அவரது மகன் டாக்டர் கவுதமசிகாமணி எம்.பி. வீடு உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து சோதனை நடத்தினார்கள்.

    அமைச்சர் பொன்முடியை  அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று இன்று அதிகாலை 3 மணி வரை விசாரணை மேற்கொண்டனர். இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் வழங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். சோதனை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

    அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர் துணிச்சலுடனும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு பொன்முடிக்கு அறிவுரை கூறினார்.

    ஒன்றிய பா.ஜ.க. அரசின், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரிதீயாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் கழகம் என்றும் துணை நிற்கும்.

    இவ்வாறு பொன்முடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    • அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
    • சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 20 மணி நேரத்துக்கு பிறகு இன்று அதிகாலை 3 மணி அளவில் நிறைவடைந்தது. இதனிடையே நுங்கம்பாக்கத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் 7 மணி நேரம் நடத்திய விசாரணையும் நிறைவு பெற்றது. அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

    இதையடுத்து அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக அவரது வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

    சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நடைபெறும் முக்கிய ஆலோசனையில் மூத்த அமைச்சர்களான துரை முருகன், ஐ. பெரியசாமி, சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    ×