search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜ.க. இதுபோன்று தொடர்ந்து செய்தால் கர்நாடக நிலைதான் நாடு முழுவதும் ஏற்படும்- ஆர்.எஸ்.பாரதி
    X

    பா.ஜ.க. இதுபோன்று தொடர்ந்து செய்தால் கர்நாடக நிலைதான் நாடு முழுவதும் ஏற்படும்- ஆர்.எஸ்.பாரதி

    • அமைச்சர் பொன்முடியை சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை.
    • அமலாக்கத்துறை வழக்குகளில் இதுவரை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதா?

    சென்னை:

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை நடத்தும் சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் மோடிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன. முதல் கட்டமாக பாட்னாவில் நடந்தபோது இதேபோல் தான் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை போட்டார்கள்.

    2-வது கட்டமாக இன்றும், நாளையும் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுவதால் ஏற்பட்டுள்ள எரிச்சலாலும், மக்கள் கவனத்தை திசை திருப்பவும் அமலாக்கத்துறையை ஏவிவிட்டு சோதனை நடத்துகிறார்கள். இந்த சோதனைகளுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்.

    என்ன வழக்குக்காக சோதனை நடத்துகிறார்கள் என்பதே தெரியவில்லை. அவரது வக்கீல் என்ற முறையில் அதை தெரிந்து கொள்ளும் உரிமை எங்களுக்கு உள்ளது. ஆனால் எங்களை உள்ளேயே அனுமதிக்கவில்லை. அமலாக்கத்துறைக்கு இவ்வளவு அதிகாரம் இருக்கிறதா என்பதே சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில் உள்ளது.

    இதேபோல் தான் கர்நாடகத்தில் சோதனை நடத்தினார்கள். ஆனால் டி.கே.சிவகுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    அமலாக்கத்துறை 100 வழக்கு போட்டால் அதில் 2 வழக்குகளில் கூட குற்றம் நிரூபிக்கப்படுவதில்லை. மோடியின் இந்த நடவடிக்கைகளால் கர்நாடகத்தில் ஏற்பட்ட நிலை தான் பா.ஜனதாவுக்கு ஏற்படும். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் தான் உள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை படுதோல்வியை சந்திப்பார்கள். ஒரு சர்வேயில் 140 முதல் 160 இடங்களில் தான் பா.ஜனதா வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாதிரி மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் நாங்கள். மிசாவையே சந்தித்தவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×