search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனை"

    • தமிழக காங்கிரசின் நிலைப்பாட்டை டெல்லி மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • அடுத்தகட்டமாக இரு கட்சி குழுவினரும் சந்தித்து பேச தயாராகி வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் காங்கிரஸ்-தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.

    கடந்த தேர்தலில் இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த தேர்தலில் அதைவிட ஒன்றிரண்டு தொகுதிகள் கூடுதலாக கேட்க வேண்டும். முடியாத பட்சத்தில் 9 தொகுதிகள் குறையாமல் கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரசின் நிலைப்பாட்டை டெல்லி மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒன்றிரண்டு தொகுதிகளை தி.மு.க. மாற்றி கேட்டால் மாற்று தொகுதிகள் எதை கேட்பது என்பதற்கும் 9 தொகுதிகள் பட்டியலை வழங்கி இருக்கிறார்கள்.

    காங்கிரஸ் சார்பில் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 33 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க.விலும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக இரு கட்சி குழுவினரும் சந்தித்து பேச தயாராகி வருகிறார்கள்.

    இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஜய்குமார் இன்று மாலை 6 மணிக்கு சத்தியமூர்த்தி பவன் வருகிறார். அப்போது கே.எஸ்.அழகிரி மற்றும் வார் ரூம் பொறுப்பாளர்கள் செந்தமிழ், சுமதி அன்பரசு, அகரம் கோபி, மீரா, உமா, ரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    நாளை (சனி) காலையில் தேர்தல் பணிக்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திலும் தி.மு.க.விடம் எத்தனை தொகுதிகள் கேட்பது? எந்தெந்த தொகுதிகளை கேட்பது? என்பது பற்றி கருத்து கேட்கிறார்.

    இதன் அடிப்படையில் விரைவில் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • டெல்லியில் இன்றும், நாளையும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
    • ஒவ்வொரு மாநில தேர்தல் அதிகாரியிடமும் வாக்காளர் பட்டியல் ஏற்பாடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவிக் காலம் வருகிற மே மாதம் நிறைவு பெற உள்ளது.

    இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்த வேண்டியது உள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இதற்கான தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக் கான அட்டவணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதியில் வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதற்கு முன்னதாக நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

    இதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மாநிலத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்கான பூர்வாங்கப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலம் வாரியாக தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன் ஏற்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலவரம் ஆகியன குறித்து அந்தந்த மாநிலத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    மக்களவைத் தேர்தலுக்கான முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையக் குழுவினர் தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட காரணங்களால், தேர்தல் ஆணையக் குழுவினரின் வருகை தள்ளிப்போயுள்ளது.

    இதனிடையே, அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. டெல்லியில் இன்றும், நாளையும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த விவரங்களை அந்தந்த மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகள் விளக்க உள்ளனர். குறிப்பாக பாதுகாப்பு, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, சட்டம்-ஒழுங்கு நிலவரம் ஆகியவை முழுமையாக ஆய்வு செய்யப்படும்.

    மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏதேனும் முக்கிய பண்டிகைகள் வருகிறதா என்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாநில சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் தேதி அட்டவணை தயாரிக்க இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    மேலும் ஒவ்வொரு மாநில தேர்தல் அதிகாரியிடமும் வாக்காளர் பட்டியல் ஏற்பாடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இந்தக்கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு டெல்லி சென்றுள்ளார்.

    • மத்திய பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • தேர்தல் பொறுப்புகளை ஒருவரே செய்யாமல் அனைவரும் பகிர்ந்து பணியாற்ற வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதாவில் மாநில நிர்வாகிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

    புதிய நிர்வாகிகளின் முதல் கூட்டம் நடந்தது. பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. தலைமை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்டு, ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு, சிவசங்கர் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் புதுவை மாநில பா.ஜனதா பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேசியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    முத்ரா திட்டம், கியாஸ் திட்டம் அனைத்து ஏழை மக்களையும் சென்றடைந்துள்ளது. புதுவையில் 3.5 லட்சம் பேர் மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.

