search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 state elections"

    • வாக்கு எண்ணிக்கை முடிந்து 1 வாரம் ஆகியுள்ள நிலையில் 3 மாநிலத்துக்கு பா.ஜனதா இன்னும் முதல்-மந்திரிகளை தேர்வு செய்யவில்லை.
    • சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா பொறுப்பாளர்களான ஓம்மாத்தூர், மத்திய மந்திரி மான்சுக் மாண்டவியா, நிதின் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    ராய்ப்பூர்:

    5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 3 மாநிலத்தில் அமோக வெற்றி பெற்றது. மத்தியபிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

    ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட் சியை கைப்பற்றியது. வாக்கு எண்ணிக்கை முடிந்து 1 வாரம் ஆகியுள்ள நிலையில் 3 மாநிலத்துக்கு பா.ஜனதா இன்னும் முதல்-மந்திரிகளை தேர்வு செய்யவில்லை.

    இந்நிலையில் சத்தீஸ்கர் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராய்ப்பூரில் இன்று பிற்பகல் நடக்கிறது.

    கட்சியின் மேலிட பார்வையாளர்களான மத்திய மந்திரிகள் அர்ஜூன் முண்டா, சர் பானந்தா சோனவால் மற்றும் பொதுச்செயலாளர் துஷ்யந்த்குமார் கவுதம் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா பொறுப்பாளர்களான ஓம்மாத்தூர், மத்திய மந்திரி மான்சுக் மாண்டவியா, நிதின் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட 54 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்று புதிய முதல்வரை தேர்வு செய்கிறார்கள். ஒருமித்த கருத்துடன் முதல்-மந்திரி தேர்வு நடைபெறும் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

    ராமன்சிங், ரேணுகாசிங், அருண்சிங் ஆகியோரின் பெயர்கள் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    • இருவருக்கும் துணை முதல்-மந்திரி பதவி வழங்கலாமா என்று கட்சி மேலிடம் ஆலோசித்தது.
    • பாட்டி விக்ரமார்காவுக்கு துணை முதல் மந்திரி பதவி கிடைக்கலாம் என அந்த கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்த மாநிலத்தில் துணை முதல் மந்திரி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. துணை முதல் மந்திரி போட்டியில் பாட்டி விக்ரமார்கா மற்றும் உத்தம் ரெட்டி ஆகியோர் உள்ளனர்.

    இவர்கள் இருவருக்கும் துணை முதல்-மந்திரி பதவி வழங்கலாமா என்று கட்சி மேலிடம் ஆலோசித்தது.

    ஆனால் தலித் ஒருவரை துணை முதல்-மந்திரி ஆக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி பாட்டி விக்ரமார்காவுக்கு துணை முதல் மந்திரி பதவி கிடைக்கலாம் என அந்த கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • சனாதனம் ஒழிக்கப்பட வேண்டிய வியாதி என்றார் அமைச்சர் உதயநிதி
    • 3 மாநிலங்களில் சென்ற தேர்தலை விட அதிகம் இடங்களை காங்கிரஸ் இழந்தது

    செப்டம்பர் 2 அன்று ஒரு விழாவில் பேசிய தமிழக அமைச்சரும், தி.மு.க. முக்கிய தலைவருமான உதயநிதி, இந்து மத கோட்பாடுகளில் ஒன்றான சனாதன தர்மத்தை குறித்து பேசுகையில், "சனாதன தர்மம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டும் அல்ல; டெங்கு, மலேரியா போன்று ஒழிக்கப்பட வேண்டியது" என பேசினார்.

    சர்ச்சையை கிளப்பிய உதயநிதியின் பேச்சிற்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆதரிக்கும் விதமாக கருத்து தெரிவித்தனர்.

    பா.ஜ.க.வினர் உதயநிதிக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினர்.

    ஆனால், தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், இது குறித்து திட்டவட்டமான கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    இதை தொடர்ந்து, இந்து மத உணர்வினை புண்படுத்தியதாக உதயநிதி மீது அவமதிப்பு வழக்கு பல மாநிலங்களில் தொடரப்பட்டது. இது தொடர்பாக அவர் மீதான ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் 4 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின.

    இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து, பா.ஜ.க., பெரும்பான்மை எண்ணிக்கைக்கும் அதிகமாக இடங்களை பெற்றுள்ளது.

    ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. ம.பி.யில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு முயன்ற காங்கிரஸ் சென்ற தேர்தலை காட்டிலும் மேலும் பல இடங்களை பா.ஜ.க.விற்கு தாரை வார்த்துள்ளது.

    தெலுங்கானாவில் மட்டும் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியை வென்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.

    3 மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு தி.மு.க. அமைச்சர் உதயநிதியின் சனாதானம் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சுதான் காரணம் என சமூக வலைதளங்களில் கருத்து பரவி வருகிறது.

    இதை உறுதி செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    "சனாதன தர்மத்தை எதிர்த்து தலைவர்கள் பேசியதை காங்கிரஸ் தடுக்க தவறியது. இது தேர்தலில் எதிர்வினை ஆற்றியுள்ளது. அந்த சாபக்கேட்டின் காரணமாக காங்கிரஸ் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது. மகாத்மா காந்தியின் கட்சியாக கருதப்பட்ட காங்கிரஸ் சனாதன எதிர்ப்பு கட்சியாக பார்க்கப்பட்டு விட்டது" என காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான ஆசார்ய பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளரான தெஹ்சின் பூனாவாலா, "சனாதன தர்மத்தை தரக்குறைவாக பேசியதும் அதை காங்கிரஸ் தடுக்காததும் தவறு. அதனால் காங்கிரஸ் வெற்றியை இழந்தது" என தெரிவித்தார்.

    இதே கருத்தை வலியுறுத்தும் விதமாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில், "சனாதனத்தை தரக்குறைவாக பேசினால் அதற்கு எதிர் விளைவுகள் நிச்சயம் இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.

    தென் மாநிலங்களை காட்டிலும் வட மாநிலங்களில் இந்து மதத்தை உணர்வுபூர்வமாக அணுகும் வழக்கம் உள்ள நிலையில் சனாதனம் குறித்து தி.மு.க.வினரின் நிலைப்பாட்டை காங்கிரஸ் தடுக்க தவறியதால்தான், அதன் தலைவர்களின் தீவிர பிரசாரங்களையும் கடந்து பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளதாக சில பயனர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

    அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5-மாநில தேர்தல்கள் பார்க்கப்பட்ட நிலையில், 3 மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு கிடைத்துள்ள வெற்றியும், காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள தோல்வியும், கூட்டணிகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • 2 தேர்தல் பணியாளர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தனர்.
    • 100 வாக்காளர்களுக்கு 3 போலீசார் என்ற வகையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 7-ந்தேதி தொடங்கி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

    அதன்படி மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கும், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் முதல் கட்டமாக 20 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 7-ந்தேதி (இன்று) ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த இரு மாநிலங்களிலும் கடந்த 2 வாரங்களாக விறுவிறுப்பான தேர்தல் பிரசாரம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை பிரசாரம் ஓய்ந்தது. நேற்று ஓட்டுப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

    இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மிசோரம் மாநிலத்தில் அதிகாலை முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடி முன்பு நீண்ட வரிசையில் நிற்க தொடங்கிவிட்டார்கள். 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியதும் ஆர்வமுடன் வாக்களித்து சென்றனர்.

    மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 8.57 லட்சம் பேர் வாக்கு உரிமை பெற்றுள்ளனர். அவர்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்காக 40 தொகுதிகளிலும் 1,274 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    இந்த வாக்குச்சாவடிகளில் 30 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டு இருந்தன. சர்வதேச எல்லை பகுதி அருகே இருப்பதால் அந்த 30 வாக்குச்சாவடிகளிலும் நேற்றே மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதனால் இன்று காலை மிசோரம் மாநில மக்கள் அச்சமின்றி வாக்களிக்க சென்றதை காண முடிந்தது. மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 9 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுப்பதிவின் போது வன்முறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மிசோரம் மாநிலத்தை இணைக்கும் மற்ற மாநில எல்லைகள் அனைத்தும் இன்று காலை சீல் வைக்கப்பட்டன.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் இன்று 20 தொகுதிகளுக்கும், வருகிற 17-ந்தேதி 70 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாகவும் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று ஓட்டுப்பதிவு நடந்து வரும் 20 தொகுதிகளில் 12 தொகுதிகள் மாவேயிஸ்டுகள் மிக மிக அதிகம் இருக்கும் தொகுதிகளாகும்.

