search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consultancy"

    • அதிக அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பெருநகரமாக இருந்தாலும் கூட அதற்கான எந்திரங்களை இறக்குமதி செய்யவேண்டிய நிலையிலேயே திருப்பூர் இருக்கிறது.
    • தொழிலை முன்னெடுத்து செல்லும் முயற்சியாக ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    திருப்பூா்:

    பின்னலாடை உற்பத்தியில் பல்வேறு நிலைகளான நிட்டிங், சாய ஆலை, பதப்படுத்துதல், பினிஷிங், எம்ப்ராய்டரி, பிரிண்டிங், தையல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எந்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை களைய உள்நாட்டிலேயே பின்னலாடை எந்திர உதிரிபாகங்களை தயாரிக்க ஏற்றுமதியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறுகையில், திருப்பூரில் ரூ.34 ஆயிரத்து 350 கோடி பின்னலாடை ஏற்றுமதி, ரூ.30 ஆயிரம் கோடி அளவிலான உள்நாட்டு வர்த்தகம், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்பட அதிக அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பெருநகரமாக இருந்தாலும் கூட அதற்கான எந்திரங்களை இறக்குமதி செய்யவேண்டிய நிலையிலேயே திருப்பூர் இருக்கிறது.

    பாதுகாப்புத்துறை மற்றும் சந்திராயன்-3 செயற்கைகோள் ஆகியவற்றின் பங்களிப்பிற்காக எந்திரங்களுக்கு தேவையான உபகரணங்கள் தயாரிப்பதற்காக, அரசு தேர்வு செய்த நகரம் கோவை ஆகும்.

    பின்னலாடை தொழில் துறைக்கு தேவையான நிட்டிங், சாய ஆலை, பதப்படுத்துதல், பினிஷிங், எம்பிராய்டரி, பிரிண்டிங், தையல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு தேவையான அனைத்து வகையான எந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளான எந்திரங்களின் விலை உயர்வு, அதற்கான அதிக முதலீடு, எந்திரங்கள் வந்து சேர்வதில் காலதாமதம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை நீக்கும் முயற்சியாகவும், முதல் கட்டமாக எந்திரங்களின் உதிரி பாகங்கள் தயாா் செய்ய கவனம் செலுத்துவதில் தொடங்கி அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

    நிட்மா சங்கத்தின் தலைவர் அகில் எஸ்.ரத்தினசாமி பேசும்போது, தொழில்துறை உள்நாட்டு வர்த்தகத்தில் இருந்து ஏற்றுமதிக்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும் எந்திர உதிரி பாகங்கள் வாங்குவதிலும் அதற்கான செயல்பாடுகளும் நாம் வெளிநாட்டையே எதிர்நோக்கி இருக்கும் நிலை மாறி தொழிலை முன்னெடுத்து செல்லும் முயற்சியாக ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    • மேல்சபை தொகுதி ஒதுக்க வலியுறுத்த வேண்டும் என விவாதிக்கப்பட்டது.
    • தேர்தல் பணிகள், வாக்குச்சாவடி முகவர்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்டமாக தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. கடந்த தேர்தலில் 2 தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை கூடுதலாக 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலக் குழு கூட்டம் நடந்தது. அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும். ஒரு மேல்சபை தொகுதி ஒதுக்க வலியுறுத்த வேண்டும் என விவாதிக்கப்பட்டது.

    மேலும் தேர்தல் பணிகள், வாக்குச்சாவடி முகவர்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. கடந்த தேர்தலை விட அதிக ஓட்டுகள் பெறவும், தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு முழுமையாக வேலை செய்வது எனவும் முடிவு செய்தனர். அடுத்த வாரம் நடைபெறும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது இக்கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவை தெரி விக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

    • தமிழக காங்கிரசின் நிலைப்பாட்டை டெல்லி மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • அடுத்தகட்டமாக இரு கட்சி குழுவினரும் சந்தித்து பேச தயாராகி வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் காங்கிரஸ்-தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.

    கடந்த தேர்தலில் இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த தேர்தலில் அதைவிட ஒன்றிரண்டு தொகுதிகள் கூடுதலாக கேட்க வேண்டும். முடியாத பட்சத்தில் 9 தொகுதிகள் குறையாமல் கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரசின் நிலைப்பாட்டை டெல்லி மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒன்றிரண்டு தொகுதிகளை தி.மு.க. மாற்றி கேட்டால் மாற்று தொகுதிகள் எதை கேட்பது என்பதற்கும் 9 தொகுதிகள் பட்டியலை வழங்கி இருக்கிறார்கள்.

    காங்கிரஸ் சார்பில் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 33 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க.விலும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக இரு கட்சி குழுவினரும் சந்தித்து பேச தயாராகி வருகிறார்கள்.

    இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஜய்குமார் இன்று மாலை 6 மணிக்கு சத்தியமூர்த்தி பவன் வருகிறார். அப்போது கே.எஸ்.அழகிரி மற்றும் வார் ரூம் பொறுப்பாளர்கள் செந்தமிழ், சுமதி அன்பரசு, அகரம் கோபி, மீரா, உமா, ரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    நாளை (சனி) காலையில் தேர்தல் பணிக்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திலும் தி.மு.க.விடம் எத்தனை தொகுதிகள் கேட்பது? எந்தெந்த தொகுதிகளை கேட்பது? என்பது பற்றி கருத்து கேட்கிறார்.

    இதன் அடிப்படையில் விரைவில் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மனுவை விசாரித்த நீதிபதிகள் மது விற்பனை நேரத்தை அரசு குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
    • நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ரமேஷ் மீண்டும் கோர்ட்டில் முறையிட்டார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை செயல்படுகிறது.

    இந்த மது விற்பனை நேரத்தை குறைக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், 'மதுபான விற்பனை நேரத்தை மதியம் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை குறைக்க வேண்டும் என்றும் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மது விற்பனை நேரத்தை அரசு குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனாலும் இது நடைமுறைக்கு இன்னும் வரவில்ல.

    இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ரமேஷ் மீண்டும் கோர்ட்டில் முறையிட்டார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் உள்ளதா? என்பதை உதவி சொலி சிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன் தலைமையிலான குழுவினர் டாஸ்மாக் கடைகளில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவுகளை பிறப்பித்தனர்.

    இதுபற்றி அக்டோபர் 23-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தும் வகையில், மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைக்க அரசு ஆலோசித்து வருகிறது. அனேகமாக மதியம் 2 மணியில் இருந்து 10 மணி வரை கடை திறக்கும் நேரத்தை மாற்றி அமைக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான சாதக, பாதகங்களை அரசு விரிவாக ஆலோசித்து வருகிறது.

    • சங்கராபரணி ஆற்றின் அருகே செஞ்சி நகரில் இருந்து மழை நீர் செல்லும் இடத்தில் மழை நீர் தேங்குகிறது.
    • ஒன்றிய அவை தலைவர் வாசு உட்பட பலர் உடன் இருந்தனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி பகுதியில் புதிய பாலங்கள் கட்டுவது சம்பந்தமாக அதிகா ரிகளுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆலோசனை நடத்தினார். செஞ்சி பேருராட்சி 18- வது வார்டில் சக்கராபுரம் - பொன்பத்தி செல்லும் பிரதான சாலையில் பொன்பத்தி ஏரி உபரி நீர் செல்லும் மேம்பாலம் உடைந்து சேதமடைந்துள்ளது. இதே போல் செஞ்சி சங்கராபரணி ஆற்றின் அருகே செஞ்சி நகரில் இருந்து மழை நீர் செல்லும் இடத்தில் மழை நீர் தேங்குகிறது. இந்த 2 இடங்க ளிலும் புதிய பாலங்கள் கட்டுவது சம்பந்தமாக அதிகாரிகளுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் செயல் அலுவலர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சுப்பிரமணியன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அஞ்சாஞ்சேரி கணேசன், நகர செயலாளர் கார்த்திக், துணை செயலாளர் செயல்மணி, கவுன்சிலர் மோகன், தொண்டரணி பாஷா, ஒன்றிய அவை தலைவர் வாசு உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • கட்ஆப் மதிப்பெண் 160- ல் இருந்து 170-க்குள் எடுத்தவர்கள் எண்ணிக்கையில் கடந்த ஆண்டுக்கும், தற்போதும் எந்த மாற்றமும் இல்லை.
    • கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு விரும்பிய தரமான கல்லூரிகளும், பாடப்பிரிவுகளும் கிடைப்பது கடினம்.

    சென்னை:

    என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் கட்ஆப் மதிப்பெண் நிலவரம் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப் பிரகாஷ் காந்தி கூறியதாவது:-

    கடந்த ஆண்டில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 278 பேருக்கு என்ஜினீயரிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 பேருக்கு தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி கடந்த ஆண்டை விட 20 ஆயிரம் பேர் வரை கூடுதலாக கவுன்சிலிங்கில் பங்கேற்கின்றனர். அதனால் பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரிகள் தேர்வில் போட்டி அதிகரித்துள்ளது.

    மொத்தம் 195-ல் இருந்து 170-க்குள் கட்ஆப் மதிப் பெண்ணை ஒப்பிட்டால் கடந்த ஆண்டை விட குறைந்த பட்சம் 2 ஆயிரம் பேர் வரை இந்த ஆண்டு அதிகமாக கவுன்சிங்கில் பங்கேற்கின்றனர்.

    அதனால் 170-க்கு மேல் கட்ஆப் பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டை போன்றே கல்லூரிகள், பாடப்பிரிவுகள் கிடைக்கும்.