    அவர்களை சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் நாம் பணியாற்ற வேண்டும். அதற்கேற்ப வியூகங்களை வகுக்க வேண்டும். புதுவையில் பா.ஜனதா வேட்பாளர்தான் போட்டியிடுவார்.

    எனவே பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற நிர்வாகிகள் இரவு, பகலாக உழைக்க வேண்டும். தேர்தல் பொறுப்புகளை ஒருவரே செய்யாமல் அனைவரும் பகிர்ந்து பணியாற்ற வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து பூத்களிலும் பா.ஜனதாவை பலப்படுத்த வேண்டும். மீண்டும் மத்தியில் பா.ஜனதா ஆட்சி மலரும் போது நாட்டில் அபரிதமான வளர்ச்சி இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மத்திய அரசு செய்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 மாநிலங்களிலும் காங்கிரஸ் பெற்ற வெற்றி, தோல்வி அந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.
    • தமிழக காங்கிரஸ் நிலவரம் பற்றி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முழுமையான அறிக்கை தயாரித்து உள்ளார்.

    பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா கூட்டணியை மேலும் வலிமைப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதற்கு வசதியாக 10 மாநிலங்களில் செல்வாக்கு மிக்க மாநில கட்சிகளுடன் சுமூகமான தொகுதி பங்கீட்டை நடத்தி முடிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    தமிழ்நாடு, பீகார், உத்தர பிரசேதம், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், காஷ்மீர், பஞ்சாப், மராட்டியம், டெல்லி ஆகிய மாநிலங்களில் சுமூகமான தொகுதி பங்கீடு செய்தால் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் பொது வேட்பாளரை நிறுத்த முடியும் என்று கருதுகிறது.

    எனவே இந்த 10 மாநிலங்களிலும் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும், மாநில கட்சிகளுக்கு எத்தனை தொகுதி கொடுக்க வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்ய தீர்மானித்துள்ளனர். இதற்காக டெல்லியில் வருகிற 29, 30-ந் தேதிகளில் 2 நாட்கள் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம் உள்பட 10 மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. 10 மாநில தலைவர்களிடமும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்த உள்ளனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 மாநிலங்களிலும் காங்கிரஸ் பெற்ற வெற்றி, தோல்வி அந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. கடந்த தேர்தலில் போட்டியிடும் இடங்கள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் மாநில கட்சிகளிடம் தொகுதிகளை பெற பட்டியல் தயாரிக்கப்படும்.

    இதற்காக முழு அளவில் அறிக்கைகள் தயாரித்து தயாராக வருமாறு மாநில தலைவர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக காங்கிரஸ் நிலவரம் பற்றி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முழுமையான அறிக்கை தயாரித்து உள்ளார்.

    டெல்லியில் 29, 30-ந் தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்கும்போது தமிழக காங்கிரசின் செல்வாக்கு மற்றும் எத்தனை தொகுதிகளில் போட்டியிட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது பற்றி கே.எஸ்.அழகிரி விரிவாக தெரிவிப்பார். அதன் அடிப்படையில் தி.மு.க.விடம் தொகுதிகளை பெறுவது பற்றி காங்கிரஸ் மேலிடம் இறுதி முடிவு செய்யும்.

    • வாக்கு எண்ணிக்கை முடிந்து 1 வாரம் ஆகியுள்ள நிலையில் 3 மாநிலத்துக்கு பா.ஜனதா இன்னும் முதல்-மந்திரிகளை தேர்வு செய்யவில்லை.
    • சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா பொறுப்பாளர்களான ஓம்மாத்தூர், மத்திய மந்திரி மான்சுக் மாண்டவியா, நிதின் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    ராய்ப்பூர்:

    5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 3 மாநிலத்தில் அமோக வெற்றி பெற்றது. மத்தியபிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

    ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட் சியை கைப்பற்றியது. வாக்கு எண்ணிக்கை முடிந்து 1 வாரம் ஆகியுள்ள நிலையில் 3 மாநிலத்துக்கு பா.ஜனதா இன்னும் முதல்-மந்திரிகளை தேர்வு செய்யவில்லை.

