search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார் அமைச்சர் பொன்முடி- லைவ் அப்டேட்ஸ்
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார் அமைச்சர் பொன்முடி- லைவ் அப்டேட்ஸ்

    • செந்தில் பாலாஜி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்
    • அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் சோதனை

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தொடங்கினர். பொன்முடி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.

    சைதாப்பேட்டை வீட்டில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மேல் விசாரணைக்காக காரில் அழைத்துச் சென்றனர்.

    Live Updates

    • 19 July 2023 7:03 AM GMT

      சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி இன்று சந்தித்து பேசினார்.


    • 18 July 2023 1:28 PM GMT

      பொன்முடியின் வீட்டில் ரூ.81.7 லட்சம் பணம் பறிமுதல்.. ரூ.41.9 கோடி வைப்பு நிதி முடக்கம்

      அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

      பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் (PMLA) அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி. தொடர்புடைய 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது ரூ.81.7 லட்சம் பணம், ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. வங்கி கணக்கில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த ரூ.41.9 கோடி முடக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை கூறி உள்ளது.

    • 18 July 2023 11:28 AM GMT

      அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கவுதம சிகாமணியும் விசாரணைக்கு ஆஜரானார்.

    • 18 July 2023 4:56 AM GMT

      அமைச்சர் பொன்முடி இன்று மாலை ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில், தற்போது சைதாப்பேட்டை வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

    • 17 July 2023 10:51 PM GMT

      அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது என வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    • 17 July 2023 10:24 PM GMT

      செய்தியாளர்களிடம் பேசிய அமலாக்கத் துறை துணை இயக்குநர் கார்த்திக், அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை என தெரிவித்தார்.

    • 17 July 2023 9:50 PM GMT

      நுங்கம்பாக்கத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் 7 மணி நேரம் நடத்திய விசாரணையும் நிறைவு பெற்றது. அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

    • 17 July 2023 9:50 PM GMT

      சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் அமைந்துள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 20 மணி நேரத்துக்கு பிறகு அதிகாலை 3 மணி அளவில் நிறைவடைந்தது.

    • 17 July 2023 9:25 PM GMT

      விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 3 இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு

    • 17 July 2023 6:48 PM GMT

      விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் அமலாக்கத்துறையை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    Next Story
    ×