    கட்ஆப் மதிப்பெண் 160- ல் இருந்து 170-க்குள் எடுத் தவர்கள் எண்ணிக்கையில் கடந்த ஆண்டுக்கும், தற்போதும் எந்த மாற்றமும் இல்லை. அதனால் கடந்த ஆண்டு கிடைத்தது போன்ற கல்லூரிகள், பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு கிடைக்கும். 150-ல் இருந்து 160 பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டை விட கட்ஆப் அளவு சற்று அதிகரிக்கும்.

    ஆனால் 100-க்கு மேல் 30 ஆயிரம், 120-க்கும் மேல் 25 ஆயிரம், 140-க்கு மேல் 11 ஆயிரம் என கடந்த ஆண்டை விட அதிகம் பேர் உள்ளதால் இந்த கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு விரும்பிய தரமான கல்லூரிகளும், பாடப்பிரிவுகளும் கிடைப்பது கடினம்.

    இதற்கு தமிழக என்ஜினீயரிங் கவுன்சிலிங் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள 4 ஆண்டு கட்ஆப் மதிப்பெண்ணுக்கு கிடைத்த கல்லூரி விபரங்களை பார்த்து கொள்வதும் நல்லதாகும்.

    பிளஸ்-2 பொதுத் தேர்வில் கணித வினாத்தாள் கடினம் என்பதால் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் தேர்ச்சி விகிதம் குறையவில்லை. எனவே கட்ஆப் அதிகரித்து என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் போட்டியும் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் ஜுன் 20-ந்தேதி வரை நேரடி முறையில் நடைபெற உள்ளது.
    • இன்றும், நாளையும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான சேர்க்கை நடைபெறும்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (திங்கட் கிழமை) தொடங்கியது.

    தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளன. அவற்றில் சேர 2 லட்சத்து 44 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்தனர். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் ஜுன் 20-ந்தேதி வரை நேரடி முறையில் நடைபெற உள்ளது.

    இன்றும், நாளையும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான சேர்க்கை நடைபெறும். பொது கலந்தாய்வு முதல் கட்டமாக ஜூன் 1 முதல் 10-ந்தேதி வரையும் 2-ம் கட்டமாக ஜூன் 12 முதல் 20-ந்தேதி வரையும் நடைபெறும்.

    தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மாணவர்களின் செல்போன் எண், மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி வாயிலாக கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. பிளஸ் 2 மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களுக்கு பாடப் பிரிவுகள் ஒதுக்கப்பட உள்ளன.

    கூடுதல் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், சந்தேகங்களுக்கு விண்ணப்பித்த கல்லூரிகளை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    • நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது.
    • விண்ணப்பித்த மாணவிகள் அனைவரும் காலை 9 மணிக்கு பங்கேற்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி முதல்வா் பால்கிரேஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியா் சோ்க்கைக்கான மொத்த இடங்கள் 970. இவற்றில் முதலாம் மற்றும் 2-ம் கட்ட கலந்தாய்வில் சோ்க்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 720 ஆகும். தற்போது காலியாக உள்ள மீதமுள்ள இடங்கள் 250.

    இந்தச் சோ்க்கை இடங்களுக்கு கல்லூரி வளாகத்தில் 3-ம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டியல் துறை ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவிகள் அனைவரும் காலை 9 மணிக்கு பங்கேற்க வேண்டும்.

    கலந்தாய்வுக்கு வரும் மாணவிகள் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை ஆகியவற்றின் மூலச் சான்றிதழ் மற்றும் இரு நகல்களைக் கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டும். சோ்க்கை இடம் உறுதியான பிறகு கட்டணம் செலுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் முதல் கட்ட மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 8-ந் தேதி தொடங்கி , 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • விபரங்களை கல்லுாரி இணையதளமான tkgac.in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    கடலூர்:

    விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், முதற்கட்ட மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி முதல்வர் ராஜவேல் வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    , 2022- 23ம் கல்வியாண்டில், இளநிலை மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு, வருகிற 8-ந் தேதி தொடங்கி , 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. 8ம் தேதியன்று சிறப்பு பிரிவினருக்கும், 10-ந் தேதி சுழற்சி 1, அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதம் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகியவற்றுக்கும் நடக்கிறது. 11-ந் தேதி காலை சுழற்சி 2ல் அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதம், கணினி அறிவியல் மற்றும் சுழற்சி 1, வணிக நிர்வாகம், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும், மாலையில் சுழற்சி 2, வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும், 12-ந் தேதி வரலாறு மற்றும் பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும், 13-ந் தேதி தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் அனைத்து ஆவணங்களின் அசல், அதன் 3 நகல்கள், 3 புகை ப்படங்கள் மற்றும் சேர்க்கை கட்டணம் ஆகிவற்றை கொண்டுவர வேண்டும். மேலும் தரவரிசை மற்றும் சேர்க்கை விபரங்களை கல்லுாரி இணையதளமான tkgac.in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அறிவிப்பில் கூறப்ப ட்டுள்ளது.

    ×