    இந்நிலையில் சத்தீஸ்கர் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராய்ப்பூரில் இன்று பிற்பகல் நடக்கிறது.

    கட்சியின் மேலிட பார்வையாளர்களான மத்திய மந்திரிகள் அர்ஜூன் முண்டா, சர் பானந்தா சோனவால் மற்றும் பொதுச்செயலாளர் துஷ்யந்த்குமார் கவுதம் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா பொறுப்பாளர்களான ஓம்மாத்தூர், மத்திய மந்திரி மான்சுக் மாண்டவியா, நிதின் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட 54 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்று புதிய முதல்வரை தேர்வு செய்கிறார்கள். ஒருமித்த கருத்துடன் முதல்-மந்திரி தேர்வு நடைபெறும் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

    ராமன்சிங், ரேணுகாசிங், அருண்சிங் ஆகியோரின் பெயர்கள் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    • இருவருக்கும் துணை முதல்-மந்திரி பதவி வழங்கலாமா என்று கட்சி மேலிடம் ஆலோசித்தது.
    • பாட்டி விக்ரமார்காவுக்கு துணை முதல் மந்திரி பதவி கிடைக்கலாம் என அந்த கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்த மாநிலத்தில் துணை முதல் மந்திரி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. துணை முதல் மந்திரி போட்டியில் பாட்டி விக்ரமார்கா மற்றும் உத்தம் ரெட்டி ஆகியோர் உள்ளனர்.

    இவர்கள் இருவருக்கும் துணை முதல்-மந்திரி பதவி வழங்கலாமா என்று கட்சி மேலிடம் ஆலோசித்தது.

    ஆனால் தலித் ஒருவரை துணை முதல்-மந்திரி ஆக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி பாட்டி விக்ரமார்காவுக்கு துணை முதல் மந்திரி பதவி கிடைக்கலாம் என அந்த கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.
    • மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரியாக இருக்கிறார்.

    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.

    மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

    3 மாநிலத்தில் பெற்ற வெற்றியால் பா.ஜனதா மிகுந்த உற்சாகம் அடைந்து உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற ஆர்வத்தில் உள்ளது.

    இந்த நிலையில் 3 மாநிலத்துக்கும் புதுமுக முதல்-மந்திரிகள் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்-மந்திரி தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அவரது வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மாநில தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 4½ மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நீடித்தது. கட்சி தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்வதற்காக புதுமுகம் அவசியம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதனால் புதுமுக முதல்-மந்திரிகள் தேர்வு செய்யப் படலாம் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

    மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரியாக இருக்கிறார். அவருக்கு 5-வது முறையாக முதல்-மந்திரி பதவி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் மேலிடம் அவருக்கு மீண்டும் பதவி கொடுக்க தயக்கம் காட்டி வருகிறது.

    • தற்போது நிலவும் சீதோ ஷண நிலையால் பு துக்கோட்டை மா வட்டத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் ஒரு சில பகுதிகளில் ஆனைக் கொம்பன் தாக்குதல் கா ணப்படுகிறது.
    • இப்பூச்சி நெற்பயிரின் தூர்களின் குருத்து பகுதியை தாக்கிய இலையானது வெங்காய இலை போன்று மாற்றி விடும்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மா வட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் உள்ள ஆ னைக்கொம்பன் தாக்கு தலைக் கட்டுப்படுத்திடவும் அதிக மகசூல் அடைந்திடவும் வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அ றிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    தற்போது நிலவும் சீதோ ஷண நிலையால் பு துக்கோட்டை மா வட்டத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் ஒரு சில பகுதிகளில் ஆனைக் கொம்பன் தாக்குதல் கா ணப்படுகிறது. இப்பூச்சி நெற்பயிரின் தூர்களின் குருத்து பகுதியை தாக்கிய இலையானது வெங்காய இலை போன்று மாற்றி விடும்.