    இதனால் இந்த 12 தொகுதிகளிலும் வரலாறு காணாத அளவுக்கு இன்று மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குறிப்பாக பஸ்தர் என்ற பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள 600 வாக்குச்சா வடிகளில் சுமார் 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் சத்தீஸ்கரில் மட்டும் ஓட்டுப்பதிவு நேரம் மாற்றப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு திட்ட மிட்டபடி 20 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது.

    மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவுக்கு முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக நாராயணப்பூர், தாந்தே வாடா, கோண்டா, மிஜப்பூர், காங்கேர் உள்பட 10 தொகுதி களில் மட்டும் பிற்பகல் 3 மணிக்கே ஓட்டுப்பதிவை முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மீதமுள்ள 10 தொகுதி களிலும் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கரில் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் கடந்த சனிக்கிழமை மாவோயிஸ்டுகள் தாக்கியதில் பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார். நேற்று மீண்டும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 தேர்தல் பணியாளர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் இன்றும் சுக்மா மாவட்டத்தில் உள்ள தொண்டமார்க் பகுதியில் மாவோயிஸ்டுகள் கண்ணி வெடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

    இதனால் இன்று காலை பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. சத்தீஸ்கரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 20 தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களை தேர்வு செய்ய 40.78 லட்சம் பேருக்கு வாக்குரிமை உள்ளது.

    இவர்களுக்காக 5 ஆயிரத்து 304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கரில் வாக்காளர்கள் மீது தாக்குதல் நடத் தப்படக்கூடாது என்பதற்காக பதட்டமான பகுதிகளில் மிக மிக அதிகமான பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 100 வாக்காளர்களுக்கு 3 போலீசார் என்ற வகையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    மிசோரம் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளனர். அங்கு ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கும், எதிர்க்கட்சிகளான ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பாரதிய ஜனதா இடையே பலமுனை போட்டி நிலவுகிறது. கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஆளும் மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளன.

    அதுபோல சத்தீஸ்கரில் பூபேஸ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதாவுக்கு இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. அங்கு கருத்து கணிப்புகள் காங்கிரசுக்கு சாதகமாக உள்ளன. இன்று மாலை இரு மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும்.

    மற்ற மாநிலங்களில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் டிசம்பர் 3-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என ராகுல் கூறினார்
    • ஆட்சிக்கு மீண்டும் வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என உறுதியளித்தார்

    இந்தியாவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நவம்பரில் வெவ்வேறு தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தல்களுக்கான முடிவுகள், டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    அடுத்த வருடம், இந்தியாவிற்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த 5 மாநில தேர்தலை அதற்கு முன்னோட்டமாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன. எனவே இதில் வெல்ல தீவிர பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன.

    இதன் ஒரு பகுதியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ராகுல் காந்தி ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு தற்போது வழங்கப்படும் காப்பீட்டுத்தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். நிலமில்லாத கூலி தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை, தற்போது வழங்கப்படும் ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். இது குறித்து நான் முதல்வர் பூபேஷ் பாகேலுடன் கலந்து ஆலோசித்து விட்டுத்தான் இந்த வாக்குறுதியை அளிக்கிறேன். அது மட்டுமல்ல, ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 2018ல் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றி விட்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகள் முன்பு போல் தங்கள் நிலங்களை விற்காமல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு ராகுல் கூறினார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் முதல்வர் பூபேஷ் பாகேல், துணை முதல்வர் சிங் தியோ, உள்துறை அமைச்சர் டம்ரத்வாஜ் சாகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    5 மாநில தேர்தல்களில் மக்களுக்கு வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிடாமல் தேர்தல் பொதுக்கூட்டங்களில் வெளிப்படுத்தும் யுக்தியை தற்போது காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
    • இதில் வெற்றிபெற பா.ஜ.க.வும், காங்கிரசும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

    பெங்களூரு:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து, 5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    5 மாநில தேர்தல் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. 5 மாநிலங்களிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

    பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் எரிச்சலடைந்துள்ளனர். பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

    அசோக் கெலாட்டும், பூபேஷ் பாகேலும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

    சிவராஜ் சிங் சவுகான் காரணமாக எம்.பி.யில் பிரச்சினைகள் உள்ளன. மக்கள் அவருக்கு எதிராக உள்ளனர்.

