என் மலர்tooltip icon

    இந்தியா

    பொன்முடி வீட்டில் சோதனை- கெஜ்ரிவால் கண்டனம்
    X

    பொன்முடி வீட்டில் சோதனை- கெஜ்ரிவால் கண்டனம்

    • தமிழக உயர் கல்வி அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை கண்டிக்கிறோம்.
    • எதிர்க்கட்சிகளை உடைத்து அனைவரையும் பயமுறுத்த முயற்சிக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழக உயர் கல்வி அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை கண்டிக்கிறோம். அவர்கள் எதிர்க்கட்சிகளை உடைத்து அனைவரையும் பயமுறுத்த முயற்சிக்கிறார்கள். அமலாக்கத்துறை மூலம் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை உங்களால் (பா.ஜனதா) பயமுறுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×