    இந்த பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவை போல் சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். இதனுடைய புழுப்பருவம் பயிர்களை தாக்குவதனால் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் தோன்றும். இந்த கிளைப்புகள் வெண்மையாகவோ அல்ல து இளஞ்சிவப்பு நிறமாக வோ குழல் போன்று வெங்காய இலையைப் போல காணப்படும். இதை பார்ப்பதற்கு யானையின் கொம்பை போல் இருப்ப தனால் இது ஆனைக் கொம்பன் என்று அ ழைக்கப்படுகிறது.

    தாய்ப்பூச்சியானது நீள மான உருளை வடிவிலான ப ளப்பளப்பான முட்டை களை இலையின் அடிப்ப குதியில் இடும். இதிலிருந்து வெளியாகும் புழுக்கள் நெற்பயிரின் குருத்துக்களை துளைத்து குழல்களாக மாற்றி விடும். இதனால் பயி ரில் நெற்கதிர்கள் உருவா காமல் விவசாயிகளுக்கு ம கசூல் இழப்பு ஏற்படும். நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் தான் இந்த புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும்.

    எனவே, வயல்களை க ளைகள் இல்லாமல் தூய்மையாக வைத்தி ருப்பதனாலும், புற ஊதா விளக்குபொறிகளை வைத்து கவர்ந்தும் அழிக்க லாம். தழைச்சத்து உரங்களை பரிந்து ரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்தினால் இதன் தாக்கு தலில் இருந்து பாது காக்கப்படும். மேலும், இப்பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலை அளவை அதாவது (10 இலைக்கு ஒரு இலை வெங்காயத்தாள் ) விட பாதிப்பு அதிகமாகும்போது மகசூல் இழப்பு ஏற்படும்.

    இதை கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லி மருந்து களான கார்போசல்பான் 25 சதவீதம் பிப்ரோனில் 5 சதவீதம் எஸ்.சி - 400 மி.லி ஆகிய மருந்துகளில் ஏதே னும் ஒன்றை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம். மேலும் கூடுதல் விபரங்க ளுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரி வாக்க மையத்தினை அணு கிட கேட்டுக் கொள்ளப்படு கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மண்டபத்தில் தி.மு.க. வார்டு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பாடுபட அறிவுரை வழங்கப்பட்டது.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., வழிகாட்டுதலின் பேரில் நகர் தி.மு.க. சார்பில் வருகின்ற 2024 நாடாளு மன்ற தேர்தல் தொடர்பான வார்டு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு அவைத்தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். பேரூராட்சி கவுன்சிலர் சாதிக் பாட்ஷா வரவேற்றார். கவுன்சிலர்கள் முகமது மீரா சாகிப், வாசிம் அக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மண்டபம் பேரூர் கழக செயலாளர் அப்துல் ரகு மான் மரைக்காயர் கூட்டத் தில் பேசுகையில், ராமநாத புரம் மாவட்டத்தில் வரு கின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு அனைத்து வார்டு செயலாளர்களும் பாடுபட வேண்டும் என்று பேசினார்.மாவட்ட துணை அமைப் பாளர் கே.ஜி.சுகுமார், முன் னாள் பொருளாளர் குலாம், மாவட்ட பிரதிநிதி பகுருதீன், ஐ.டி. விங்க் இளையராஜா, வெள்ளைச்சாமி, பேபி, வார்டு செயலாளர்கள் தில்லை நிஷாந்த், கஜினி, ரவி, களஞ்சியம், கருப்பசாமி உட்பட பலர் பங்கேற்றனர். நிர்வாகி அயுப்கான் நன்றி கூறினார்.

    • காங்கிரசை பொறுத்தவரை 10 தொகுதிகள் குறையக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
    • முக்கியமாக சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம்.

    சென்னை:

    காங்கிரஸ் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

    கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக இடம் பெற்றுள்ள தி.மு.க. இந்த கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று கருதுகிறது.

    எனவே அதற்கு ஏற்ப கூட்டணி கட்சிகளின் பலத்தை எடை போட்டு ஒவ்வொரு தொகுதியையும் ஒதுக்க திட்டமிட்டுள்ளது. கட்சிகளின் வெற்றிக்கு அடித்தளமாக இருப்பது பூத் கமிட்டிகள்தான். எனவே கூட்டணி கட்சிகளின் பூத் கமிட்டிகளின் பலத்தையும் எடை போடுகிறது.