    எனவே, 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் அரசு நிச்சயம் அமையும் என எதிர்பார்க்கிறோம், அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும் என தெரிவித்தார்.

    5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மோடி மாயாஜாலம் என்ற கருத்து தகர்ந்துவிட்டது என ய்ஷ்வந்த் சின்கா கூறியுள்ளார். #PMModi #YashwantSinha #AssemblyElectionResults2018
    கொல்கத்தா:

    பா.ஜனதா முன்னாள் தலைவர் யஷ்வந்த் சின்கா. இவர் பிரதமர் நரேந்திர மோடி மீதான அதிருப்தி காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகினார்.

    தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து யஷ்வந்த் சின்கா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    5 மாநில தேர்தல் முடிவுகள் மோடி மாயாஜாலம் என்ற கருத்தை தகர்த்துவிட்டது. இது பாராளுமன்ற தேர்தலுக்காக எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள்வதற்கு உந்துதலாக இருக்கும்.



    2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு தேர்தலுக்கு முன்பாக தேசிய அளவிலான கூட்டணி ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் இரு முனைப்போட்டி ஏற்படுவதுடன் பா.ஜனதாவுக்கு எதிரான வாக்குகள் சிதறுவது தவிர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMModi #YashwantSinha #AssemblyElectionResults2018
    5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கூறுகையில், புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது என தெரிவித்துள்ளார். #2018electionresults #Kamalhassan
    சென்னை:

    ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானா, மிசோரமில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றிக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது என பதிவிட்டுள்ளார். #2018electionresults #Kamalhassan
    ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக இல்லாததால், இதன் தாக்கம் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. #Sensex #5StateElection #ElectionResults2018
    மும்பை:

    5 மாநிலங்களில் நடந்த ஓட்டு எண்ணிக்கையில் பா.ஜனதாவுக்கு எதிராகவும், காங்கிரசுக்கு சாதகமாகவும் முடிவுகள் அமைந்துள்ளன. இது பங்கு சந்தையிலும் எதிரொலித்தது. ஏற்கனவே கருத்துகணிப்புகளில் முடிவுகள் பா.ஜனதாவுக்கு சாதகமாக இல்லாததைத் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்று 714 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. இது கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான சரிவாகும்.

    நேற்று 35,673 புள்ளிகளுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மந்தமாகவே சென்று இறுதியில் 34,959 புள்ளிகளில் இருந்தது.

    இதன்மூலம் மும்பை சென்செக்ஸ் நேற்று 714 புள்ளிகள் (2 சதவீதம்) சரிந்தது. இது கடந்த அக்டோபர் மாதம் 11-ந் தேதிக்கு பிறகு அதிகபட்ச வீழ்ச்சி ஆகும்.

    தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில் இன்றும் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா காரணமாக ரூபாய் மதிப்பும் சரிந்தது. தற்போது 1 டாலருக்கு நிகராக 71.56 ரூபாயாக உள்ளது.


    அதேபோல் மும்பை பங்குச் சந்தை மிகப்பெரிய சரிவுடன் தொடங்கி உள்ளது. தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இதனால் மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தின் துவக்கத்தில் 200 புள்ளிகள் வரை சரிவை சந்தித்தது. அதன்பின்னர் 500 புள்ளிகள் வரை சரிந்து, பின்னர் வர்த்தகம் ஏற்றம் பெற்றது. 11 மணியளவில் 47 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் ஆனது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையிலும் இறங்குமுகத்தில் தொடங்கிய வர்த்தகம் பின்னர் படிப்படியாக எழுச்சியடைந்தது. 11 மணி நிலவரப்படி நிப்டி 17 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் ஆனது.

    தேர்தல் முடிவுகள் மிகவும் நெருக்கமாக, யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் வந்தாலோ, அல்லது பாஜக தோல்வி அடைந்தாலோ பங்கு சந்தை இன்னும் பெரிய பாதிப்பை சந்திக்கும். இதனால் தற்போது பங்குச்சந்தை நிபுணர்கள் மிகுந்த கவனத்துடன் அரசியல் மாற்றங்களை கவனித்து வருகிறார்கள். #Sensex #5StateElection #ElectionResults2018 
    ×