என் மலர்

  செய்திகள்

  மோடி மாயாஜாலம் தகர்ந்து விட்டது - யஷ்வந்த் சின்கா
  X

  மோடி மாயாஜாலம் தகர்ந்து விட்டது - யஷ்வந்த் சின்கா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மோடி மாயாஜாலம் என்ற கருத்து தகர்ந்துவிட்டது என ய்ஷ்வந்த் சின்கா கூறியுள்ளார். #PMModi #YashwantSinha #AssemblyElectionResults2018
  கொல்கத்தா:

  பா.ஜனதா முன்னாள் தலைவர் யஷ்வந்த் சின்கா. இவர் பிரதமர் நரேந்திர மோடி மீதான அதிருப்தி காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகினார்.

  தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து யஷ்வந்த் சின்கா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

  5 மாநில தேர்தல் முடிவுகள் மோடி மாயாஜாலம் என்ற கருத்தை தகர்த்துவிட்டது. இது பாராளுமன்ற தேர்தலுக்காக எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள்வதற்கு உந்துதலாக இருக்கும்.  2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு தேர்தலுக்கு முன்பாக தேசிய அளவிலான கூட்டணி ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் இரு முனைப்போட்டி ஏற்படுவதுடன் பா.ஜனதாவுக்கு எதிரான வாக்குகள் சிதறுவது தவிர்க்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார். #PMModi #YashwantSinha #AssemblyElectionResults2018
  Next Story
  ×