    காங்கிரசை பொறுத்தவரை 10 தொகுதிகள் குறையக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் சென்னை வந்த சோனியா, பிரியங்காவிடமும் கூடுதல் இடங்கள் கேட்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சோனியா கட்சியை வலுப்படுத்தும் படி கூறினார்.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகள் அமைக்கவும், ஏற்கனவே இருக்கும் இடங்களில் பலப்படுத்தவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவிட்டார். இந்த பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது.

    தேர்தலுக்கான செயல் திட்டங்களை வகுக்க மாவட்ட தலைவர்கள் கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி இன்று மாவட்ட தலைவர்களுடன் கே.எஸ்.அழகிரி ஆலோசனை நடத்தினார்.

    முன்னதாக பூத் கமிட்டிகள் நிலவரம் பற்றி கே.எஸ்.அழகிரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    இன்றைய கூட்டத்தில் முக்கியமாக இதைப்பற்றி தான் ஆலோசிக்கிறோம். எங்கள் கையை நாங்கள் பலப்படுத்துகிறோம். பூத் கமிட்டிகளை பொறுத்த வரை குறைந்தபட்சம் ஒரு தலைவர் அவரின் கீழ் 9 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஏற்கனவே 60 சதவீதம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுவிட்டன. இன்றும் பலர் ஒப்படைப்பார்கள்.

    எனவே 85 சதவீதம் வரை நிறைவடையும் என்று கருதுகிறோம். 100 சதவீத பூத் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று ராகுல் உத்தரவிட்டுள்ளார். எனவே அந்த இலக்கை நோக்கி பணியை தீவிரப்படுத்து வோம்.

    முக்கியமாக சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்ளவும் திட்ட மிட்டுள்ளோம் என்றார்.

    கூட்டத்தில் சென்னை மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், டெல்லிபாபு, சிவராஜசேகரன், முத்தழகன், ரஞ்சன்குமார், அடையாறு துரை, ஊட்டி கணேஷ், கே..டி.உதயம் உள்பட 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    மாநில நிர்வாகிகள் கோபண்ணா, உ.பலராமன், தளபதி பாஸ்கர், அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் வடக்கு தொகுதியில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வரும் 25 மற்றும் 26ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
    • ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தாசில்தார் மகேஸ்வரன் தலைமை வகித்தார்.

    திருப்பூர்: 

    திருப்பூர் வடக்கு தொகுதியில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வரும் 25 மற்றும் 26ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. சிறப்பு முகாமுக்கு, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தயாராகும் வகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தாசில்தார் மகேஸ்வரன் தலைமை வகித்தார்.

    தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ரம்யா மற்றும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர். வாக்காளரிடம் படிவங்களை கொடுத்து, பூர்த்தி செய்து பெறுவது, தேவையான ஆதார ஆவணங்களை பெற்று இணைப்பது. ஆன்லைனில் அவ்விவரங்களை பதிவேற்றம் செய்யும் முன் சரிபார்க்க வேண்டும். சிறப்பு முகாம் நாட்களில், ஓட்டுச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. 

    • நீலகிரி மாவட்டசெயலாளர் கப்பச்சிவினோத் தலைமை தாங்கினார்
    • மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைசெயலாளர் பாலநந்தகுமார் பங்கேற்பு

    ஊட்டி,

    குன்னூர் சட்டமன்றத்துக்கு உட்பட்ட அனைத்து நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சிகள் பூத் கமிட்டி புத்தகங்களை நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நகர செயலாளர் சரவணகுமார் ஏற்பாட்டில் நீலகிரி மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளளரும், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளருமான பொன்ராஜ் ஆய்வு செய்தார்.

    இதில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தேனாடு லட்சுமணன், பொதுக்குழ உறுப்பினர் மாதன் மற்றும் மாநில, மாவட்ட சார்பணி மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகரிய செயலாளர், பேரூராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    ×